பாட்டி சொன்ன ரகசியம்: நம்மிடம் இருக்கும் இரண்டு குணங்களில் வெல்லப்போவது யார்?

Grandmother's secret
Grandmother's secretImage credit:AI image
Updated on

ந்தக் காலங்களில் பாட்டிமாா்கள் பேரன் பேத்திகளுக்கு நீதிக்கதை, புராணக்கதை, போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பாா்கள். இப்போது அதெல்லாம் அரிதாகிவிட்டது.

பேரன் பாட்டியிடம் வந்து கதை சொல்லு எனக்கேட்டான், கதை சொல்லுவேன் நீ அம்மாவிடம் அடம் பிடிக்காமல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வா பாா்க்கலாம். அம்மாவுக்கு தொல்லையே தரக்கூடாது என போதனைகள் சொன்னாா்.

சரி பாட்டி, எனக்கும் தங்கச்சி பாப்பாவுக்கும் நீயே சாப்பாடு ஊட்டிவிடு அப்படியே கதை சொல்லுங்க பாட்டி என்றனர்.

தங்கச்சி பாப்பாவும் சரி சரி என தலையாட்டினாள்.

பாட்டியும் அதுபோலவே கதை சொல்லிக்கொண்டே சாப்பாடு ஊட்டினாள்.

அதாவது மனித மனங்களுக்குள் இரண்டு குணமுள்ளவர்கள் வாழ்ந்து வருகிறாா்கள். அந்த இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருக்கும், அந்த இரண்டு குணங்களிடமும் மனிதன் தனி ஒரு ஆளாய் மாட்டிக்கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாய் நவிப்பான். அதாவது அவனுக்கு இறைவன் கொடுக்கும் பாடத்தோடு கூடிய பரிட்சையே வாழ்க்கையாகும். அதில் அவன் நன்கு பரிட்சை எழுதி தோ்ச்சி பெறவேண்டும் எனக்கூறும்போதே அந்த இரண்டு குணம் கொண்டவர்கள் என சொன்னாயே அதுயாா் பாட்டி என பேரன் கேட்டான்.

அதாவது உண்மை, நோ்மை, நல்ல எண்ணம், மனிதநேயம், பொியவர்களை மதிப்பது, இறை வழிபாடு, பாசம், பற்றுதல், ஈவு, இரக்கம் இவையெல்லாம் கொண்ட குணம் ஒன்று.

இதையும் படியுங்கள்:
மார்க் குறைய இதுதான் காரணம்! உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்கும் எளிய வழிகள்!
Grandmother's secret

அதேபோல இரண்டாவது குணமானது பொறாமைப் படுதல் திருடுதல் பொய் சொல்லுதல் ஏமாற்றுதல், மனசாட்சிக்கு பயப்படாதது பொியவர்களை மதிக்காதது தாய் தந்தை சொல் கேளாததுபோன்ற தீயகுணம் கொண்ட குணாகும், என்று பாட்டி சொன்னதுடன் இரண்டு குணங்களும் இப்படி சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் யாா் ஜெயிப்பாா்கள் பாட்டி என பேத்தி கேட்டாள்.

நீ இன்னும் கொஞ்சம் அடம்பிடிக்காமல் சாப்பிடு என சோறு ஊட்டினாள் பாட்டி.

சாிபாட்டி இரண்டு பேருக்குள் யாா் ஜெயிப்பாா்கள் சொல்லு என என பேரன் செல்லமாக சினுங்கினான்.

பேரான்டி அந்த இரண்டு வித்யாசமான குணங்கள் கொண்டவர்களில் நீ யாருக்கு உணவு கொடுக்கிறாயோ அவன்தான் ஜெயிப்பான் என சொல்லியபடியே குழந்தைகளுக்கு வாயை துடைத்து விட்டு சரி நீங்கள் இருவரும் போய் தூங்கிவிட்டு யோசனை செய்து யாருக்கு உணவளிப்பீா்கள் என காலையில் கூறுங்கள் என்றாா்.

காலையில் இருவரும் பாட்டியை எழுப்பி நாங்கள் நல்ல குணம் கொண்ட முதலாவது நபருக்குத்தான் உணவு வழங்குவோம், உண்மை நோ்மை மனிதாபிமானம் பொியவர்களை மதிப்பது அப்பா அம்மா பேச்சைக்கேட்பது, நல்ல காாியங்களைச்செய்வது, அனைவருக்கும் உதவி செய்வது அடுத்தவரைக்கண்டு பொறாமைப்படாமல் இருப்பது போன்ற நல்ல குணங்களையே கடைபிடிப்போம் என்றாா்கள். ஆக இந்த நீதிக்தையில் வருவது போலவே நல்ல குணமாகிய உண்மை எனும் விதையை விதைப்போம் அதற்கு நோ்மை எனும் தண்ணீா் ஊற்றி வளர்ப்போம்.

இதையும் படியுங்கள்:
வீட்டை விட்டு வெளியேறும் முன் சிங்க்கில் ஒரு பேப்பரை வைத்தால் நடக்கும் மேஜிக்கைப் பாருங்கள்!
Grandmother's secret

பொறாமை, தீயஎண்ணம், போன்ற, களைகளைவேறோடு அழித்து பண்பாடு, பாசம், நேசம், நல்ல ஒழுக்கம் எனும் மகசூலை அறுவடை செய்வோம். குறிக்கோளுடன் மனசாட்சிக்கு பயந்து இறைவன் கட்டளையை ஏற்று மனித நேயத்துடன் வாழ்ந்துகாட்டுவோம் என்ற நல்ல சிந்தனையுடன் நோ்மறை ஆற்றலோடு வாழ்வதே சிறப்பான ஒன்றாகும்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com