காலி டூத் பேஸ்ட் மூடியை இனிமே கீழே எறியாதீர்கள்.. அடேங்கப்பா! இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாமா? 

Toothpaste
Toothpaste
Published on

விலை தந்து பல பொருள்களை வாங்கி விடுகிறோம். ஆனால் அவை காலியான பின் அழகான திக்காக இருக்கும் டப்பா மற்றும் ட்யூப்களை கீழே தூக்கிப் போட மனதில்லாமல் அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிப்போம். அந்த லிஸ்டில் வருவது தான் பழைய காலியான டூத் பேஸ்ட்  டியூப்களும் மூடிகளும். இதை வைத்துக் கூட ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசிப்பவர்களுக்கு சில பயனுள்ள டிப்ஸ்கள் இங்கு.

பொதுவாக மெழுகுவர்த்திகளை வைக்க ஸ்டாண்ட் தேடுவோம் அல்லது விலைக்கு வாங்கி வைப்போம். இனி அந்தக் கவலையில்லை. பேஸ்ட் டியூப் மூடியை கீழே வைத்து அதில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கலாம். ஆனால் கவனம்.

டியூப் பின் மூடி உள்ளே நுழையும் அளவுக்கு தகுந்தாற்போல் டியூப் கீழ் பகுதியில் ஆக்சா பிளேடால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஒட்டையில் மேல் பாகத்தை வளைத்து நுழைந்தால் ஒரு ஹோல் கிடைக்கும். இப்போது இதன் நடுவில் வீட்டில் சிதறிக்கிடக்கும் ஒயர்கள் போன்றவற்றை வைத்து மூடி கொண்டு டைட் செய்யலாம்.

டியூபின் மேல் பாகத்தையும் கீழ் பாகத்தையும் வெட்டி விட்டால் நடுவில் கிடைக்கும் உருளை போன்ற பகுதியை மரகைப்பிடிகளில் நுழைத்து உபயோகிக்கலாம். இதனால் பிடிக்க வசதியாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

இதே முறையில் வீட்டில் இருக்கும் அனைத்து செல்போன் சார்ஜர் ஒயர்களையும் இதற்குள் சீராக நுழைத்து வைத்தால் தேடும் நேரம் மிச்சமாகும். தேவைப்படும் போது தேவையான ஒயரை மட்டும் இழுத்து பிளக்கில் சொருகலாம்.

ஐப்ரோ பென்சில் போன்ற மெல்லிய அழகு சாதனங்களை இந்த உருளைக்குள் போட்டு வைக்கலாம். ஹாண்ட் பேக்கில் வைத்து எளிதாக எடுக்க உபயோகமாக இருக்கும்.

இதே டியூபை நடுவில் ஹார்ட் வடிவத்தில் வெட்டி அதில் ஹெச் வடிவத்தில் கட் செய்து டூ பின் பேஸ்ட் கொண்டு பாத்ரூமில் ஓட்டினால் பிரஷ் வைக்கவும் சமையலறையில் ஓட்டி கேஸ் லைட்டர் கத்தி போன்றவைகள் வைக்கவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
ஒரு நாளைக்கு ஒரு முட்டை ok... அதற்கு மேல் சாப்பிட்டால் என்ன ஆகும்?
Toothpaste

அடுத்து மேல் மூடி மட்டும் இருக்கும்படி பாதியாக கட் செய்து கொள்ளவும். இப்போது வடகம் பிழியும் வேட்டியில் மூடிக்குத் தகுந்த ஓட்டை போட்டு அதில் இந்த மூடியை நுழைத்து  மீதியை வெட்டி விடவும். இப்போது மாவை வேட்டியில் போட்டு இந்த மூடி வழியே அழகாக வடகம் பிழியலாம். கேக் போன்றவற்றை கிரீம்கள் போட்டு அழகு செய்யவும் பயன்படுத்தலாம்.

இந்த டிப்ஸ்களுடன் டியூபை வெட்டி, குழந்தைகளுக்கான கிராப்ட் (Craft) ஆக பேனா ஸ்டாண்ட் அல்லது பொம்மைகள் செய்யலாம். காலி டியூபை நன்றாக கழுவி உலர்த்தி பயணங்களில் க்ரீம்/ஷாம்பு எடுத்துச் செல்ல உபயோகிக்கலாம். முள், ஸ்க்ரூ, நாணயம், USB, SIM பின் போன்றவை சேமிக்க சிறு டப்பியாக உதவும். காரில் அல்லது வீட்டில் சிறிய குப்பை டப்பாவாக தற்காலிகமாக பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
டயரில் இருக்கும் சிறிய முடிகள் எதற்கு? பலரும் அறியாத ரகசியம் இதோ!
Toothpaste

சிறிய விதைகளை ஈரமில்லாமல் பாதுகாக்க உதவும். டியூபில் சிறிய துளைகள் போட்டு  நீர் தெளிப்பான் DIY செய்து, வீட்டு உள் செடிகளுக்கு மெதுவாக நீர் தெளிக்கலாம்.

இவற்றை குப்பைகளாக கீழே எறியாமல் ரீசைக்கிள் செய்வதால் பிளாஸ்டிக் கழிவு குறைத்து சுற்றுச்சூழல் நன்மை பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com