
திருமணம் வாழ்க்கையின் முக்கிய அங்கம். எங்கோ பிறந்த ஒரு ஆணை, எங்கோ பிறந்த பெண் மணம் செய்வதைத்தான் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறாரகள். ஆனால் தற்போதைய நடைமுறையில் முகநூல்…இன்ஸ்டாகிராமில் கூட மணமகனைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் இருக்கிறார்கள்.
அப்படி தேர்ந்தெடுக்கும் மணமகன் மிக சரியானவரா.. உங்களுக்கு பொருத்தமானவரா? சோதனை செய்ய இதோ 5 வழிகள்.. நீங்கள் டிக் அடிக்க வேண்டியதுதான் பாக்கி...
நேர்மை
நீங்கள் தேர்வு செய்த மணமகன் நேர்மையானவரா? அல்லது நேர்மையற்றவரா? என்பதை அவர் செய்யும் ஒரு சில செயல்களிலேயே நீங்கள் கண்டுபிடித்து விடலாம். நேர்மையானவர் என்றால் ஒரு டிக்
மரியாதை
நீங்கள் மாலையிடும் மணாளன்… மரியாதைப் பண்புள்ளவரா? என்பதை சிறிய டெஸ்ட் மூலமாக தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக ஓட்டலில் நீங்கள் சாப்பிடப்போதும் போது…. நீங்கள் அமர்ந்துள்ள மேஜையில் தவறுதலாக தண்ணீர் கொட்டி விடுகிறார் ஓட்டல் சர்வர். அதைக் கண்டவுடன் உங்கள் எதிரில் அவரின் கெத்தைக் காட்ட முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறாரா? மென்மையாக சிறிய புன்னகையோடு 'பராவாயில்லை…' என்று பெருந்தன்மையோடு சர்வரை மரியாதையாக நடத்துகிறாரென்றால்…இன்னொரு டிக்!
மனஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அந்தளவு முக்கியம் மன ஆரோக்கியம். நீங்கள் தேர்வு செய்த மணமகன், எந்த கடினமான சூழ்நிலையிலும், தன்னை இழக்காமல் இருக்கிறாரா? அல்லது தன்னை நிலைநிறுத்தி கொள்கிறாரா பாருங்கள். தன்னை நிலைநிறுத்தி கொள்பவரென்றால், மூன்றாவது டிக் அடியுங்கள்
குழந்தைகளிடம் பழகுதல்
தேர்விட்ட மணமகன் உங்களது வீட்டு நிகழ்வுகளில் குழந்தைகளோடு எவ்வாறு பழகுகிறார் என்று கூர்ந்து கவனியுங்கள். குழந்தைகளோடு…குழந்தையாக அவர் விளையாடி மகிழ்கிறாரென்றால்… நான்காவது டிக்.
பொறுமை
பெரும் தலைவர்களின் தலையாய பண்பு தொண்டர்களின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்பது. அதுபோலவே நீங்கள் தேர்வு செய்த மணமகன் மற்றவர்கள் பேச்சை எப்படி பொறுமையாக கவனிக்கிறார் என்று கவனியுங்கள். அவர் மற்றவர் பேச்சை பொறுமையாக கேட்கிறாரென்றால் ஐந்தாவது டிக்-தான்.
நீங்கள் தேர்வு செய்த மணமகன் பத்தரை மாற்றுத் தங்கம்தான் பெண்களே!