வீட்டில் வெறுங்காலுடன் நடப்பதில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்!

walking barefoot
Hidden dangers of walking barefoot at home!
Published on

வீட்டில் வெறும் காலுடன் நடப்பது பெரும்பாலும் சுதந்திரம் மற்றும் ஆறுதல் உணர்வை நமக்குக் கொடுத்தாலும், அதில் இருக்கும் ஆபத்துக்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் வீட்டில் வெறுங்காலுடன் நடப்பதில் எதுபோன்ற ஆபத்துக்கள் உள்ளது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். 

வீட்டில் வெறுங்காலுடன் நடப்பதால் நாம் முதலில் சந்திக்கும் பொதுவான ஆபத்து, வீட்டில் உள்ள கூர்மையான பொருட்கள் காலில் குத்திக் கொள்வதாகும். சிறிய கண்ணாடித் துண்டுகள் முதல் சிறிய ரக ஊசி மற்றும் ஆணிகள் வரை, வீட்டில் இருக்கும் பொருட்கள் காலில் குத்திக் கொள்ளும் ஆபத்துக்கள் அதிகம். நீங்கள் சாதாரணமாக பார்ப்பதற்கு தரை சுத்தமானதாக இருந்தாலும், கண்ணில் அகப்படாத நுண்ணிய பொருட்கள் உங்களது காலை பதம் பார்க்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

வழுவழுப்பான தரையில் வெறும் காலுடன் நடப்பது ஆபத்தானதாக இருக்கலாம். குறிப்பாக டைல்ஸ் பொருத்தப்பட்ட தரையில் தெரியாமல் தண்ணீர் சிந்தினாலோ அல்லது எண்ணெய் போன்ற விஷயங்கள் பட்டாலோ வழுவழுப்பாக மாறிவிடும். இதனால் வெறும் காலில் நடப்பவர்கள் வழுக்கி விழும் ஆபத்து உள்ளது. இதனால் சுளுக்கு, எலும்பு முறிவு அல்லது தலையில் காயங்கள் ஏற்படலாம். இவை அனைத்தும் நொடிப்பொழுதில் நடந்துவிடும். 

சூடான மற்றும் ஈரமான சூழலில் பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் புஞ்சைகள் செழித்து வளரும். இவை நமது காலில் பட்டு தொற்றுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இதனால் காலில் அரிப்பு அசௌகரியம் போன்றவற்றை நீங்கள் அனுபவிக்கலாம். எனவே வீட்டின் உள்ளே செருப்பு அல்லது ஏதாவது காலணி அணிவது தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தும். 

இதையும் படியுங்கள்:
வீட்டில் விருந்தா? அவசியம் கவனிக்க வேண்டிய 15 விஷயங்கள்!
walking barefoot

வீட்டில் தெரியாத்தனமாக இடித்துக் கொண்டு அந்த வலியை நாம் அனைவருமே அனுபவித்திருப்போம். இது வெறும் காலுடன் நடப்பதாலேயே ஏற்படுகிறது. வீட்டின் விளிம்புகள், மரச்சாமான்கள் அல்லது பிற கடினமான பொருட்களில் விரல்கள் மோதும்போது, அது கடுமையான வலி மற்றும் காயத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற எதிர்பாராத மோதல்களில் இருந்து கால் விரல்களைப் பாதுகாக்க செருப்பு அணிவது நல்லது. 

அந்த காலம் முதலே வீட்டில் செருப்பு அணிவது தவறாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போதைய சூழலில் நாம் நமது பாதுகாப்பில் முக்கியத்துவம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே வீட்டின் உள்ளே பயன்படுத்துவதற்கு என தனியாக காலணிகளை வாங்குவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com