
House tips - வீடு சுத்தமாகவும் தேவையற்ற பல பொருட்களை நாம் தூக்கி வெளியே போடுவோம். ஆனால் சில பொருள்களை கீழே போட மனமின்றி மீண்டும் பயன்படுத்தும் வண்ணம் மதிப்பு கூட்டியும் பயன்படுத்துவோர் உண்டு. இதற்காக பல வழிகளில் எந்த மாதிரியான வழிமுறைகளில் வீட்டுக்கு உபயோகமாக பயன்படுத்தலாம் என ஆராய்வார்கள்.
பல எளிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து ஒரு சிலர் நாம் அனுபவத்திலேயே இது நல்லது, அது சரி என்று தெளிவு பெறுவோம். இதோ நமது வீட்டுக்குத் தேவையான எளிய பயனுள்ள 5 உதவிக் குறிப்புகள் இங்கு.
1. அதிக பயன்பாடு காரணமாக கத்திகள் துருப்பிடித்து மழுங்கிப் போக வாய்ப்பு உண்டு. இவற்றை அம்மிக்கல் அல்லது கிரைண்டர் கல்லின் மேல் தேய்த்தால் கூர்மையாக மாறுவதுடன் துருவும் எளிதில் நீங்கி விடும். பின் அதை கழுவி விடலாம். இதேபோல் கத்திகளை மற்றொரு கத்தி கொண்டு ஒன்றை ஒன்று சீவி கூட கூர்மை செய்யலாம். இது உடனடி தீர்வு மட்டும்தான்.
2. பழைய பேனாக்கள் மை தீர்ந்து விட்டால் அப்படியே தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் இனி அப்படி செய்யாதீர்கள். அதில் இருக்கும் மூடிகளை மட்டும் எடுத்து அவற்றை நாம் வீடுகளில் காயவைக்கும் சிறு சிறு துணிகளுக்கு கிளிப்பாக பயன்படுத்தலாம் . கர்ச்சீப்கள் , பேப்பர் குறிப்புகள் போன்றவற்றை இணைத்து வைக்கவும், கேலண்டர் தாள்கள் , செய்தித்தாள், திரைச்சீலை பறக்காமல் இருக்கவும் கிளிப்புகளுக்கு பதிலாக பேனா மூடிகள் உதவும்.
3. வீட்டில் எப்போதும் ஒருவித விரும்பத்தகாத ஒரு மணம் வீசிக் கொண்டிருக்கும் . அதை அகற்ற எளிதான ஒரு வழிதான் நம் வீட்டிலேயே இருக்கும் ஒரு பொருள். அது சமையல் சோடா. சமையல் சோடாவை ஒரு டேபிள் ஸ்பூன் கப்பில் போட்டு அதில் எலுமிச்சம் பழம் அல்லது நறுமண மிக்க லிக்விட் ஏதேனும் கலந்து (கொஞ்சம் சாலிடாக கலந்து) அதை ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து ரப்பர் பாண்ட் போட்டு மூடி விட்டால் காற்றின் மூலம் அந்த துர்நாற்றம் அகன்று இந்த மணம் அறையில் இனிதான மணம் பரப்பும்.
4. வீட்டில் விளக்குமாறு இருக்கும். நம் வீட்டில் இருக்கும் பழைய சாக்ஸ்களை அதன் மேல் சுற்றி விட்டால் கைகளில் எடுத்து கூட்டுவதற்கு நன்றாக இருக்கும். குச்சிகளும் கீழே வராது. சிறு சிறு முடிகள் குப்பைகள் அகற்றும் போது டபுள் சைடு டேப்பை ஆங்காங்கே ஒட்டிவிட்டால் சிறு குப்பைகள் ஒட்டிக்கொள்ளும் .அதை எடுத்து எளிதாக வெளியே போடலாம். வீடு பளிச்சென்று சுத்தமாகும்.
5. நான் உபயோகிக்கும் சோப்புக் கவர்களை கீழே ஏறியாமல் சமையலறை அடுக்குகள் முதல் துணிகளை அடுக்கும் அலமாரிகளில் போட்டு வைத்தால் மணமாக இருக்கும். முக்கியமாக துணிகள் வைக்கும் பீரோவில் போட்டு வைத்தால் பூச்சிகளும் அண்டாது என்பது குறிப்பிடத்தக்கது இதில் சோப்பு கலர்கள் மட்டுமல்ல நறுமணமிக்க ஊதுபத்திக் காகிதங்களையும் பயன்படுத்தலாம்.