பெற்றோரின் விவாகரத்து, குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும் தெரியுமா? 

children
Divorce
Published on

ஒரு குடும்பத்தின் அடிப்படையே பெற்றோர்களும், குழந்தைகளும்தான்.‌ இதில் பெற்றோர்களின் உறவு உடையும்போது குழந்தைகள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோரின் விவாகரத்து என்பது குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு புயலாக வீசும். இது அவர்களின் உணர்ச்சிகளை, நடத்தைகளை, எதிர்காலத்தைக் கூட பாதிக்கலாம். இந்தப் பதிவில் பெற்றோரின் விவாகரத்து குழந்தைகளை எவ்வாறு பாதிக்குகிறது என்பதன் பல்வேறு கோணங்களைப் பார்க்கலாம். 

பெற்றோரின் விவாகரத்து குழந்தைகளின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் மிகவும் அமைதியாகவும் மனச்சோர்வாகவும் இருக்கலாம். ஒரு சிலர் கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் மாறிவிடுவார்கள். சிலர் பள்ளியில் கவனம் செலுத்த முடியாமல், நண்பர்களிடமிருந்து விலகி இருப்பார்கள். 

பெற்றோரின் விவாகரத்தை குழந்தைகளின் உடல் நலத்தையும் பாதிக்கிறது. இதனால், அவர்களுக்கு தலைவலி, வயிற்று வலி, தூக்கமின்மை போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம். நீண்ட காலத்திற்கு இந்த உடல் உபாதைகள் தொடர்ந்தால் அது குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.‌ 

குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயங்களில் பெற்றோரின் பிரிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் பள்ளியில் கவனம் செலுத்த முடியாமல் போவதால், அவர்களின் மதிப்பெண்கள் குறையலாம். சில குழந்தைகள் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போவதற்கும், பெற்றோரின் பிரிவு காரணமாக அமைகிறது. 

குழந்தைகளின் சமூக உறவு பெற்றோரின் பிரிவால் பாதிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் நண்பர்களிடமிருந்து விலகி, புதிய நண்பர்களை உருவாக்க முடியாமல் போகலாம். சில குழந்தைகள் தங்கள் பெற்றோரின் பிரச்சினைகளை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முயற்சிப்பதால், அவர்களின் சமூக வாழ்க்கை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. 

பெற்றோரின் விவாகரத்து குழந்தைகளின் வாழ்வில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வளர்ந்த பிறகும் அவர்கள் தங்கள் பெற்றோரின் பிரிவின் தாக்கத்தை அனுபவிப்பார்கள். இதனால், அவர்களுக்கு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டு தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக் கொள்வார்கள். 

இதையும் படியுங்கள்:
நம் வாழ்வில் தவறான நபர்களிடமிருந்து தள்ளியிருப்பதே சிறந்தது!
children

மேலே குறிப்பிட்டபடி பெற்றோரின் விவாகரத்து குழந்தைகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் இந்த மாற்றங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும். எனவே, பெற்றோர்களும், ஆசிரியர்களும், சொந்த பந்தங்களும் இணைந்து குழந்தைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும். அவர்களுடன் தொடர்ந்து பேசி அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது மிகவும் அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com