

விநாயகருக்கும் பல வழிபாடும் வித்தியாசமான முறையில் இருப்பதை புராணத்தில் காணலாம். சகஸ்ரநாமத்தில் ஆயிரத்தெட்டு நாமங்கள் தொகுப்பில் கணபதியின் பூரண அருளைப்பெற சதுர்லட்ச ஜபம் என்ற நான்கு லட்ச மூலமந்திரத்தை உச்சரித்து விநாயகர் வழிபாடு செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது நான்கு லட்சம் மூலந்திர ஜபம் செய்பவர் களுக்கு வினாயகர் கனவில் பிரசன்னமாகி வரங்களை அருள்வார் என்று பொருள். சதுராவர்த்தி தர்ப்பணம் என் விதிப்படி இந்த பூஜையை செய்பவர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் உண்டாகும் என்பது கணபதி உபாசகர்களின் கருத்து.
சதுர் ஆவர்த்தி தர்ப்பணமுறை
எல்லா தெய்வங்களுக்கும் விசேஷ வழிபாடுகள் செய்யும் போது ஹோமம் செய்வது முதல் அங்கமாக விளங்குகிறது. விநாயகருக்கு சதுராவர்த்தி என்ற நான்கு லட்ச ஜபம் செய்கின்ற போது முதலில் அஷ்ட திரவியம் என்ற எண் வனக்கலவையால் பத்து சதவீத ஹோமம் செய்யவேண்டும்.
மோதகம், அப்பம், கரும்புத் துண்டு, அவல், எள், வாழைப்பழம், சத்துமாவு, நெல் பொரி ஆகியவை இந்தவகை பூஜைக்கு சமர்ப்பிக்கப் படுகிறது. பூஜையின்போது சமர்ப்பிக்கப்படுகின்ற சமித்துக்களுக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கின்றன.
அத்திக்குச்சியால் ஹோமம் செய்ய மக்கட்பேறு உண்டாகும். நாயுருவி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படுத்தும். எரூக்கன் குச்சி எதிரிகள் இல்லாத நிலை உண்டாக்கும். அரசங்குச்சி அரசாங்க நன்மைதரும். கருங்காலிக்குச்சி ஏவல் பில்லி சூன்யத்தை நீக்கும். வன்னிக்குச்சி க்ருஹக் கோளாறை நீக்கும். புரசங்குச்சி குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தும். அருகம்புல் விஷம் நீக்கும் ஆலங்குச்சி புகழ் சேர்க்கும். நொச்சி காரியத்தை விலகி வழக்குகளில் வெற்றி தரும்.
ஹோமம் செய்த பிறகு தர்ப்பணம் செய்யவேண்டும். சிறிய மகா கணபதி சிலையை இருதட்டில் வைத்து கீழுள்ள பிரார்த்தனையை மனசுக்குள் மானசீகமாகச் சொல்லிக்கொள்ளலாம்.
எனது சங்கடங்களை விலகச் செய்வாய் ஶ்ரீ மகாகணபதியே
நவக்கிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளிச் செய்வாய்
சகலவிதமான தோஷங்களும் என்னை விட்டுப்போகட்டும்
எல்லாவிதமான வருத்தங்களும் அகலட்டும்
துக்கங்களிலிருந்து நிவாரணம் கிடைக்கட்டும்
என் பாபங்கள் தீரட்டும்.
சாபங்கள் நெருங்காமல் போகட்டும்
நோய்கள் என்னை விட்டு விலகி ஓடட்டும்
என் பீடைகள் மறையிட்டும்
எனக்கு பயம் என்பதே இல்லாமல் போகட்டும்
கெட்ட கனவுகள் நசியட்டும்
தனதான்யங்கள் செழிக்கட்டும்
மன வருத்தங்கள் நீக்கப்படும்
சில வழக்கிலும் வெற்றி கிடைக்கட்டும்
மகா கணபதி தர்ப்ண பூஜை முடிந்த பிறகு சுற்றுப்புறங்களில் வைக்கப்படட்ட கலசத்தில் உள்ள நீரை தெளிக்க வேண்டும். பொதுவாக பூஜை செய்யும் வகைகளில் வினாயகர் வழிபாடு முதல் கலசபூஜை, அக்னி ஹோமம் என்று வகைப்படுத்தப்படும்.
சதுரார்ணவ பூஜையில் மட்டும் வினாயகர் வழிபாடு ஜபம், கட்டம், தர்ப்பணம், மார்ஜனம் என்று அமைகிறது. இந்த சதுர்ஆவர்த்தி தர்ப்பண பூஜை உலக நலன்களை கொடுக்கக் கூடியது. கூடுதல் பலன் பெற விரும்புபவர்கள் வினாயகர் மண்டபங்களில் இதைச் செய்யலாம்.
விரிவாகச் செய்யும் இந்த வழிபாட்டு முறையில் நான்கு லட்சம் ஆவர்த்திகள், மூலமந்திரம் 40000 ஆவர்த்திகள், அக்னி ஹோமம் 4000 ஆவர்த்திகள், தர்ப்பணமுறையும், 400ஆவர்த்திகள் மார்ஜனம் என்ற தெளித்தல் நிகழ்வும் அடங்குகின்றன. அதாவது 4444என்று மொத்தம் 16ஐ காட்டுகின்ற இதன் எண்ணிக்கை முறை 16லட்சுமி தேவிகளையும் அதன் மூலமாக வரும் வளங்களையும் காட்டுகின்றன.
பலன்கள்:
இந்த தர்ப்பண முறை கடனை தீர்க்கும் தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும் வினாயக சதுர்த்தியன்று 21வகையான இலைகளைக்கொண்டு அர்சிப்பதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
பிள்ளையாரை முதலில் வழிபடுவது ஏன்?
ஒரு சமயம் சனகாதி முனிவர்கள் கூடிய தாங்கள் செய்யும் நற்கார்யங்கள் பூர்த்தியாகமல் இருப்பது பற்றி ஈசனிடம் முறையிட்டனர். உடனே அவர் பார்வதியைப் பார்க்க அந்த சமயத்தில் மோகன வடிவில் ஒரு பிள்ளை தோன்றினர்.
மிக அழகான அவனுக்குக் கண்படாமல் இருக்க பருமனான தொந்தியும் யானைத் தலையையும் அன்னை அவருக்குத் தந்தாள். ஈசன் அவருக்கு வினாயகர் என்று பெயர் சூட்டி கணங்களுக்கெல்லாம் தலைவன் ஆக்கினார். இனி எந்த காரியம் தொடங்கினாலும் வினாயகரை வைத்தே தொடங்கவேண்டும். இல்லையென்றால் தடை ஏற்படும் என அறிவித்தார். அன்றிலிருத்து பிள்ளையாரை முதலில் வழிபடும் வழக்கம் வந்தது.
வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி, நிதி நெருக்கடிகள் அகன்று, தொழில் மற்றும் உத்தியோகத்தில் அசுர வளர்ச்சியைப் பெறவும், மன அமைதியுடன் கூடிய வெற்றிகரமான வாழ்க்கையை உங்களால் உருவாக்க முடியும்.