தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் காதல், பிரேக்கப் என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. எனினும், காதலிக்கும்போது அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பதுப்போல உணர்ந்த காதலர்கள் பிரேக்கப் ஆகிவிட்டால், அப்படியே சோகக் கடலில் முழ்கி விடுகிறார்கள். பிரேக்கப்பிற்கு பிறகு வரும் சில உணர்வுகளை எண்ணி வருத்தப்படத் தேவையில்லை. அது எல்லோருக்கும் சாதாரணமாக வரக்கூடியதுதான். அந்த உணர்வுகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. பிரேக்கப் செய்தது சரியான முடிவுதான் என்று தோன்றினாலும், அவர்களை மிஸ் செய்வது, திரும்ப அவர்களிடம் சென்று பேச வேண்டும் என்பது போன்ற உணர்வுகள் கண்டிப்பாக வரும்.
2. அவர்களுடன் இருந்த நல்ல நினைவுகள் மட்டுமே நினைவுக்கு வருவதும், கெட்ட நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுவதும் சகஜமாக நடப்பதே ஆகும்.
3. இவரைப் போல ஒரு பார்ட்னர் வாழ்க்கையில் நமக்கு மறுபடியும் கிடைப்பாரா? என்ற பயம் மனதிற்குள் தோன்றும்.
4. அப்படியே ஒருவரை கண்டுப்பிடித்தாலும், மறுபடியும் முதலில் இருந்து காதலிக்க வேண்டும், Effort போட வேண்டும் என்ற சோர்வான எண்ணம்.
5. அவர்களுடன் நடந்த எல்லா உரையாடலையும் யோசித்துப் பார்த்து ஒருவேளை நாம்தான் தவறு செய்துவிட்டோமோ? என்று நம்மையே குறைக் கூறிக்கொள்ளும் தாழ்வு மனப்பாண்மை.
6. இதுவரை நடந்த கடந்த காலம் மட்டுமில்லாமல், அவர்களுடன் நம் எதிர்காலத்தையும் யோசித்து வைத்திருந்தோம். இனி அதுவும் நடக்காதே என்ற வருத்தம்.
7. அவங்க ரொம்ப ஈஸியா Move on பண்ணியிருப்பார்களோ? நம்மைப் பற்றி யோசிப்பார்களா? மாட்டார்களா? போன்ற தேவையில்லாத எண்ணங்கள்.
8. நம்முடன் இருந்தபோது இருந்ததை விட வேறு யாருடனாவது அவர்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருந்து விடுவார்களோ? என்ற பொறாமை.
காதல் தோல்விக்குப் பிறகு வருத்தப்படுவது, துயரப்படுவது போன்ற உணர்வுகள் சாதாரணமாக அனைவருக்குமே வரக்கூடியதுதான். ஏனெனில், நீங்கள் காதலில் மட்டும் தோற்கவில்லை, அவர்களுடனான எதிர்காலக் கனவுகளும் இல்லை என்று எண்ணும்போது அர்த்தமுள்ள ஒரு உறவு முடிந்து விட்டதற்கான வருத்தம் இருக்கவே செய்யும். அழுகை, துக்கம், வெறுப்பு போன்ற உணர்வுகள், நீங்கள் அந்த வலியில் இருந்து Heal ஆவதற்கு உதவும். இது அனைத்துமே வாழ்வில் முன்னோக்கி சென்று வளர்ச்சியடைவதற்கான ஒரு அனுபவமேயாகும்.