வீட்டு கார்பெட்டை எளிதாக சுத்தம் செய்யும் ரகசியங்கள்! 

Carpet Cleaning
Home Carpet Cleaning Secrets Made Easy.

வீட்டில் உள்ள கார்பெட் என்பது வீட்டுக்கு அழகு மற்றும் வசதியை சேர்க்கும் ஒரு முக்கிய பொருளாகும். ஆனால் இது பெரும்பாலும் தரையில் பரப்பப்பட்டிருப்பதால் அழுக்கு, தூசி மற்றும் கறைகள் எளிதாகப் படிந்துவிடும். அதனால் கார்பெட்டை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பெரும்பாலானோருக்கு கார்பெட் சுத்தம் செய்வது ஒரு சோர்வான மற்றும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் வேலையாகத் தோன்றலாம். ஆனால், சில எளிய டிப்ஸ் மற்றும் யுக்திகளைப் பயன்படுத்தி உங்கள் கார்பெட்டை நீங்கள் எளிதாகவும் விரைவாகவும் சுத்தம் செய்யலாம். 

வேக்யூம் கிளீனிங்: உங்கள் வீட்டில் வேக்யூம் கிளீனர் இருந்தால் வாரத்திற்கு ஒருமுறையாவது கார்பெட்டை வேக்யூம் செய்யுங்கள். இது அதில் உள்ள தூசி, அழுக்கு மற்றும் குப்பைகளை அகற்ற உதவும். கார்பெட்டின் எல்லா மூலைகளையும் நன்றாகத் தேய்த்து வாக்யூம் செய்ய வேண்டியது அவசியம். 

முன் சிகிச்சை: கார்பெட்டில் விடாப்பிடியான கரைகள் இருந்தால், அவற்றிற்கு முன் சிகிச்சை அளிக்க வேண்டும். அதாவது கரையின் வகைக்கு ஏற்ப சரியான கரை நீக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, அந்த குறிப்பிட்ட அதிகப்படியான கறைகளை கட்டாயம் நீக்க வேண்டும். ஏனெனில் கார்பை மொத்தமாக சுத்தம் செய்யும்போது, இந்த கறைகள் அப்படியே போகாமல் இருக்கும் வாய்ப்புள்ளது. 

கார்பெட் ஷாம்பு: மாதத்திற்கு ஒருமுறை உங்கள் கார்பெட்டை கார்பெட் ஷாம்பு பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். இது கார்பெட்டில் உள்ள ஆழமான அழுக்கு மற்றும் கரைகளை அகற்ற உதவும். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் கார்பெட் ஷாம்பூ நிச்சயம் இருக்கும். அதனை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். 

பேக்கிங் சோடா: கார்பெட் ஷாம்பூ இல்லாதவர்கள், கார்பெட்டில் இருந்து கரைகளை நீக்க பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இது மிகவும் எளிதானது. கரை அதிகமாக இருக்கும் இடத்தில் பேக்கிங் சோடாவைத் தூவி, கொஞ்ச நேரம் அப்படியே விடுங்கள். பின்னர் அந்த இடத்தை அழுத்தி தேய்த்தால் கார்பெட்டில் உள்ள விடாப்பிடியான கரைகள் நீங்கிவிடும். 

வினிகர்: வினிகர், கார்பெட்டில் இருக்கும் மோசமான வாசனையை நீக்க உதவும். ஸ்ப்ரே பாட்டிலில் சம அளவு தண்ணீர் மற்றும் வினிகரைக் கலந்து கார்பெட் மேல் லேசாக தெளிக்கவும். பின்னர் காற்றோட்டம் அதிகம் நிறைந்த இடத்தில் கார்பெட்டை சிறிது நேரம் காய விடவும். 

இதையும் படியுங்கள்:
Unique Tourist Place: கண்ணாடி மூலம் சூரிய ஒளி பெரும் கிராமம்!
Carpet Cleaning

சூரிய ஒளி: கார்பெட்டை நன்கு சுத்தம் செய்ததும் அதை சூரிய ஒளியில் போடுவது நல்லது. ஏனெனில் சூரிய ஒளியால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் எல்லாம் மடிந்துவிடும். 

இந்த எளிய டிப்ஸ் மற்றும் யுக்திகளைப் பின்பற்றி உங்கள் கார்பெட்டை விரைவாக சுத்தம் செய்யலாம். கார்பெட்டை சுத்தம் செய்யும்போது அதற்கு ஏற்ற சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தவும். மேலும் கார்பெட்டை அதிக நேரம் தண்ணீரில் நனைக்காதீர்கள். அதை சுத்தம் செய்ததும் சூரிய ஒளியில் போட்டு நன்றாக காய விட வேண்டும். இல்லையே ஈரப்பதத்தில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் வளரும் வாய்ப்புள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com