
இல்லத்தை அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருந்தால் வீடு சுபிட்சமாகவும், பார்க்கிறவர்கள் கண்களுக்கு ஆச்சரியமாகவும், விருந்தாகவும், பாராட்டாகவும் அமையும்.
வீட்டின் வெளியே, உள்ளே வெள்ளை பெயிண்ட் அடித்தால் சுகர் அழகை கூட்டும் அறைக்கு ஒளிகூட்டவும் செய்யும்.
ஒவ்வொரு அறையிலும் அங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு தனிப்பட்ட கலை பொருளை சுற்றி சில அலங்கார அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். இதனால் அறை அழகாகும். சமையலறையில் கூட இந்த முறையை பின்பற்றலாம்.
ஜன்னலின் திரைச்சீலைகளை ஜன்னலின் மேல் மட்டத்திலிருந்து சற்று உயர்த்தி அமைத்து தொங்கவிடலாம். இது ஜன்னலுக்கு தனி அழகை தரும்.
வீடு சிறியதாக இருக்கிறதா? சாப்பாட்டு மேஜையின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வட்டமேஜை அந்த அறையை பெரிதாக காட்டும்.
சுவர்களை மிதமான வண்ணங்கள் பூசினால் அவை யாரை பெரிதாகக்காட்டும்.
சிறிய அறைகளின் சுவர்களில் மாற்றப்படும் மிகப்பெரிய படங்கள் அறையின் விசாலத்தை அதிகரித்துக் காட்டும்.
சிறிய அறைகளை பெரிதாக காட்டிக்கொள்ள அறையில் பெரிய நிலைக்கண்ணாடியை மாட்டலாம்.
சுவர்களிலேயே அமைக்கப்படும் அலமாரிகள் சிறிய வீடுகளுக்கு ஒரு மிகப்பெரிய வரம். வீட்டில் உள்ள சிறிய பொருட்களை அதன் உள்ளேயே அடக்கி ஒழுங்கு படுத்தினால் வெளியே தெரியாது.
மடக்கி வைக்கக் கூடிய வகையில் உள்ள சாமான்கள் சிறிய அறைகளுக்கு மிகவும் ஏற்றவை.
சுவரில் தொலைக்காட்சி மாட்டப்பட்டிருந்தால் சிறிய அறையும் பெரிதாக தெரியும். பெரிய ஷோகேஸ் உடனான டிவி அலமாரி சிறிய வீடுகளுக்கு தேவையில்லை.
மேஜை
வீடு சிறியது என்றால் ஒரே நேரத்தில் சாப்பாட்டு மேஜையாகவும் அலுவல் மேஜையாகவும் பயன்படுத்தலாம். பகலில் இருக்கையாகவும், இரவில் படுக்கையாகவும் ஃபர்னிச்சர்களை தேர்வு செய்யலாம்.
படுக்கையறை
படுக்கை அறையில் படுக்கை விரிப்புகள் எப்போதும் விரிக்கப்பட்ட நிலையில் நேர்த்தியாக விரித்து இருக்கட்டும். வேலைகள் எதுவும் நினைத்தபடி நடக்கவில்லை என்றாலும் கூட இரவு நேரத்தில் நிம்மதியாக உறங்க ஒரு படுக்கை அறையாவது தயார் நிலையில் இருக்கலாம்தானே!
சுவரில் மாட்டப்படும் படங்கள் நம் கண் மட்டத்தில் இருந்து பார்க்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஹால்
ஹாலில் உள்ள காபி மேஜையின் மீது சாவி, கைக்கடிகாரம். கண்ணாடி என்ன சகலத்தையும் வைக்க ஒரு சிறிய ட்ரே ஒன்று எப்போதும் இருக்கட்டும். அதில் வைத்தால் எடுத்துக் கொள்ள சுலபமாக இருக்கும்.
ஹாலை மேலும் அழகாக்க குஷன்களால் முடியும். ஆம், சோபாவில் வைக்கப்படும் பலவகையான அல்லது ஒரே மாதிரியான குஷன்கள் அந்த அறையின் அழகையே கூட்டும் தன்மை கொண்டவை.
ஹாலின் சுவர்களில் மாட்டப்படும் படங்கள் நீங்களே உருவாக்கியதாக இருந்தால், கூடுதல் அழகாக இருக்கும். குழந்தைகளின் அழகு கிறுக்கலான ஓவியங்கள் கூட சட்டமிட்டு மாட்டலாம்.
வரவேற்பறையில் டி.வி. ரிமோட், ஏ.சி ரிமோட்களை ஒரு கூடையில் வைக்கலாம். சுத்தத்துக்கு சுத்தம். தேட வேண்டிய வேலையும் இருக்காது.
ஹாலின் வரவேற்பைறையில் மணி பிளான்ட் வைக்கலாம் பழைய கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வைத்து மணி பிளாண்ட் செடி வைத்தால் வீடு பசுமையைக் கூட்டிக் காட்டும்.
வீட்டின் இன்னொரு ஷோகேஸ் ஆக மாறும் வல்லமை புத்தக அலமாரிக்கு உண்டு. புத்தகங்களுக்கு இடைய கலை பொருட்களை வைக்கலாம். புத்தகங்களை நேராகத்தான் வைக்க வேண்டும் என்பதில்லை. நேராக, படுக்க வைத்து என மாற்றி மாற்றி அடுக்கலாம்.
பல இழுப்பறைகளைக் கொண்ட மேஜையை பலவிதமான பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்க உபயோகிக்கலாம். உதாரணம் மருந்துகள், அழகு சார்ந்த பொருட்கள், நகைகள் என பிற பொருட்கள்ணைக்கலாம்.
தேவையற்ற பொருட்களை மாதம் ஒரு முறையாவது அகற்றி அவற்றில் தேவை உள்ளவர்களுக்கு அல்லது மறுசுழற்சி செய்யவோ கொடுத்து விடுங்கள். வீடு குப்பை இல்லாமல் இருக்கும்.
பல் துலக்கும் ப்ரஷ்கள், பற்பசை போன்றவற்றை பாத்ரூமில் வைக்காமல் அதன் வெளியே ஒரு பிரஷ் ஸ்டாண்டை மாட்டி அதில் வைக்கலாம். இதனால் உடல் நலம் பாதிக்காமல் இருப்பது தொடர்புடையது.
இப்படி வீட்டை சுத்தமாக, எளிமையாக அழகாக வைத்தால் வீடு சுத்தமாகவும் நோயும் வராமல் தடுக்கலாம்.