பிறருக்கு உதவி தேவை என்பதை நாம் முன்கூட்டியே உணர முடியுமா?

helping others
helping others
Published on

நம்மிடம் உதவி என்று வந்து கேட்பவர்களுக்கு உதவி செய்வது சிறந்ததா? அல்லது பிறருக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து, உதவி செய்வது சிறந்ததா? வாருங்கள் அதை பற்றி தெரிந்து கொள்வோம்.   

ஏன் நேரடியாக கேட்பதில்லை?

ஒருவருக்கு உதவி தேவைப்படும் போது அவர்கள் அதை பற்றி வெளிப்படையாக கேட்காவிட்டாலும் அவர்களின் நிலையை வைத்தே நாம் கண்டுபிடித்து விடலாம். அதற்கு தெளிவான கவனிப்பும் அனுதாபமும் நம்மிடம் இருப்பதே போதுமானது. சிலர் கேட்பவர்களுக்கு சுமையாக இருக்குமோ என்பதை பற்றிய பயத்தினாலும் தங்கள் தேவைகளை பிறரிடம் எப்படி வெளிப்படுத்துவது என்ற தயக்கத்தினாலும் நேரடியாக நம்மிடம் உதவி கேட்க மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
சட்ட உதவி தேவைப்படுபவர்கள் இந்த வசதிகள் பற்றி எல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கணும் பாஸ்!
helping others

அவர்களின் இந்நிலையை எவ்வாறு அறியலாம்?

சில பொதுவான அறிகுறிகளில் ஒன்று அவர்களின் இயல்பான நடவடிக்கைகளில் இருந்து சற்று விலகுவது. அதாவது, திடீர் மனநிலை மாற்றங்கள், செய்கின்ற வேலைகளில் செயல்திறன் குறைதல் போன்றவை சில அறிகுறிகளாகும். இது போக, தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது தங்குளுக்கான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவறுதல் போன்ற அறிகுறிகளும் ஒருவர் பிரச்னையில் இருப்பதை குறிக்கலாம். கூடுதலாக, சோர்வாக அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அடிக்கடி உணர்வது, எந்நேரமும் எரிச்சலை அல்லது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவது போன்றவை, அவர்கள் உதவியற்ற நிலைமையில் இருப்பதை குறிக்கும் வெளிப்பாடுகளாகும்.

பிறரின் உடல் மொழி விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். எந்நேரமும் முகம் வாடிய நிலையில் சாய்ந்த தோரணையில் உட்கார்ந்து இருப்பவர்கள், பேசுபவரின் கண் தொடர்பை தவிர்ப்பவர்கள் அல்லது பேசும் போது அவர்கள் வெளிப்படுத்தும் தேவையற்ற படபடப்பு அவர்களுக்கு உதவி தேவை என்ற நிலையை வெளிப்படுத்தலாம்.

உதவி கேட்பதனால் நாம் தவறாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்று பயப்படுவதால் நேரடியாக உதவி கேட்காமல் தயங்குவதே அவர்களை மேலும் கவலைப்பட வைத்து பலவீனமாக உணரவைக்கும். பின் கடந்த காலத்தில் உங்களிடமோ அல்லது வேறு நபர்களிடமோ அவர்கள் சந்தித்த அனுபவங்கள் உதவி கேட்பதற்கான அவர்களின் முயற்சிக்கு தடை போடலாம். ஆக இந்த வகையான தடைகளை நாம்  முன்கூட்டியே புரிந்து கொள்வதன் மூலம், நாம் அவர்களை சரியான நேரத்தில் ஒரு வித இரக்கத்துடன் அணுகலாம்.

இதையும் படியுங்கள்:
உதவி செய்யுங்கள்! உதவி செய்யாதீர்கள்! என்ன இது… குழப்பறீங்களே!
helping others

நாம் கண்டும் காணாமல் இருந்தால் என்ன நடக்கும்?

இந்த அறிகுறிகளை நாம் புறக்கணித்து உதவி செய்ய முன்வரவில்லை என்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும். அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகமாக உணரலாம். இது அவர்களின் மன அல்லது உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும். சில சந்தர்ப்பங்களில் நாம்  செய்யும் நீண்டகால அலட்சியம், மனச்சோர்வு, பதட்டம் அல்லது தவறான எண்ணங்களை கூட அவர்களுக்கு வர வைக்கக்கூடும்.

ஆக, பொறுமையாக அவர்களை அணுகி நம் ஆதரவை வழங்குவது மனிதநேயத்தின் வெளிப்பாடு. நீங்கள் சகஜமாக அவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களின் கவலை வெளிப்படும் பட்சத்தில்  தேவையான  நடைமுறை உதவியை வழங்குவது குறிப்பிடத்தக்க நல்ல மாற்றத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தும்.

ஆக நீங்கள் ஓரளவு கவனம் மற்றும் புரிதலுடன் இருப்பதன் மூலம் ஒருவர் எதிர்கொள்ளும் துயரத்தின் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து அதை சரி செய்ய உங்களால் முடியவில்லை என்றாலும் தேவையான ஆதரவையாவது  அவர்களுக்குள்  உணர வையுங்கள்.

பிறந்தோம், வாழ்ந்தோம், போனோம் என்பதை விட மேலே குறிப்பிட்டது போல் கேட்பவர்களுக்கு மட்டும் நம் உதவியை செய்யாமல், கேட்காமலே பிறர் நிலையை அறிந்தும் உதவி செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com