அச்சச்சோ… உங்க டூத் பிரஷ்ஷை உடனே தூக்கி போடுங்க! 

Germs in Toothbrush
Germs in Toothbrush
Published on

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பிரஸ் மற்றும் ஷவரில் கோடிக்கணக்கான வைரஸ்கள் கூட்டமாக உள்ளது என்றால் நம்புவீர்களா? ஆம், உண்மைதான். அமெரிக்காவில் உள்ள, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இதன் மூலமாக நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு மர்மமானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. 

இந்த ஆய்வின் முடிவில் டூத் பிரஷ் மற்றும் ஷவர் ஹெட்களில் 600க்கும் மேற்பட்ட வகையான புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. அதற்கு மாறாக பாக்டீரியாக்களை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டவை. இவற்றை விஞ்ஞானிகள் ‘பாக்டீரியாபேஜ்’ என்கின்றனர். ஒவ்வொரு டூத் பிரஷ் மற்றும் ஷவர் ஹெட்டிலும் வெவ்வேறு வகையான வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தக் கண்டுபிடிப்பின் மூலமாக பாக்டீரியாபேஜ் வைரஸ்களைப் பயன்படுத்தி ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியா தொற்றுகளுக்கு புதிய சிகிச்சையை வழங்க முடியும். இந்த ஆய்வு நம்மைச் சுற்றியுள்ள சூழலில் எண்ணற்ற வகையான நுண்ணுயிர்கள் வாழ்வதையும், அவற்றின் பன்முகத்தன்மையையும் நமக்கு உணர்த்துகிறது.

எனவே, கழிப்பறைகளை சுத்தம் செய்யும்போது ப்ளீச் பயன்படுத்துவதற்கு பதிலாக வினிகர் அல்லது சோப்பு போன்ற இயற்கையான ரசாயனங்களைப் பயன்படுத்துவது நல்லது. இது நல்ல பாக்டீரியாக்கள் அழியாமல் பார்த்துக்கொள்ளும். இருப்பினும் டூத் பிரஸ் மற்றும் ஷவர் எண்களை அவ்வப்போது சுத்தம் செய்து சுத்தமாக வைத்திருப்பது நல்லது. குறிப்பாக, டூத் பிரஷ்களை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். 

இந்த ஆய்வு முடிவுகள் நம்மை அச்சுறுத்தினாலும், நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இந்த வைரஸ்கள் பெரும்பாலும் நமக்கு தீங்கு விளைவிக்காதவை. நமது சூழலில் உள்ள பாக்டீரியாக்களை இவை கட்டுப்படுத்த உதவுகின்றன. இருப்பினும் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்:
Western Toilet எப்படி பயன்படுத்தணும் தெரியுமா? நச்சுனு நாலு டிப்ஸ்! 
Germs in Toothbrush

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, கழிப்பறை மற்றும் குளியலறைப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இத்துடன் ஆரோக்கியமான உணவை உண்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எவ்விதமான நோய்த் தொற்றுகளும் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். 

இந்த ஆய்வு பற்றி மேலும் பல விஷயங்களை அறிய வேண்டியுள்ளது. ஆனால், இந்த ஆய்வு நமக்கு ஒன்றை மட்டும் தெளிவாக காட்டுகிறது. அது என்னவென்றால் நாம் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை மதிக்க வேண்டும். அதைப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com