மொட்டை மாடியையும் சொர்க்கமாய் மாற்றலாம்: இதோ 8 சூப்பர் ஐடியாக்கள்!

Home Maintanance
Home Maintanance
Published on

சிறிய வீட்டுக்கான மொட்டை மாடி வடிவமைப்பு என்பது சிறிய இடத்திலும் நல்ல திட்டமிடல், பொருத்தமான அலங்காரம் மற்றும் வசதிகள் செய்து அழகாக மாற்ற முடியும். (Home Maintanance) இருக்கும் இடத்தை சிறப்பாக பயன்படுத்துவதும், வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்தும் வகையில் அழகாக அமைப்பதும், பசுமையை சேர்ப்பதும் சூழலை இனிமையாக்கும்.

மடக்கக்கூடிய தளபாடங்கள் (space saving furniture):

இடத்தை மிச்சப்படுத்த மடிப்பு மேசை, நாற்காலிகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். பீன் பைகளை (Bean bags) பயன்படுத்துவதன் மூலம் அழகு சேர்க்கலாம். இவற்றை தேவைக்கேற்ப விரித்து, தேவைப்படாதபொழுது மடித்து வைக்க இடத்தை மிச்சப்படுத்த முடியும்; அத்துடன் மாடியை விசாலமாகவும் காட்டும். இது காலை உணவு, யோகா போன்றவற்றிற்கு உதவும்.

பல பயன் இடங்கள்:

தரை மெத்தைகள், Bean bags பயன்படுத்தலாம். இது ஓய்வெடுக்கவும், நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் ஏற்ற வகையில் இருக்கும். நவீன டைல்ஸ் அல்லது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கூல் ரூஃப் ஓடுகள் பயன்படுத்தலாம். மொட்டை மாடிக்கு நவீன தோற்றம் கொடுக்க 'போர்சலான் டைல்ஸ்' அல்லது மரக்கட்டைகள்(Wooden Decks) பயன்படுத்தலாம்.

சமையல்/பார்பிக்யூ:

சிறிய சமையல் பகுதி அல்லது கிரில் அமைப்பது, மடிப்பு மேசைகள் மற்றும் நாற்காலிகள் காலையில் உணவுக்காக விரித்து வைக்கலாம். பிறகு தேவை முடிந்ததும் மடித்து வைக்கலாம். உயர்தர மரத்தாலான அல்லது உலோக மடிப்பு மேசைகள், நாற்காலிகளை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
இளைஞர்களே! வீட்டுப் பராமரிப்புக்கு இனி ‘நிபுணர்கள்’ தேவையில்லை! இந்த 6 விஷயங்கள் தெரிந்தால் நீங்களே பாஸ்!
Home Maintanance

சிறந்த பணியிடமாக்கலாம்:

இப்பொழுது வீட்டிலிருந்தே வேலை செய்வது (work from home) அதிகரித்து வருகிறது. அதற்கு இந்த சிறிய மொட்டை மாடியை சிறந்த பணியிடமாக மாற்றலாம். சுவர் மேசைகள், வேலை செய்வதற்கு ஏற்ற நாற்காலிகள் மற்றும் கணினிக்கு ஏற்ற மேசைகள் அமைத்து வேலை செய்யலாம். மழையிலிருந்தும், சூரிய ஒளியிலிருந்தும் பாதுகாக்க பெரிய நவீன நிழற்குடையை பொருத்தலாம் அல்லது சிறிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய கூரைகள் அமைக்கலாம். இயற்கையான சூழலில் வேலை செய்வது மன அழுத்தத்தை போக்குவதுடன் ரிலாக்ஸாக இருக்கவும் உதவும்.

எளிய மற்றும் அழகான அலங்காரங்கள்:

அழகான அமைதியான சூழ்நிலை உருவாக்குவதற்கு மென்மையான வண்ணங்களை சுவருக்கும், அழகிய போன்சாய் மரங்கள், புத்தர் சிலைகள் போன்ற எளிய அலங்காரங்கள் சிறிய இடத்திற்கு அழகை கூட்டும். சுவரைத் திரையாகப் பயன்படுத்தி சினிமா பார்ப்பதற்கு ப்ரொஜெக்டர் திரையை அமைக்கலாம். அலங்கரிக்கப் பட்ட கைப்பிடிச் சுவர்கள் (parapet walls) அழகுடன் பாதுகாப்பையும் தரும்.

விளக்கு அலங்காரம்:

சிறிய வீட்டிற்கு அலங்காரம் செய்ய, இடத்தை சேமிக்கும் சுவர் விளக்குகள் (wall lamps) தொங்கும் விளக்குகள்(pendant lights) மற்றும் சீரியல் பல்புகள் போன்றவற்றை தேர்வு செய்யலாம். இவை வீட்டைப் பெரியதாகவும், அழகாகவும் காட்ட உதவும். மொட்டை மாடியைச் சுற்றிலும் ஸ்ட்ரிங் லைட்ஸ் (String lights) அல்லது லாந்தர் விளக்குகளை பயன்படுத்துவது இரவு நேரங்களில் ஒரு ரம்யமான, அழகிய சூழலை உருவாக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் பாத்திரம் கழுவும் சிங்க்கில் முகம் பார்க்க வேண்டுமா... இதோ ஒரு சூப்பர் டெக்னிக்!
Home Maintanance

செங்குத்து தோட்டம்:

இடம் குறைவாக இருப்பதால் சுவர் பகுதியை பயன்படுத்தலாம். சிறிய இடத்தில் செடிகளை வளர்க்க செங்குத்து தோட்டங்கள் சிறந்தவை. மூலிகைகள், சதைப்பற்றுள்ள தாவரங்கள், சிறு பூச்செடிகளை வளர்க்க சுவரில் மரத்தட்டுகள் அல்லது உலோகத் தட்டிகளை பயன்படுத்தலாம். இது பசுமையான சூழலுடன் கண்ணுக்கும், மனதிற்கும் இதம் தரும் வகையில் இருக்கும். காற்றையும் சுத்தப்படுத்தும். பலத்த காற்று வீசும் இடங்களில் சிறிய செடிகளை பாதுகாக்க 'விண்ட் பிரேக்கர்களை' அமைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com