மருத்துவமனைக்கு விசிட் - நச்சரிக்காதீங்க!

 Hospital
Hospital
Published on

மருத்தவ மனையில் அட்மிட் ஆகியிருக்கும் நபரை காண செல்லும் பொழுது செய்ய வேண்டிய, செய்ய கூடாதவை பற்றி... சிலரின் அனுபவங்கள் மற்றும் கூர்ந்து கவனித்த விஷயங்கள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

  • கூடிய மட்டும் மவுனமாக இருப்பது மிக்க அவசியம்.

  • அங்கு அட்மிட் ஆகியிருக்கும் நபரிடம் அதிமான மற்றும் அனாவசியமான கேள்விகள் கேட்பதை தவிர்ப்பது அவசியம்.

  • எந்த வகை மருந்து எடுத்துக் கொள்கிறார், எவ்வளவு முறை, என்ன உணவு போன்ற கேள்விகள் அங்கு அட்மிட் ஆகியிருக்கும் நபருக்கு நன்மை செய்வதை விட, அதிகமாக எரிச்சல் ஏற்படுத்தும்.

  • உதவி செய்ய முடியாவிட்டாலும் , உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும்.

  • எந்த டாக்டர் பார்க்கிறார், எவ்வளவு முறை ரவுண்ட்ஸ் வருகிறார் என்ற வினாக்கள் நோயை குணப்படுத்தப் போவது இல்லை என்று உணர்ந்து செயல் பட வேண்டும்.

  • அந்த நபரை காண சென்று இருக்கும் சமயத்தில் உங்களைப் போல் வந்து இருக்கும் மற்றவரிடம் பேஷண்டை மறந்து விவாதத்தில் இறங்குவதை தவிர்க்கவும். அது மருத்தவமனை அறை, பட்டிமன்ற விவாத மேடையில்லை என்பது அறிந்துக் கொள்வது மிக முக்கியம்.

  • சில விசிட்டர்கள் தங்களை மறந்து இப்படி தான் என் உறவினருக்கு ஆயிற்று என்று பேச ஆரம்பித்து லயித்து போய், பேஷண்டுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தி விடுகிறார்கள்.

  • போய் பார்த்து விட்டு.தேவைக்கு ஏற்ப சிறிது உரையாடி விட்டு அங்கிருந்து கிளம்பினால், அட்மிட் ஆகியிருக்கும் நபருக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி ஆகும்.

  • மருந்து, மாத்திரை, டெஸ்டுக்கள், உணவு இவைகளைப் பற்றி நீங்கள் உங்கள் ஒப்பீனியன் கூறுவதை தயவு செய்து செய்யாதீர்கள்.

  • முடிந்தால் ஊக்கப் படுத்தக் கூடிய வார்த்தைகளை கூறி உற்சாகப் படுத்துஙகள்.

  • தயவு செய்து எதிர் மறை வார்த்தைகள், சொற்கள் கூறி, பேஷண்ட் மற்றும் அங்கு இருக்கும் அவரது நெருங்கிய உறவினர்களை அதைரிய படுத்தாதீர்கள்,

  • அட்மிட் ஆகியிருக்கும் நபருக்கு நகைச்சவையாக பேசி மகிழ வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
இந்த குணாதிசயங்கள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு IQ லெவல் அதிகம்னு அர்த்தம்!
 Hospital
  • உங்களுக்கு அவரைப் பற்றிய விவரங்கள் தேவை என்றால் அவர்கள் உறவினர்களிடம் வெளியில் விசாரித்து அறிந்துக் கொள்ளவும்.

  • பார்க்க செல்வதற்கு முன்பு தாங்கள் எடுத்த செல்ல விரும்பும் பூங்கொத்து, பழவகைகள் அங்கு அனுமதிக்கப் படுமா என்று முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப செயல் படுவது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும்.

  • அடிக்கடி மருத்துவ மனைக்கு சென்று வருவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக அந்த நபர் உடல் நலம் பற்றி அவரது நெருங்கிய உறவினர்களிடம் உரையாடி அறிந்துக் கொள்ளலாம்.

  • ஒரு நபர் சிறிது மாற்றி யோசித்தார். மருத்தவமனையில் அட்மிட் ஆகியிருந்த அவர் நண்பரை காண சென்ற பொழுது அவர் கையில் ஒரு சிறிய கவரை கொடுத்து விட்டு வந்தார். அதில் ஒரு கடிதம் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அதில் எழுதியிருந்தது. எனக்கு எந்த பழங்கள் உங்களுக்கு இப்பொழுது கொடுக்க அனுமதிப்பார்கள் என்று தெரியவில்லை. அதற்கு உரிய பணம் வைத்துள்ளேன். தவறாக எண்ணாமல் உபயோக்கிதுக்கு கொள்ளவும் என்று இருந்தது. அந்த பேஷண்டுக்கு மருந்து வாங்கிக் கொள்ள அந்த பணம் உதவியது.

  • அந்த நபர் விரைவில் பூரண குணமடைய மனமார பிரார்த்தனை செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com