

இன்றைய சமூக சூழலில் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது (Protection of girls) பெற்றோரின் முக்கிய பொறுப்பாக உள்ளது. ஊடகங்களில் தினந்தோறும் வெளிவரும் செய்திகள் பெற்றோருக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் எதிர்காலமும் பெற்றோரின் சரியான வழிகாட்டுதலிலேயே அமைகிறது.
சுற்றுச்சூழல் மாற்றங்களும் உணவுப் பழக்க வழக்கங்களும் காரணமாக பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே பருவமடைகின்றனர். இதனால் உடல் மற்றும் மன மாற்றங்களை அவர்கள் விரைவாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே பெற்றோர் சில விசயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது அவை என்ன என்று இங்கு பார்ப்போமா..?
உடை தேர்வு
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் உடல்வாகிற்கு ஏற்ற, பாதுகாப்பான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவிக்க வேண்டும். உடை தேர்வு என்பது குழந்தைகளின் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது.
பழக்க வழக்கங்கள்
தினமும் சிறிது நேரம் குழந்தைகளுடன் மனம் திறந்து பேச பெற்றோர் பழகவேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நண்பர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதையும் அவர்களிடம் தெரியப்படுத்தும் தைரியத்தை தரவேண்டும்.
பருவ மாற்ற விழிப்புணர்வு
பெண் குழந்தைகளுக்கு பருவ மாற்றத்தால் ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சி குறித்து தாயார் தெளிவாக விளக்க வேண்டும்.
நல்ல தொடுதல் – கெட்ட தொடுதல்
Good Touch மற்றும் Bad Touch பற்றிய விழிப்புணர்வை வீட்டிலும் வெளியிலும் பெற்றோர் வழங்க வேண்டும்.
நடத்தை கற்றுத்தருதல்
பொது இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத்தருவது பெற்றோரின் கடமையாகும்.
பெற்றோர் சரியான வழிகாட்டுதலுடன் செயல்பட்டால் பெண் குழந்தைகள் பாதுகாப்பான எதிர்காலத்தை அடையமுடியும்.
எல்லா அம்மா-அப்பாக்களுக்கும் தங்கள் மகள்கள் என்றுமே இளவரசிகள்தான். ஆனால் அந்த இளவரசிகளை பாதுகாப்பான வழியில், நல்ல ஒழுக்கத்துடனும் விழிப்புணர்வுடனும் வாழ்க்கைப் பாதையில் நடத்திச்செல்ல வேண்டியது பெற்றோரின் பிரதான கடமையாகும்.