கிருமிகளின் கூடாரம் டாய்லெட் சீட் இல்லை, உங்க மொபைல் ஃபோன்தான்… 

Toilet Seat Vs. Smartphone
Toilet Seat Vs. Smartphone
Published on

நாம் அனைவரும் இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒரு உபகரணமாக ஸ்மார்ட் போன்கள் மாறிவிட்டன. செய்திகளைப் படிப்பது, பொழுதுபோக்கு, தொடர்புகொள்வது என எல்லாவற்றிற்கும் நாம் நம் ஸ்மார்ட்போனையே நம்பியிருக்கிறோம். ஆனால், இப்படி பல வழிகளில் துணையாக இருக்கும் ஸ்மார்ட்போன் நண்பன், நமக்கு தெரியாமல் நம்மை நோய்க்கிருமிகளுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

டாய்லெட் சீட் Vs. ஸ்மார்ட்போன்:

பொதுவாக நாம் டாய்லெட் சீட் மிகவும் அழுக்காக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஸ்மார்ட்போன்களில் டாய்லெட் சீட்டை விட பல மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் இருப்பதாக தெரிவிக்கின்றன. உங்களுக்கு நம்ப முடியவில்லையா? ஆம், இது உண்மைதான்.

UK-வை சேர்ந்த MattressNextDay என்ற அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில், ஸ்மார்ட்போன்களில் Pseudomonas aeruginosa என்ற தொற்று நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியாக்கள் கரப்பான் பூச்சிகளின் எச்சங்களிலும் கூட காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் ஸ்மார்ட்போன்களில் பாக்டீரியாக்கள் அதிகம்?

நாம் நம் ஸ்மார்ட்போனை எப்போதும் தொட்டுக்கொண்டே இருப்பதால், நம் கைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் எல்லாம் ஸ்மார்ட்போனுக்கு பரவிவிடுகின்றன. பலர் பாத்ரூமில் இருக்கும்போது கூட தங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவார்கள். இதனால், ஸ்மார்ட்போனில் பாத்ரூம் தொடர்பான பாக்டீரியாக்கள் படிந்துவிடும். மேலும், பலர் தங்கள் ஸ்மார்ட்போனை அடிக்கடி சுத்தம் செய்வதில்லை. இதனால், பாக்டீரியாக்கள் பெருகி, நோய்களை ஏற்படுத்தும்.

ஸ்மார்ட்போன் பாக்டீரியாக்களால் ஏற்படும் பாதிப்புகள்:

நாம் நம் முகத்தை தொட்டுக்கொண்டே ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதால், ஸ்மார்ட்போனில் உள்ள பாக்டீரியாக்கள் நம் சருமத்தில் படிந்து, முகப்பரு, அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஸ்மார்ட்போனில் உள்ள பாக்டீரியாக்கள் நம் கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளுக்குள் சென்று, தொற்று நோய்களை ஏற்படுத்தும். பாத்ரூமில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதால், செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் ஸ்மார்ட் கேஜெட்டுகளை அதிகம் உபயோகிப்பதை தவிர்க்க சில வழிகள்!
Toilet Seat Vs. Smartphone

ஸ்மார்ட்போனை எப்படி சுத்தம் செய்வது?

  • அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்: குறைந்தது நாள்தோறும் ஒரு முறை ஸ்மார்ட்போனை ஈர துணியைக் கொண்டு துடைத்து சுத்தம் செய்யுங்கள்.

  • Disinfectant பயன்படுத்துங்கள்: ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஸ்மார்ட்போனை டிஸ்இன்ஃபெக்டன்ட் வைத்து சுத்தம் செய்யுங்கள்.

  • ஸ்கிரீன் ப்ரொடெக்டர் பயன்படுத்துங்கள்: ஸ்கிரீன் ப்ரொடெக்டர் பாக்டீரியாக்கள் நேரடியாக ஸ்கிரீனைத் தொடுவதைத் தடுக்கும்.

ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கினாலும், அதை சரியாக பராமரிக்காவிட்டால் நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, நம் ஸ்மார்ட்போனை அடிக்கடி சுத்தம் செய்து, நம்மை நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com