உங்க ஹேண்ட் பேக் ஸ்டைல் சொல்லும் உங்கள் ரகசிய குணம்!

Handbag with girl
Handbag with girl
Published on

வ்வொருவரும் ஹேண்ட்பேக், (Handbag) லேப்டாப் பேக் மற்றும் ஆஃபிஸ் பையை ஒவ்வொரு விதமாக வைத்திருப்பார்கள். சிலர் தோளில் மாட்டுவார்கள், சிலர் கையில் பிடித்திருப்பார்கள், சிலர் நெஞ்சோடு அணைத்து பிடித்து இருப்பார்கள். ஒவ்வொரு விதமும் அவர்களது ஆளுமை தன்மையை வெளிப்படுத்துகிறது என்கிறார் கேத்தலின் ஹென்றிக்ஸ் என்கிற சைக்கோ தெரபிஸ்ட். அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பையை இரண்டு தோள்பட்டைகளிலும் மாட்டி முதுகு புறமாக வைப்பது: நீங்கள் உங்கள் பையை முதுகில் சுமப்பவராக இருந்தால் நீங்கள் யாரையும் சார்ந்து இருக்காத தன்மை உடையவர்கள், பயணங்களை விரும்புபவர்கள், புதுமையான விஷயங்களை எதிர்நோக்குபவர்கள், சாதனை செய்யத் துடிப்பவர்கள், தம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாதவர்கள், வசதியான ஸ்டைலிஷ் ஆன வாழ்க்கையை விரும்புவார்கள், சுதந்திர மனப்பான்மை உடையவர்கள்.

2. கையில் பிடித்துக்கொண்டு செல்வது: பிரீஃப்கேஸை கையில் பிடித்திருப்பது போல சிலர் லேப்டாப் பேக்கை கையில் பிடித்திருப்பர். இப்படிப்பட்டவர்கள் எல்லாமே தன்னுடைய ஆளுமைக்கு கீழ் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஒரு நிறுவனத்தில் மேலதிகாரியாக இருந்தால் அனைவரையும் அடக்கிய ஆள வேண்டும் என்று நினைப்பார்கள். எல்லா விஷயங்களிலும் அப்டேட்டாக இருப்பீர்கள். பிறருக்கு நன்றாக உதவக் கூடியவர்கள். இவர்களுடைய தன்னம்பிக்கை, லட்சியம் போன்றவற்றால் பிறரை எளிதாக கவர்ந்து விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரின் கடமைகள்!
Handbag with girl

3. தோளில் தொங்க விடுவது: சிலர் வலது அல்லது இடது தோளில் பையை தொங்கவிட்டு கொண்டு செல்வார்கள். இவர்கள் நிறைய படிக்கும் பழக்கம் உள்ளவர்கள், திறமைசாலிகள், அதீத தன்னம்பிக்கை உள்ளவர்கள், அதேசமயம் நிறைய தந்திரங்களை கையாள்பவர்கள்.

4. தோளின் குறுக்கே மாட்டிக் கொண்டு செல்லுதல்: சிலர் கழுத்தில் பையின் வாரை மாட்டி அதனுடைய கீழ்பாகம் உடம்பின் முன்பக்கம் வருமாறு தொங்கவிட்டு இருப்பார்கள். இவர்கள் நிறைய பயணம் செய்ய விரும்புவார்கள். யாரையும் சார்ந்து இருக்க விரும்ப மாட்டார்கள். தாராளமாக செலவு செய்யக்கூடியவர்கள். அமைதியான எதற்கும் அலட்டாத குணமுடையவர்கள்.

5. கழுத்தில் மாட்டி வயிற்றின் மேல் தொங்க விடுதல்: இவர்கள் வேகமாக நடக்கக் கூடியவர்கள். கற்பனை சக்தி மிகுந்தவர்கள். இவர்களுக்கென்று சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அசாதாரணமான பழக்க வழக்கங்களை உடையவர்கள். ஆனால், பழகுவதற்கு சுவாரஸ்யமான மனிதர்கள்.

-எஸ். விஜயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com