Western Toilet எப்படி பயன்படுத்தணும் தெரியுமா? நச்சுனு நாலு டிப்ஸ்! 

How to use a Western Toilet?
How to use a Western Toilet?

வெஸ்டர்ன் டாய்லெட் இந்தியன் டாய்லெட் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இதில் நீங்கள் ஜாலியாக அமர்ந்து கொண்டே போகலாம். குறிப்பாக இந்த வகை டாய்லெட் முதியவர்களுக்கு வசதியாக இருக்கும். இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் வெஸ்டர்ன் டாய்லெட் வந்துவிட்டது. புதிய வீடு கட்டுபவர்களும் வெஸ்டர்ன் டாய்லெட்டை வைக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அதை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா? என்பது கேள்விக்குறிதான். சரி வாருங்கள் இந்த பதிவில் வெஸ்டர்ன் டாய்லெட் எப்படி பயன்படுத்துவது எனத் தெரிந்து கொள்ளலாம்.

வெஸ்டர்ன் டாய்லெட்டின் அமைப்பே வித்தியாசமாக இருக்கும். அதற்கென்று தனியாக தண்ணீர் தொட்டி அமைத்து அதிலிருந்து தண்ணீர் வரும்படி செய்யப்பட்டிருக்கும். அதை ஆங்கிலத்தில் Flush என அழைப்பார்கள். இந்திய வெஸ்டன் டாய்லெட் முறையில் தண்ணீர் பயன்படுத்துவதற்காக பைப் மாட்டி ஒரு குழாய் போன்ற அமைப்பு இருக்கும். அதை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவே வெளிநாடுகளில் தண்ணீர் அமைப்புக்கு பதிலாக பேப்பர் ரோல் வைத்திருப்பார்கள். 

நீங்கள் முதன்முறையாக வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்த போகிறீர்கள் என்றால், அதன் மீது எப்படி அமர வேண்டும் என முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வெஸ்டர்ன் டாய்லெட்டில் நேரடியாக ஒரு சேரில் அமர்வது போல நாம் அமர வேண்டும். இது தெரியாதவர்கள், வெஸ்டர்ன் டாய்லெட் மீது ஏறி இந்தியன் முறையில் அமர்வார்கள். இது முற்றிலும் ஆபத்தானதாகும். ஒருவேளை கால் ஸ்லிப் ஆனால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள். 

அமர்வதற்கு முன்பாக நீங்கள் உட்காரும் இடம் சுத்தமாக இருக்கிறதா என பார்த்துவிட்டு உட்கார வேண்டும். ஈரமாக இருந்தால் சுற்றிலும் துடைத்துவிட்டு அமர்வது நல்லது. ஏனெனில் சிலர் வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஓரங்களில் சிறுநீர் கழித்து வைத்திருப்பார்கள். 

அதேபோல அமர்வதற்கு முன்பாக ஒரு முறை Flush செய்து விட்டு அமர்வது நல்லது. ஏனெனில் அப்போதுதான் சிங்க்-ல் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாக இருக்கும். நீங்கள் ஏதேனும் பொதுக் கழிப்பறை பயன்படுத்துகிறீர்கள் என்றால் இதை கட்டாயம் செய்யவும். 

இதையும் படியுங்கள்:
ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் எங்குள்ளது தெரியுமா?
How to use a Western Toilet?

கழிவை வெளியேற்றியதும், வலது புறத்தில் கழுவுவதற்கான ஸ்பிரே பைப் இருக்கும். பெரும்பாலும் அதை சுவற்றில் மாட்டி வைத்திருப்பார்கள். அதன் வால்வை மேலே அழுத்தினால் தண்ணீர் வரும். அதைப் பயன்படுத்தி உங்களை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக இறுதியாக Flush செய்து சுத்தப்படுத்துவதை மறந்து விடாதீர்கள். 

நீங்கள் பயன்படுத்தும் டாய்லெட்டில் டாய்லெட் பேப்பர் இருந்தால் ஈரம் இல்லாமல் அனைத்தையும் சுத்தமாக துடைப்பது நல்லது. கழிவறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, வெஸ்டர்ன் டாய்லெட்டின் ஓரங்களை டாய்லெட் பேப்பர் வைத்து துடைத்துவிட்டு செல்லுங்கள். இதனால் உங்களுக்குப் பிறகு வருபவர்கள் எந்த இடையூறும் இன்றி போவதற்கு உதவியாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com