Inverter Battery நீண்ட காலம் உழைக்க செய்ய வேண்டியவை!

Inverter Battery
Home Inverter Battery Maintenance Tips

வீட்டில் இன்வெர்ட்டர் சிஸ்டம் இருந்தால், முக்கியமான தருணங்களில் மின்சாரம் தடைப்படும்போது அது நமக்கு உதவியாக இருக்கும். ஆனால் இன்வெர்ட்டர் பேட்டரியின் ஆயுட்காலம் நீடித்து உழைக்க அதை நாம் முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் வீட்டு இன்வெர்ட்டர் பேட்டரியை பராமரிப்பதற்கான சில எளிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். 

சுத்தம் செய்தல்: பேட்டரி மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூசிகள் மற்றும் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருங்கள். பேட்டரியை அவ்வப்போது உலர்ந்த துணியைப் பயன்படுத்தி துடைக்கவும். இது அழுக்குகள் குவிவதைத் தடுத்து நல்ல மின் இணைப்புக்கு வழிவகுக்கும். 

டிஸ்டில்டு வாட்டர் சரிபார்ப்பு: நீங்கள் Lead-Acid பேட்டரி பயன்படுத்தினால் அதன் நீர் அளவை தவறாமல் பரிசோதிக்க வேண்டும். சரியான அளவு தண்ணீர் இல்லை என்றால், அவை சூடாகி வெடிக்கும் அபாயம் உள்ளதால், அவற்றில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருப்பதை உறுதி செய்யுங்கள். குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது அவற்றின் அளவை சரிபார்த்து தேவைப்பட்டால் கடையில் டிஸ்டில்டு வாட்டர் வாங்கி ஊற்றவும். 

பேட்டரியை அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: அதிக நேரம் இன்வெர்ட்டர் பேட்டரியை பயன்படுத்தி அதில் உள்ள மொத்த மின்சாரத்தையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிக டிஸ்டார்ஜ் செய்வது பேட்டரியின் ஆயுளை குறைத்து அதன் திறனையும் குறைக்கும். பேட்டரியின் அளவு 50 சதவீதம் வந்த உடனேயே ரீசார்ஜ் செய்யவும். 

வழக்கமான சார்ஜிங்: மின்வெட்டு இல்லாத தருணங்களிலும் பேட்டரியை தொடர்ந்து ரீசார்ஜ் செய்வது முக்கியம். எனவே எப்போதும் பேட்டரி மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும். பேட்டரியின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதன் உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட சார்ஜிங் கால அளவைப் பின்பற்றவும். 

டெர்மினல்களை ஆய்வு செய்யவும்: பேட்டரி டெர்மினல்களில் ஏதேனும் அரிப்பு அல்லது லூஸ் கனெக்சன் உள்ளதா என சரிப்பாருங்கள். அறிக்கப்பட்ட டெர்மினல்கள் பேட்டரியின் செயல் திறனை பாதிக்கலாம். ஒருவேளை டெர்மினல்கள் அறிக்கப்பட்டு இருந்தால் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரின் கலவையைப் பயன்படுத்தி அதை சுத்தம் செய்யவும். இது நல்ல மின் தொடர்பை பராமரித்து டெர்மினல்கள் பாதுகாப்பாக இருக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்! 
Inverter Battery

அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும்: இன்வெர்ட்டர் பேட்டரிகள் வெப்பநிலையால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவை. எனவே பேட்டரியை அதிக வெப்பம் மற்றும் ஈரமான பகுதிகளில் பொருத்துவதைத் தவிர்க்கவும். நல்ல காற்றோட்டம் நிறைந்த இடத்தில் பேட்டரியை வைப்பது நல்லது.

மேலும் உற்பத்தியாளர்கள் வழிகாட்டியுள்ள பராமரிப்பு குறிப்புகளை முறையாகப் பின்பற்றவும். ஏனெனில் ஒவ்வொரு பேட்டரி வகைக்கு வெவ்வேறு விதமான பராமரிப்பு தேவைகள் இருக்கலாம். எனவே அதற்கு ஏற்றவாறு பேட்டரியை முறையாக பராமரித்தால், அதன் ஆயுளை அதிகரிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com