'work-life balance' - எப்படி சமாளிப்பது?ஒவ்வொரு Gen Z பெண்ணும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!

women
women
Published on

பெண்கள் தங்களின் குடும்பம், வீட்டு பொறுப்புகள், மற்றும் தொழில்முறை பயணத்தைச் சமாளிப்பதில் மிகவும் திறமையானவர்கள். அதிலும், குடும்பம், குழந்தைகள், பெற்றோர் மற்றும் வேலை அனைத்தையும் ஒரே நேரத்தில் சமாளிப்பதற்கு தனி திறமை வேண்டும் என்றே சொல்லலாம். இந்நிலையில், வேலைக்கு செல்லும் குடும்ப பெண்கள் வீட்டையும், அலுவலக வேலையும் வெற்றிகரமாக சமாளிப்பதற்கான சில வழிகளை இங்கே வாசிக்கலாம்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்:

ஒவ்வொரு நாளும் காலை 10 நிமிடம் ஒதுக்கி, 'இன்று என்னென்ன செய்ய வேண்டும்?' என்று ஒரு அட்டவணை தயாரித்தால், வேலைகளை எளிதாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். முக்கியமான வேலைகளை ஆரம்பத்திலேயே முடிக்க திட்டமிடுவது நல்லது.

குடும்பத்தினரிடம் உதவி கேட்க தயங்க வேண்டாம்:

சில பெண்கள் எல்லாவற்றையும் தாமாகவே செய்ய வேண்டும் என நினைப்பது உண்டு. ஆனால், வேலை சுமையை குறைக்க மற்றவர்கள் உதவியையும் பெற வேண்டும். கணவர், பிள்ளைகள், பெற்றோர் ஆகியோருக்கு ஏதாவது ஒரு சிறிய வேலைகள் கொடுத்து உதவி கேட்கலாம்.

உதாரணமாக, பிள்ளைகள் தங்கள் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வது, கணவர் காய்கறிகளை வெட்டுவது போன்ற எளிய உதவிகள் உங்கள் வேலை சுமையைக் குறைக்கும்.

உங்களுக்கென நேரம் ஒதுக்குங்கள்:

தினசரி ஓய்வு நேரம் மிகவும் அவசியம். வீட்டுப் பொறுப்பும், வேலைபளுவும் அதிகமாக இருக்கும்போது, மனதிற்கும், உடலிற்கும் ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.

தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் 'இது என் நேரம்' என கருதி, உங்களுக்கான உரிய ஓய்வுநேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

ஒரு காபி, மென்மையான இசை, புத்தகம் அல்லது அமைதியான நடைப்பயிற்சி போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
மனிதநேயம் மறைந்ததோ?
women

வேலை நேரமும், வீட்டு நேரமும் தனித்தனியாக இருக்க வேண்டும்:

பொதுவாகவே, அலுவலக வேலை செய்யும் நேரத்தில் வீட்டு வேலைக்காக நேரம் செலவழிக்கக்கூடாது. அதேபோல், வீட்டு வேலை செய்யும் நேரத்தில் அலுவலக வேலைகளைச் சிந்திக்கக்கூடாது. இவ்வாறு ஒவ்வொரு வேலைகளுக்கும் தனிப்பட்ட நேரத்தை பட்டியலிட்டு செய்ய வேண்டும். இது கவனமாகவும், அமைதியாகவும் செயல்பட உதவுகிறது. மனதிற்கு நிம்மதி தரும் சூழலை உருவாக்கும்.

இல்லை சொல்லும் பழக்கம்:

எல்லாவற்றையும் நாமே செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் “sorry” என்று பதிலளிப்பது, உங்கள் மனநலத்துக்கும் நேர மேலாண்மைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் முயற்சிகளை நம்புங்கள்:

சில நேரங்களில் உங்களால் எல்லாம் சரியாக செய்ய முடியவில்லை என்று தோன்றும். ஆனால் உங்கள் முயற்சியே வெற்றிக்கான அடிப்படை. தினமும் சிறிது சிறிதாக முயற்சி செய்கிறேன் என்பதை நினைவுப்படுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு பாராட்டு சொல்லுங்கள். அது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

பெண்கள் இன்று பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய முயற்சியும், பெரிய மாற்றங்களுக்கு வழிகாட்டும். நேரத்தை முறையாகப் பயன்படுத்துவது, மன அழுத்தம் வராமல் பார்த்துக்கொள்வது, குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவது, உங்களுக்கான நேரத்தை செலவிடுவது போன்றவை அனைத்தும் வாழ்க்கையில் சமநிலையை உருவாக்கும் என்பதைக் பெண்கள் கருத்தில் கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ முயலுங்கள்.

இதையும் படியுங்கள்:
தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைக்கும் பெண்கள்!
women

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com