கலர் கலராக வண்ணம் தூவி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வண்ணங்கள் செயற்கையாக இருப்பதால் உங்கள் உடலைக் காக்க நீங்கள் செய்ய வேண்டியவை.
ஹோலிப் பண்டிகை அன்று வெளியே செல்லும் போது முகத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுங்கள். இப்படி 10 நிமிடம் மசாஜ் செய்தால் முகத்தில் வண்ணங்கள் பட்டாலும் பாதிப்பு ஏற்படாது.
எண்ணெய்:
நீங்கள் உங்கள் உடலில் எண்ணை தடவ வேண்டும். இதன்மூலம் சருமம் வண்ணப் பொடிகள் மூலம் பாதிப்பு அடைவதைத் தடுக்கலாம். இப்படி ஈரப்பதத்தோடு வைத்தால் சருமத்திற்குள் வண்ணங்கள் ஊடுருவாது. நீங்கள் வண்ணங்களையும் எளிதாக அழிக்கலாம். இதற்கு தேங்காய் எண்ணை அல்லது பாதாம் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
பண்டிகை கொண்டாடும் முன் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள் இது ஈரப்பதத்துடன் உங்கள் சருமத்தை வைப்பதால் சருமம் சேதமடைவதைத் தடுக்கும்.
ஹோலி கலர் வண்ணங்களால் உங்கள் தலை முடி பாதிப்படையாமல் இருக்க தேங்காய் எண்ணை அல்லது ஆர்கான் எண்ணை பயன்படுத்தவும். ஹோலிக்கு முன் தலைக்கு ஷாம்பூ போட வேண்டாம். இயற்கை எண்ணை முடியில் இருக்க வேண்டும். முடி வறண்டு இருந்தால் வண்ணம் தண்ணீரை உறிஞ்சி விடும். இரவில் முடிக்கு எண்ணை வைத்து பாதுகாக்கவும்.
நகங்கள்:
நகங்களில் இருக்கும் ஹோலி வண்ணங்களை அகற்றுவது கஷ்டம். இதற்கு நீங்கள் நகங்களில் நெயில் பாலிஷ் அடிப்பது சிறந்த தீர்வாக இருக்கும். இது உங்கள் நகங்கள் மற்றும் வர்ணங்களுக்கு இடையே ஒரு தடுப்பு போல் இருக்கும். இதனால் நகங்கள் பாதுகாக்கப்பட்டு சுத்தமாக இருக்கும்.
ஹோலி ஏன் கொண்டாடப்படுகிறது?
பனிக்காலம் முடிந்து வெயில் வரும் போது நச்சுயிரி தொடர்பாக சளி காய்ச்சல் வரும். இதை எதிர்க்க ஹோலி கொண்டாடுகிறார்கள். ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்தினம் ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடத்துவார்கள்.
இப்பூஜையில் மரக்கட்டைகள் அடுக்கி தீமூட்டி அக்னி தேவனுக்கு தேங்காய் தாம்பூலம் வைத்து பூஜை நடத்துவார்கள். ஹோலி தகனம் மற்றும் பக்த ப்ரஹ்லாதன் உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சி ஹோலியை இன்னும் மகிழ்ச்சியாக மாற்றுகிறது. இந்த மகிழ்ச்சியைத் தான் ஹோலி ஹோலி என்று கத்தி வண்ணப் பொடிகள் தூவி கொண்டாடுகிறார்கள். இந்தப் பொடிகள் காற்றில் உயரே பறந்து தேவர்களை மகிழ்விக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முன்பு இந்த வண்ணங்கள் வேப்பிலை, குங்குமம், மஞ்சள் வில்வம் போன்றவற்றால் செய்யப்பட்டது. நாளடைவில் வியாபார நோக்கத்திற்காக செயற்கை வண்ணங்கள் அதிகம் விற்கப்படுகின்றன. சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்காத இயற்கை வண்ணங்களைக் கொண்டு, ஹோலியை ஜாலியாகக் கொண்டாடுங்கள்.