ரவா உணவில் உள்ள ஆரோக்கிய பலன்கள்!

Health Benefits of Rawa Food
Health Benefits of Rawa Food

வை உப்புமா என்றாலே பலருக்கும் அலர்ஜிதான். காரணமே இல்லாமல் பெரும்பாலானோர் ரவை உப்புமாவை வெறுக்கின்றனர். ரவை உப்புமாவில் உள்ள நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம். ரவை உப்புமாவில் கார்போஹைட்ரெட் நிறைந்தும், கொழுப்புச் சத்து குறைந்தும் காணப்படுகிறது. இதை குறைவாக சாப்பிட்டாலே போதுமானது, நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. மேலும், இது சிறந்த ஆற்றல் மூலமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த ஒரு  உணவாகும்.

உடல் எடையை குறைக்கும்: நார்ச்சத்து மிகுந்த ரவா உப்புமாவை குறைவாக சாப்பிட்டாலே நிறைவாக சாப்பிட உணர்வைத் தரும். உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாக இருக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்கள் உப்புமா சாப்பிட்டால் எடை குறையும்.

இரத்த சோகை வராமல் தடுக்கும்: ரவாவில் இரும்புச் சத்து நிறைந்து இருக்கிறது. இது இரத்த சோகை வராமல் தடுக்கும். இரத்த சோகை என்பது இரும்புச் சத்து குறைபாட்டால் வரக்கூடிய பிரச்னை ஆகும். உடல் சோர்வு, அசதி, வலி, எதிலும் பெரிய ஈடுபாட்டுடன் இல்லாமல் இருப்பது, மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இரத்த சோகை பிரச்னை வராமல் தடுக்க ரவா உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரவாவில் இருக்கும் ஊட்டச்சத்துகள்: வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து. பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சோர்வுற்ற மனம் புத்துணர்ச்சி பெற ஆலோசனைகள் ஐந்து!
Health Benefits of Rawa Food

மலச்சிக்கல் பிரச்னைக்கு சிறந்த தீர்வாகும்: ரவாவில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ரவா உப்புமாவில் சேர்க்கப்படும் காய்கள் அனைத்தும் நார்சத்து நிரம்பியவை. இது செரிமானத்தை தூண்டும். மேலும். மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.

ரவா, உடலில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவை குறைகிறது. நல்ல ஆரோக்கியமான கொழுப்பு உடலில் சேரும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com