பெரும்பாலானவர்களின் வீட்டின் சமையலறையில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியின் மேல் பகுதி காலியாக இருப்பதை அரிதாகவே பார்க்க முடியும். ஏனெனில் 90% வீடுகளில் பிரிட்ஜின் மேல் பகுதி ஸ்டோரேஜ் ரூம் போல மாறி பல பொருட்கள் அடுக்கப்பட்டு இருக்கும்.அறிவியல் ரீதியாக ஃப்ரிட்ஜின் மேல் சில பொருட்கள் வைப்பது தவறாக பார்க்கப்படுகிறது. மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படியும் தீராத பணத்தட்டுப்பாடு அமைதியற்ற சூழலை ஃப்ரிட்ஜின் மேல் இருக்கும் சில பொருட்கள் ஏற்படுத்த கூடும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் பிரிட்ஜின் மேல் பகுதியில் வைக்கக் கூடாத பொருட்கள் பற்றி இப் பதிவில் காணலாம்.
மருந்து மாத்திரைகள்
ஃப்ரிட்ஜ் இயங்கும்போது அதிலிருந்து லேசான வெப்பம் வெளிவருவதால் பிரட்ஜின் மேல் பகுதியில் மருந்து மாத்திரைகள் வைத்தால் அதனுடைய வீரியத்தை குறைத்து விடும். ஆகவே மருந்து மாத்திரைகளை ஃப்ரிட்ஜின் மேல் வைப்பதை தவிர்த்து விட வேண்டும். இது அறிவியல் ரீதியான உண்மை .வாஸ்து சாஸ்திரத்தின் படி மருந்து மாத்திரைகளை ஃப்ரிட்ஜின் மேல் வைத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு, ஏற்பட்டு நோய் குணமாகாமல் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
பழைய பில்கள் மற்றும் காகிதக் குப்பைகள்
பிரிட்ஜின் மேல் பகுதியில் தேவையில்லாத காகிதங்களையும், உபயோகமில்லாத பழைய கரண்டு பில்கள், சூப்பர் மார்க்கெட் பில்கள், கிழிந்த டைரிகள் வைத்தால் வீட்டில் கடுமையான எதிர்மறை ஆற்றல் ஈர்க்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்குள் சண்டை சச்சரவுகள் உண்டாகக்கூடும். மேலும் பணம் முடக்கமும் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி தடைபடும் என நம்பப்படுகிறது.
தண்ணீர் பாட்டில்கள்
மின்சாரத்தால் இயங்கி வெப்பத்தை வெளிவிடும் 'அக்னி தத்துவத்தை' கொண்டதாக பிரிட்ஜ் இருப்பதால் தண்ணீர் பாட்டில்களை அதன் மேல் வைக்கும் போது 'அக்னி தத்துவமும்' 'ஜல தத்துவமும்' நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் .பஞ்சபூதங்களின் இந்த முரண்பாடு காரணமாக தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு உருவாவதோடு, குடும்ப தலைவருக்கு மன அழுத்தம் ஏற்படும் என்பதால் ஃப்ரிட்ஜின் மேல் தண்ணீர் பாட்டில்களை வைக்கக்கூடாது.
செயற்கை பூக்கள் மற்றும் பிளாஸ்டிக் செடிகள்
கிச்சனை அழகு படுத்த வேண்டும் என்பதற்காக ஃப்ரிட்ஜின் மேல் செயற்கை பூக்களும் ,பிளாஸ்டிக் செடிகளையும் வைப்பது அபசகுனமாக வாஸ்து சாஸ்திரத்தின் படி பார்க்கப்படுகிறது. செயற்கை பூக்களைப் போல செயற்கையான போலித்தனமான பிரிவினையை குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் ஏற்படுத்தி விடும் என்பதால் வீட்டில் எப்போதும் உயிருள்ள நிஜ செடிகளை மட்டுமே வளர்க்க வேண்டும்.
கனமான எலக்ட்ரானிக் பொருட்கள்
சிறிய சமையலறை உள்ளவர்கள் இட நெருக்கடி காரணமாக மைக்ரோ வேவ் ஓவன், ஏர் பிரையர் ,மிக்ஸி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை ஃப்ரிட்ஜின் மேல் வைத்து பயன்படுத்துவார்கள். இது இரண்டு எலக்ட்ரானிக் பொருட்களின் ஆயுளையும் குறைப்பதோடு வீட்டில் குடும்பத் தலைவரின் கடன் சுமையை அதிகமாகி மன அழுத்தத்தை உருவாக்கி வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் பொருளாதார நிலையை தலைகீழாக மாற்றிவிடும் என்பதால் கனமான எலக்ட்ரானிக் பொருட்களை பிரிட்ஜின் மேல் வைப்பதை மறந்து விட வேண்டும்.
ஒரு பொருளின் மேல் மற்றொரு பொருளை வைப்பது எப்பொழுதும் தவறான நடைமுறையாகும் .வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை அதற்கு உரிய இடத்தை உருவாக்கி அதில் வைத்து பயன்படுத்தினால் வீடு அழகாக காட்சி தருவதோடு எடுக்கவும், பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். ஆகவே வாஸ்து சாஸ்திரத்தின் படி மேற்கூறிய பொருட்களை பிரிட்ஜின் மேல் வைப்பதை தவிர்த்து அதற்குறிய இடத்தில் வைத்து பயன்படுத்தி வீட்டின் நேர்மறை ஆற்றலை ஈர்த்து பயனடையுங்கள்.