உங்கள் பாத்திரம் கழுவும் சிங்க்கில் முகம் பார்க்க வேண்டுமா... இதோ ஒரு சூப்பர் டெக்னிக்!

Kitchen Sink
Kitchen Sink
Published on

நாம் தினமும் மூன்று வேளையும் சமைக்கிறோம், சாப்பிடுகிறோம். சாப்பிட்ட தட்டுகளைப் பளபளக்கக் கழுவி அடுக்கி வைக்கிறோம். ஆனால் அந்தப் பாத்திரங்களைக் கழுவும் சிங்க் (Kitchen Sink) சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்தால் பல வீடுகளில் அது கவலைக்கிடமாகவே இருக்கும். 

பாத்திரம் கழுவும் இடம்தானே என்று நாம் அதை அலட்சியமாக விட்டுவிடுகிறோம். ஆனால் உண்மையில் நம் சமையலறையில் கிருமிகள் அதிகம் தங்கும் இடம் அதுதான். உங்கள் வீட்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க்கை எப்படிப் புத்தம் புதியது போல மாற்றுவது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.

எச்சரிக்கை: சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் இரும்பு நாரைக் கொண்டு சிங்க்கைத் தேய்க்கக் கூடாது. அது சிங்க்கில் கீறல்களை உண்டாக்கிவிடும். அதேபோல ப்ளீச் போன்ற கடுமையான ரசாயனங்களையும் பயன்படுத்தக் கூடாது. மென்மையான ஸ்பாஞ்ச் மற்றும் மைக்ரோ ஃபைபர் துணிகளே இதற்குப் போதுமானது.

முதலில் சிங்க்கில் இருக்கும் பாத்திரங்கள் மற்றும் உணவுத் துகள்களை அகற்றிவிட வேண்டும். பின்னர் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் பாத்திரம் கழுவும் சோப் அல்லது லிக்விட் கொண்டு சிங்க் முழுவதையும் ஒரு முறை தேய்க்க வேண்டும். இது சிங்க்கில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கு மற்றும் மேலோட்டமான அழுக்குகளை நீக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
வீடு குப்பை மேடா இருக்கா...?இந்த பிளாஸ்டிக் டப்பா மேஜிக் தெரிஞ்சா அசந்துடுவீங்க!
Kitchen Sink

மேஜிக் கலவை! 

அடுத்ததாக, சிங்க்கை ஜொலிக்க வைக்கச் சந்தையில் கிடைக்கும் பிரத்யேக ஸ்டீல் கிளீனர்களைப் பயன்படுத்தலாம் அல்லது நம் வீட்டில் இருக்கும் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். சிங்க் முழுவதும், குறிப்பாகக் குழாய்கள் மற்றும் கைப்பிடிகள் இணையும் இடுக்குகளில் இந்தக் கலவையைத் தடவி நன்கு தேய்க்க வேண்டும். பழைய பல் துலக்கும் பிரஷ் இருந்தால் இடுக்குகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம். தேய்த்த பிறகு உடனே கழுவவேண்டாம். ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். இந்த நேரத்தில் அந்த மருந்து அழுக்குகளை முழுமையாகக் கரைத்துவிடும்.

ஐஸ் கட்டி!

சிங்க்கில் இருந்து வரும் கெட்ட வாடையைப் போக்க ஒரு சூப்பர் டிப்ஸ் உள்ளது. சிங்க் ஓட்டைக்குள் அரை கப் பேக்கிங் சோடாவைக் கொட்டி, அதன் மேல் ஒரு கப் வினிகரை ஊற்ற வேண்டும். இது நுரைத்துக் கொண்டு வரும்போது, உள்ளே இருக்கும் அடைப்புகள் மற்றும் அழுக்குகளை இது அரித்து எடுத்துவிடும். அதன் பிறகு சில ஐஸ் கட்டிகளை உள்ளே போட்டுத் தண்ணீர் ஊற்றினால், உள்ளே இருக்கும் கெட்ட வாடை போயே போய்விடும்.

இதையும் படியுங்கள்:
Interview: "குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் பத்து நாட்களுக்கு மாட்டுப்பால் கொடுக்கக் கூடாதாமே... இது உண்மையா?"
Kitchen Sink

பத்து நிமிடம் ஊறிய பிறகு, சிங்க்கை நன்கு தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். இங்குதான் பலரும் தவறு செய்கிறார்கள். கழுவியவுடன் அப்படியே விட்டுவிடக் கூடாது. ஒரு காய்ந்த துணியை வைத்துத் துடைக்க வேண்டும். ஈரம் இருந்தால் தண்ணீர் திட்டுக்கள் உருவாகிவிடும். துடைத்த பிறகு பார்த்தால் உங்கள் சிங்க், கடைசியில் இருந்து வாங்கி வந்த புது சிங்க் போலவே மின்னும்.

சிங்க் சுத்தமாக இருந்தால் சமையலறையே அழகாகத் தெரியும். விருந்தினர்கள் வரும்போது சிங்க்கைப் பார்த்து முகம் சுளிக்காமல், ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்ற இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com