உங்களுக்கு பிரேக் அப் ஆகிவிட்டதா? அப்போ தப்பித்தவறிக் கூட இதை எல்லாம் செஞ்சிடாதீங்க!

Have you had a break up? So don't mess it all up!
Have you had a break up? So don't mess it all up!Image Credits: Coveteur
Published on

ன்றைய காலக்கட்டத்தில் காதலிலும் சரி, உறவுகளிலும் சரி பிரேக் அப் என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஒரு பந்தத்தில் இருக்கும் இருவருமே சேர்ந்துதான் அந்த உறவை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது குறைந்துவிட்டது. இதனால், காதலினால் ஏற்படும் வலி, டிப்ரெஷன், ஸ்ட்ரெஸ் ஆகியவை அதிகம் உண்டாகிறது. அப்படி பிரேக் அப் ஆன பிறகு ஏற்படும் அதிகப்படியான Emotion காரணமாக சில விஷயங்களை கட்டாயம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1.காதலே வேண்டாம்: அதிகமான நபர்கள் பிரேக் அப் ஆன பிறகு எடுக்கும் முடிவு, ‘இனிமேல் என் வாழ்க்கையில் காதல் என்பதே கிடையாது’ என்பதேயாகும். காதல் முறிவினால் ஏற்பட்ட வலி அதிகமாக இருப்பதால், இனி இதுபோன்ற உணர்வை மறுபடியும் அனுபவிக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் திரும்பவும் காதல் செய்யவோ, இல்லை ஒருவரின் மீது நம்பிக்கை வைக்கவோ தயங்குவார்கள்.

2. தனிமை விரும்பிகள்: பிரேக் அப் ஆன பிறகு சிலர் தனிமையை நாட ஆரம்பித்து விடுவார்கள். ‘கொஞ்ச நேரம் எனக்கு தனியாக இருந்தால் போதும்’ என்று நினைப்பார்கள். அவர்களை நினைத்து பரிதாபப்பட்டுக் கொள்வார்கள். அடுத்தவர்களும் இவர்களின் நிலையை பார்த்து பரிதாபப்பட வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் அதிக எமோஷனை கையாள முடியாமல், தன்னுடைய வாழ்க்கையில் நடப்பது எதுவுமே தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.

3.  Patch up செய்ய நினைப்பது: பிரேக் அப் ஆனதற்கு தான்தான் காரணம் என்று நினைத்துக் கொள்வார்கள். சின்ன விஷயத்திற்கு அதிகமாக ரியாக்ட் செய்துவிட்டோம். பிரேக் அப் ஆனதற்கு முழுமையாக தான்தான் காரணம் என்று வருத்தப்படுவார்கள். மறுபடியும் அந்த உறவை சரிசெய்வதற்கான முயற்சிகளை செய்யத் தொடங்குவார்கள்.

4. இன்னொரு காதல்: பிரேக் அப் ஆனதால் ஏற்படும் தனிமை, வலி, வெற்றிடம் ஆகியவற்றை நிரப்ப உடனேயே அவசரமாக இன்னொருவரை காதலிப்பது. உள்ளுக்குள் இவர்கள் இன்னொரு உறவுக்குள் நுழைய தயாராக இல்லை என்றாலுமே காதலால் ஏற்பட்ட வலியை சரி செய்வதற்காக இப்படி அவசரமாக முடிவெடுப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
'Imposter syndrome' என்றால் என்ன தெரியுமா?
Have you had a break up? So don't mess it all up!

இதை சரிசெய்வதற்கான வழிமுறைகள், எதற்காக உங்கள் காதலை பிரேக் அப் செய்தீர்கள் என்பதற்கு நிச்சயமாக நல்ல காரணம் இருக்கும். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவசரமாக இன்னொரு உறவில் நுழைய நினைப்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்களுக்கு நீங்களே அவகாசம் கொடுத்துக்கொள்ளுங்கள். காலம் எல்லா வலிகளையும் ஆற்றக்கூடியதாகும். எனவே, பொறுமையாகக் காத்திருங்கள். 'அவர்கள் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு முன்பு மகிழ்ச்சியாகவே இருந்தீர்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கையில் இல்லை என்றாலும் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள்' என்பதை மறக்க வேண்டாம். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே பிரேக் அப்பில் இருந்து எளிமையாக வெளியே வந்துவிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com