உங்க அடுப்பு 'சிவப்பு கலர்'ல எரியுதா? அப்போ இந்த ஒரு பொருளை மாத்தினா போதும்... செலவு மிச்சம்!

Gas stove
Gas stove
Published on

கேஸ் அடுப்பு பராமரிப்பு குறிப்புகள் (Gas stove maintenance tips):

1. கேஸ் வெளியேறிய வாடை நமக்கு தெரிந்த உடனேயே விபத்துகளை தடுக்க முதலில் கேஸை  அணைத்து விட வேண்டும். அந்த சமயத்தில் மின்சார பல்புக்கான சுவிட்ச் போடுவது கூடாது.

2. கேஸ் டியூபில் விரிசல் ஏற்பட்டு வாயு வெளியேறி விபத்து ஏற்படுத்தும் என்பதால்  ISI தர சான்றிதழ் பெற்ற கேஸ் டியூப்புகளை மட்டுமே வாங்க வேண்டும்.

3. ரெகுலேட்டரில் உள்ள 'நாப்' மற்றும்  அதில் வால்வு இறுக்கமாக இல்லாமல் லூசாக இருந்தால் அவற்றை முறையாக அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் கொடுத்து மட்டுமே பழுது பார்க்க வேண்டும்.

4. புதிய சிலிண்டர் மாட்டியவுடன் கேஸ் வெளியேறாமல் தடுக்க, சிலிண்டரை வாங்கும் போதே அதில் கருப்பு வாசர் இருக்கிறதா எனவும், இருந்தால் அது தேயாமல்  சரியாக பொருந்தி உள்ளதா எனவும் சிலிண்டர் போடுபவரிடம் சரி பார்த்து வாங்கிய  பின்பு தான் பொருத்த வேண்டும். 

5. சிலிண்டர் வாங்கும்போது வாசர் இருக்கிறதா என சரிபார்த்து வாங்காமல் இருக்கும் நேரங்களில் பழைய சிலிண்டரில் இருக்கும் வாசரை கழட்டி புதிய சிலிண்டரில் மாட்டினால் கேஸ் கசிவு ஏற்படாது.

உங்க அடுப்பு பழையதாகிவிட்டதா? புதிய அடுப்பு வாங்க...

6. கேஸ் ஸ்டவ்விற்கு அடியில் பைப்பில் பொருத்தப்பட்டிருக்கும் கார்க்கில் இருந்து கேஸ் வெளியேறினால் அதை நாமாக கம்பி நுழைத்து சரி செய்வதோ, அல்லது அதில் உள்ள ஜெட்டை பெரிய அடுப்பு சிறிய அடுப்பு என தெரியாமல் மாற்றி போட்டால் விபத்து ஏற்படும் என்பதால்  ,கார்க்கில் இருந்து வாயு வெளியேறினால் சர்வீஸ் சென்டரில் கொடுத்து பழுது பார்க்க வேண்டும் .

7. அடுப்பிற்கு அடியில் இருக்கும் குழாய் துருப்பிடிக்கும் என்பதால் துருப்பிடிக்க ஆரம்பித்தவுடன் இந்த பைப்பை சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றி விட வேண்டும்.

8. கேஸ் கார்க்கில் இருந்து வரும் கேஸூம் துளையிலிருந்து வரும் ஆக்ஸிஜனும் சேர்ந்து தான் அடுப்பு எரியும் என்பதால் கேஸ் ட்யூபில் இருக்கும் துளையை அடைக்கக் கூடாது.

9.  பர்னர் தேய்ந்திருந்தாலோஅல்லது  அது சரியாக பொருந்தாமல் இருந்தாலோ  சிவப்பு நிறமாக அடுப்பு எரியும். அப்போது பர்னரை மாற்றி விட வேண்டும்.

10. கமர்சியல் சிலிண்டர், டொமஸ்டிக் சிலிண்டர் இதில் எதை வீட்டுக்கு பயன்படுத்தினாலும் அதில் டொமஸ்டிக் ரெகுலேட்டரை போட்டு தான் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சமையல் கேஸ் சிக்கனமாக செலவாக சில சிறப்பாக ஆலோசனைகள்!
Gas stove

11. கேஸ் அடுப்பில் உள்ள நான்கு ரப்பர் கால்களில் ஒன்று சரியில்லாமல் போனாலும் நான்கு கால்களையும் முழுவதுமாக மாற்றி விட வேண்டும்.

12. கமர்சியல் சிலிண்டர் பொருத்தும் ட்யூபின் முன்புறம் வாசர் இருக்கிறதா என்பதனை கவனித்து பொருத்துவதன் மூலம் கேஸ் கசிவை தவிர்க்கலாம்.

13அடுப்பு வைக்க உபயோகப்படும் 'பான் சப்போர்ட்' டில் ஒரு கம்பி தேய்ந்திருந்தாலும் முழுவதுமாக  அகற்றிவிட்டு புதிதாக வாங்க வேண்டும்.

14. கேஸ் அடுப்பை ஒரு துணியில் தண்ணீர் நனைத்து துடைத்து சுத்தப்படுத்த வேண்டும் அப்படியே தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவதன் வாயிலாக துருப்பிடித்து கேஸ் வெளியேறும்.

மேற்கூறிய முறைகளை கையாளுவதன் மூலம் கேஸ் கசிவை தடுத்து அடுப்பை சூப்பராக எரிய வைக்க முடியும்.

உங்க அடுப்பு பழையதாகிவிட்டதா? புதிய அடுப்பு வாங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com