வீட்டில் ஈ தொந்தரவு தாங்க முடியவில்லையா? இனி கவலை வேண்டாம். ரசாயனங்கள் நிறைந்த பூச்சிக்கொல்லிகளை நம்புவதற்கு பதிலாக, எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தியே ஈக்களை நாம் அடியோடு விரட்ட முடியும். இதை செய்வது மிகவும் எளிது மற்றும் சுற்றுச்சூழலுக்கு இதனால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது.
Vinegar Trap: ஒரு சிறிய கிண்ணத்தில் ஆப்பிள் சைடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரை சேர்க்கவும். கிண்ணத்தின் மேலே பிளாஸ்டிக் கவரை மூடி அதன் நடுப்பகுதியில் சிறு துளைகளை குத்துங்கள். வினிகர் வாசனை ஈக்களை ஈர்க்கும். மேலும் அந்த துளை வழியாக அவை உள்ளே நுழைந்ததும், வெளியே அவற்றால் வர முடியாது.
நறுமண எண்ணெய்கள்: சில நறுமண எண்ணெய்களின் வாசனையை ஈக்கள் விரும்புவதில்லை. எனவே யூக்கலிப்டஸ், லாவண்டர் போன்ற எண்ணெயை சிறிதளவு தண்ணீருடன் கலந்து வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்து வைத்தால், ஈக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
ஃப்ளை பேப்பர்: ஜன்னல்கள் அல்லது ஈக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு அருகில் ஒட்டும்படியான ஃப்ளை பேப்பரை தொங்கவிடவும். அந்த காகிதத்தின் பிசுபிசுப்பான மேற்பரப்பு, அதன் மீது ஈ அமரும்போது அப்படியே பிடித்துக் கொள்ளும்.
எலுமிச்சை மற்றும் கிராம்பு: எலுமிச்சையை பாதியாக வெட்டி அதில் கிராம்புகளை சொருகவும். ஈக்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் இந்த கிராம்பு சொருங்கிய எலுமிச்சையை வைக்கவும். இதன் தனித்துவமான வாசனை ஈக்களை விரட்டிவிடும்.
ஈ விரட்டி ஸ்பிரே: உங்களிடம் ஒரு ஸ்ப்ரே பாட்டில் இருந்தால் போதும் தண்ணீர் மற்றும் வினிகரைக் கலந்து மிகவும் எளிதாக ஈ விரட்டி ஸ்பிரே உருவாக்க முடியும். இந்த கலவையில் கொஞ்சமாக சோப் சேர்த்து குலுக்கினால் நன்றாக நுரைத்து வந்துவிடும். இதை ஜன்னல்கள் கதவுகள் மற்றும் ஈக்கள் அதிகம் நுழையும் பகுதிகளைச் சுற்றி தெளிக்கவும்.
ஈக்கள், உணவு மற்றும் குப்பைகளால் அதிகம் ஈர்க்கப்படுகின்றன. எனவே வீட்டை தூய்மையாக பராமரிப்பது அவசியம். எனவே, வீட்டில் உள்ள குப்பை தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். மேலும், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சுகாதாரமாக இருந்தாலே வீட்டிற்குள் ஈக்கள் நுழைவதைத் தடுக்கலாம்.