மீண்டும் மீண்டும் வரும் பூஞ்சைக் காளான்களை வேரோடு அழிக்க ஒரு சீக்ரெட் ட்ரிக் இதோ!

Fungus In house
Fungus In house
Published on

வீட்டின் சுவர்களிலோ அல்லது குளியலறை ஓரங்களிலோ திடீரென கறுப்பு நிறத்தில் படர்ந்திருக்கும் பூஞ்சைகளைப் பார்த்தால் நம்மில் பலருக்கும் உடனே கோபம் வருவது இயல்புதான். உடனே ஒரு துணியை எடுத்து அதைத் துடைத்து எடுப்போம், பிளீச்சிங் பவுடர் போட்டு தேய்த்து அதன் மேல் பெயிண்ட் அடித்து மறைக்கப் பார்ப்போம். 

ஆனால், இப்படிச் செய்வது தற்காலிகமான ஒரு தீர்வு மட்டுமே என்பதை நாம் உணர்வதில்லை. கொஞ்ச நாட்களிலேயே அந்தப் பூஞ்சை மீண்டும் அதே இடத்தில் கெத்தாக ஆஜராகிவிடும். இப்படித் திரும்பத் திரும்ப வரும் இந்தத் தொல்லையை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட ஒரு சிம்பிளான வழி இருக்கிறது. 

காரணத்தைக் கண்டுபிடி!

பூஞ்சை வளரக் காரணம் ஈரப்பதம் மட்டும்தான் என்பதை நாம் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எங்கோ ஒரு மூலையில் தண்ணீர் கசிவு இருப்பதால்தான் இந்த அடைமழைக் காலத்துக் காளான்கள் நம் வீட்டுக்குள் குடியேறுகின்றன. எனவே, முதலில் உங்கள் வீட்டின் தண்ணீர் குழாய்களில் ஏதேனும் சிறு கசிவு இருக்கிறதா எனப் பொறுமையாகப் பாருங்கள்.

சிங்க் அடியில் உள்ள பைப், பாத்ரூம் குழாய்களின் இணைப்புகள் என அனைத்தையும் ஒருமுறை செக் செய்வது நல்லது. அதேபோல, மழைக்காலங்களில் வீட்டின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் சுவரில் இறங்குகிறதா என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதைக் கண்டுபிடித்துவிட்டாலே பாதிப் பிரச்சனை முடிந்தது.

காற்றோட்டம் முக்கியம்!

பல வீடுகளில் காற்றோட்டம் சரியாக இல்லாததுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. குளியலறையில் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேன் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

ஜன்னல்களை அடிக்கடி திறந்து வைத்து அறைகளுக்குள் சூரிய வெளிச்சமும் காற்றும் வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வீட்டைச் சுற்றியுள்ள மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும், அந்தத் தண்ணீர் சுவரில் ஊறி இதுபோன்ற பிரச்னைகளை உருவாக்கும். எனவே, வெளிப்புறப் பராமரிப்பும் மிக மிக அவசியம்.

இதையும் படியுங்கள்:
வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் '6 / 10' ரூல் தெரியுமா?
Fungus In house

சுத்தமாக வைத்திருங்கள்!

பிரச்சனை எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடித்த பிறகு, அதை முழுமையாகச் சரிசெய்வதுதான் நிரந்தரத்தீர்வு. பிளம்பர் உதவியோடு அந்த நீர் கசிவை உடனே சரிசெய்துவிடுங்கள். அதிகப்படியான ஈரத்தால் வீணான கார்பெட், பழைய அட்டைகள் போன்றவற்றை வீட்டிற்குள் வைத்திருக்காமல் வெளியே எறிந்துவிடுவதே பாதுகாப்பானது. 

இதையெல்லாம் அப்புறப்படுத்தும்போது மறக்காமல் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்துகொள்வது உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும். எல்லாம் காய்ந்த பிறகு, வினிகர் அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற எளிய பொருட்களைப் பயன்படுத்தி அந்த இடத்தை நன்கு துடைத்துச் சுத்தப்படுத்தலாம். அந்த இடம் முழுமையாகக் காய்ந்த பிறகு மட்டும் பெயிண்ட் அடிப்பது போன்ற வேலைகளைத் தொடங்குங்கள்.

இதையும் படியுங்கள்:
'புதுமைப்பெண்' போல் இனி 'தமிழ் புதல்வன்' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Fungus In house

இனி உங்கள் வீட்டில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்தால், துடைப்பத்தை எடுப்பதற்குப் பதிலாக ஈரப்பதம் எங்கிருந்து வருகிறது என்பதைத் தேடத்தொடங்குங்கள். சுத்தமான வீடு நம் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இந்தச் சின்ன மாற்றங்கள் உங்கள் வீட்டின் அழகை அப்படியே பாதுகாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com