வரவேற்பையின் மையப்பகுதியில் உள்ள சுவரில் வெவ்வேறு நிறங்களில் பெயின்ட் அடிக்கலாம். இந்த இடம் விருந்தினர்கள் நுழைந்தவுடன் தெரியும் வகையில் இருப்பதால் அழகழகான வால்பேப்பர்கள் தேர்ந்தெடுத்து ஒட்டுவதும் நல்லது.
அறையில் மையப்பகுதி இல்லாத சுவரில் உங்கள் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அல்லது உங்களுடைய வேலைப்பாடுகளை மாட்டி வைக்கலாம். உங்களுக்கு பிடித்த ஓவியங்களைக் கடையில் வாங்கியும் மாட்டலாம். இது விருந்தினர் கண்களைக் கவரும் வகையில் இருக்கும்.
வரவேற்பறையை மேலும் அழகுப்படுத்த செயற்கை செடிகளை மேஜை மீது அல்லது ஜன்னல் அருகே வைக்கலாம். இதற்கு நீங்கள் கற்றாழையும் பயன்படுத்தலாம். ஏனெனில் கற்றாழையை தினமும் பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அறையை எளிய வகையில் அழகுப்படுத்துவது அவசியம். அதிகமான மேஜைகள், மரச்சாமான்கள் வைப்பதை தவிர்க்கவும். ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் அமர்வதற்கான மேஜை மற்றும் நடுவில் பொதுவாக ஒரு மேஜை மட்டும் வைத்துக்கொள்வது நல்லது. மேலும் சுவருக்கு ஏற்ற நிறத்தில் மரச்சாமன்கள் வைப்பது அழகாக இருக்கும்.
வரவேற்பறையில் கண்ணாடிப் பொருட்கள் வைப்பது இன்னும் அழகைக் கூட்டும். இது பார்ப்பதற்கு பழமை வாய்ந்த இடமாக இருப்பதுபோல் காண்பிக்கும். அழகான வடிவமைப்புகளுடன் இருக்கும் கண்ணாடியை சுவரில் மாற்றுவது, அந்த இடம் விசாலமாக இருப்பதுபோன்ற உணர்வைத் தரும்.
சுவருடைய நிறம், சோபா நிறம், மரச்சாமான்கள் நிறம் ஆகியவை ஒரே நிறத்தில் இருந்தால் தனித்துவமாக இருக்கும். மற்றும் அனைத்தையும் ஒரே நிறத்தில் வைத்துவிட்டு தலையணை மட்டும் வேறு நிறத்தில் வைக்கலாம்.
ஒரு அழகான மற்றும் ஆடம்பரம் இல்லாத அறைக்கு வெள்ளை நிறத்தில் சுவர், வெள்ளை நிற சோபா, வெள்ளை நிற தலையணை, என அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருந்தால் அழகாக இருக்கும். இது கம்மியான செலவில் அழகுமிக்க அறையாக இருக்கும்.
சிறிய அறையில் மேற்கூரையில் மாட்டப்படும் பெரிய அலங்கார விளக்கைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக சுவரில் மாட்டப்படும் எலெக்ட்ரிக் லைட் வாங்கி மாட்டுவது நல்லது. பெரிய அறையாயின் மேற் கூரையில் சிறிய அலங்கார விளக்கு பயன்படுத்தலாம்.
அறையில் கம்மியான அளவு செல்ஃப் வைக்க வேண்டியது அவசியம். இதில் அதிகமான பொருட்களை வைக்காமல். உங்களுடைய விருதுகள், கோப்பைகள் அல்லது சில அலங்கார சிறிய அளவு சிலைகள் வைப்பது நல்லது.
கருப்பு மேஜைகள் , மரச்சாமான்கள் வைத்து சுவரில் வெள்ளை நிறம் அடிப்பது ஒரு தனித்துவமான அழகைத்தரும் . அதேபோல் வெள்ளை நிற சுவரில் மரப் பலகை, மரக் கதவு, மரச்சாமான்கள் வைப்பது அழகான வரவேற்பறையாக இருக்கும். இது கொஞ்சம் அதிக செலவாகும். ஆனால் அந்த அளவுக்கு அழகுமிக்கையாகவும் இருக்கும்.