அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்! 

Fat Man with High Cholesterol
High Cholesterol

நமது உடலில் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பது இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. அதிக கொலஸ்ட்ரால் அளவு பல்வேறு இருதய நோய்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த நமது உணவில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உள்ள நோயாளிகள் சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அத்தகைய உணவுகள் என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

  1. நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும். சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், அதிக கொழுப்புடைய பால் பொருட்கள், வெண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் தேங்காய் போன்ற உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும். 

  2. எண்ணெயில் வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் பெரும்பாலும் ட்ரான்ஸ் கொழுப்புகள் அல்லது ஆரோக்கியமற்ற எண்ணெய்கள் இருக்கும். இவை LDL கொழுப்பின் அளவை கணிசமாக உயர்த்தும். இவற்றை உட்கொள்வதற்கு பதிலாக வேகவைத்த அல்லது எண்ணெயில்லாமல் வறுத்த உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுங்கள். முடிந்தவரை உணவுகளை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது நல்லது. 

  3. அதிக கொழுப்புடைய பால், கிரீம், சீஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்கள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். இவற்றிற்கு பதிலாக கொழுப்பு குறைவாக இருக்கும் பால், தயிர், சீஸ் ஆகியவற்றை தேர்வு செய்யவும். இவற்றிற்கு மாற்றாக பாதாம் பால் அல்லது சோயா பால் போன்ற தாவர அடிப்படையிலான பால் பொருட்களை பயன்படுத்துங்கள். 

  4. முட்டையில் அதிகப்படியான புரதச்சத்து இருந்தாலும் அதன் மஞ்சள் கருவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வதைக் குறைத்து, கொலஸ்ட்ரால் இல்லாத முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். 

  5. துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெட்ட கொழுப்புகளும் அதிக சோடியம் அளவு இருக்கும். இது இதய பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இத்தகைய உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். 

  6. மேலும், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட கேக், குக்கீஸ், பேஸ்ட்ரி மற்றும் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இது உடல் எடையைக் கூட்டி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். அவற்றுக்கு பதிலாக பழங்கள், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சர்க்கரை குறைவாக இருக்கும் பானங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. 

இதையும் படியுங்கள்:
Absurdism: என் மனநிலையை மாற்றிய தத்துவம்!
Fat Man with High Cholesterol

இத்தகைய உணவுகளை தவிர்ப்பதால், கொலஸ்ட்ரால் அளவு மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்கள் எதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என ஆலோசனை தேவைப்பட்டால் ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com