.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
ஐந்து விரல்களையும் உள்ளங்கையின் நடுவில் மடக்கி வைத்திருக்கும் நிலை முஷ்டி எனப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் பேசும்போதும், நிற்கும்போது தம் தனித்துவமான பாணியில் முஷ்டியை வைத்திருப்பார்கள். ஒருவர் தனது முஷ்டியை வைத்திருக்கும் நிலையை வைத்து அவரது ஆளுமைத்தன்மையை கண்டறிய முடியும். சில உளவியலாளர்கள் மற்றும் உடல் மொழி வல்லுநர்கள் இந்த சிறிய செய்கைகள் சில ஆளுமை பண்புகளை பிரதிபலிக்கும் என்று நம்புகிறார்கள்.
ஆள்காட்டி விரலின் மேல் பெருவிரலை வைத்திருக்கும் முஷ்டி நிலை: நான்கு கை விரல்களையும் உள்ளங்கையில் மடக்கி பெருவிரலை ஆட்காட்டி விரலின் மேல் வைத்திருக்கும் முஷ்டி நிலை ஒருவரது தாராள மனப்பான்மையையும் கருணை மனதையும் காட்டுகிறது. பிறர் இந்த இரக்க சுபாவத்தை பயன்படுத்தி இவர்களை உபயோகித்துக் கொண்டு விடுவார்கள். இவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அதற்காக நேரம் செலவழிக்க விரும்புவார்கள். தன் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.
எல்லா விரல்களையும் உள்ளே வைத்து உருவாக்கிய முஷ்டி நிலை: கட்டை விரல் உள்ளிட்ட எல்லா விரல்களும் உள்ளங்கையில் மறைந்திருக்குமாறு இருக்கும் முஷ்டி நிலையில் இருப்பவர்கள் ஒரு இன்ட்ரோவர்ட் ஆக இருப்பார்கள். இவர்களுக்கு உள்முகமான சிந்தனையும், உள்முக உணர்திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். பிறரால் வழிநடத்தப்படுவதை விட தனக்குத்தானே தன்னுடைய விருப்பங்களின்படி நடப்பார்கள். இவர்களுடைய உள் உலகம் மிகவும் பணக்காரத்தன்மை வாய்ந்தது. படைப்பாற்றல் உள்நோக்கம் கொண்டிருப்பார்கள். தங்கள் செயல்களையும் வார்த்தைகளையும் கவனமாக கருத்தில் கொண்டு இருப்பார்கள். சிறந்த கற்பனையும் ஆழமான சிந்தனை வளமும் மிக்கவர்கள்.
நான்கு விரல்களை உள்ளங்கையில் வைத்து, கட்டைவிரலை அவற்றின் மீது கிடைமட்டமாக வைத்திருக்கும் முஷ்டி நிலை: இவர்கள் அழகான மற்றும் வேடிக்கையான ஆளுமைத்தன்மை மிக்கவர்கள். இவர்கள் பிறரை மிக எளிதில் ஈர்த்து விடுவார்கள். இவர்கள் அமைதியாக இருந்தாலும் கோபப்பட்டாலும் அது பிறரை கவருவது விந்தை. மிகவும் அனுதாபம் மற்றும் பச்சாதாபம் உள்ள நபர்கள். ஆனால், மற்றவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அதிக கவனம் காட்டுவார்கள்.
கட்டைவிரலை சுற்றி மற்ற விரல்கள் அமைந்திருக்குமாறு உள்ள முஷ்டி நிலை: இந்த நிலையில் இருப்பவர்கள் கவலை அல்லது பாதுகாப்பில்லாத மனதை குறிக்கும் இயல்புடையவர்கள். இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். தங்கள் வேலையில் முழு மனதோடு ஈடுபடுபவர்கள். ஆனால், சுற்றிலும் நடப்பவற்றை கவனத்தில் கொள்ளாமல் விடுவார்கள்.
மற்ற நான்கு விரல்களுக்கு மேல் கட்டை விரலை வைத்திருக்கும் முஷ்டி நிலை: இவர்கள் தன்னம்பிக்கைமிக்க நபர்கள் என்று இந்த முஷ்டி நிலை குறிக்கிறது. இவர்கள் ஒரு கூட்டத்திற்கு தலைவர்களாக இருப்பார்கள். அனுதாபம் மிக்கவர்கள். மற்றும் மதிப்புமிக்க உறவுகளை பேணிக்காப்பார்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். இவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் இவர்களால் ஆதாயம் உண்டாகும்.