ஆதார் கார்டில் உள்ள பிழைகளை எத்தனை முறை திருத்த முடியும்?

Aadhaar card
Aadhaar card
Published on

- கவிதா

இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால், ஒவ்வொரு இந்தியருக்கும் முக்கியமான அடையாள சான்றாக ஆதார் கார்டு மாறிவிட்டது. பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட், டிரைவிங் லைன்சென்ஸ், பாஸ்போர்ட் போன்ற ஒட்டுமொத்த முக்கிய ஆவணங்களும் ஆதார் கார்டு இல்லாமல் வாங்க முடியாது.

ஆதார் கார்டு ஒன்று மட்டும் இருந்தால் போதும் அரசு உதவிகள் முதல் கடன் வரை அனைத்தையும் பெற்று விடலாம். ஆதார் கார்டில் தனி நபரின் பெயர், பிறந்த தேதி, வீட்டு முகவரி போன்ற  தகவல்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இந்த தகவல்கள் அனைத்தும் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும். 

வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இ-கேஒய்சி செயல்முறை வலியுறுத்தப்படுகிறது. இந்த செயல்முறைக்கு கண்டிப்பாக ஆதார் கார்டு, பான் கார்ட்டில் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். இ-கேஒய் சி செயல்முறை மட்டுமின்றி பிற சேவைகள் மற்றும் அரசு உதவிகளை பெறுவதற்கும் ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்படும்.

சில மாநிலங்களில் குடும்பப் பெயர் ஒரு தனி நபரின் பெயருக்கு பின்னால் சேர்க்கப்பட்டிருக்கும். (உதாரணமாக ராகுல்கன்னா என்பவருக்கு, ராகுல் என்பது பெயராகவும், கன்னா என்பது குடும்ப பெயராகவும் இருக்கும்.)

அப்படி குடும்ப பெயரை பயன்படுத்துபவராக இருந்தாலும் பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆவணங்களில் ஒரே மாதிரியாக சீராக இருக்க வேண்டும். பான் கார்டில் ஒரு பெயரும் (உதாரணமாக ராகுல்), ஆதார் கார்டில் (உதாரணமாக ராகுல் கன்னா) வேறு பெயரும் இருந்தால் பல்வேறு சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் அரசின் நல உதவிகளும் கிடைக்காமல் போகலாம்.

ஒருவேளை உங்களுடைய ஆதார் கார்டில் ஏதேனும் தகவல்கள் பிழையாக இருந்தால் அதை  மாற்றிக் கொள்ள வழிகள் உள்ளன. இதை நீங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக செய்யலாம். ஆனால் சில தகவல்களை பாதுகாப்புக் கருதி ஆன்லைனில் மாற்ற முடியாது.

எந்தெந்த தகவல்களை ஆன்லைனில் மாற்ற முடியாது என்பது குறித்து பார்ப்போம்:

ஆதார் கார்டு தனி நபர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் ஒரு கார்டாகும், இதில் 12 இலக்க தனித்துவ எண் இருக்கும்.

  • ஆதார் கார்டில் உங்கள் பெயரில் உள்ள பிழையை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ஆன்லைனில் செய்ய முடியாது. ஆஃப்லைனில் தான் செய்ய வேண்டும். அதற்கு உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் அல்லது இசேவை மையங்களுக்கு செல்லலாம். அவ்வாறு செல்லும்போது  ஆதார் கார்டு, ரேசன் அட்டை, பிறப்பு சான்றிதழ், பான் கார்டு போன்ற அடையாள ஆவணங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

  • ஆதார் கார்டில் 2 முறை மட்டுமே பெயர் திருத்தம்  செய்ய முடியும். திருமணத்திற்கு பின்பு சிலர் தங்களுடைய பெயரில் திருத்தம் செய்து கொள்ள விரும்புவார்கள். இவ்வாறு திருத்தம் செய்ய விரும்புபவர்கள் 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும். ஒரு வேளை சந்தர்ப்ப சூழ்நிலையால்  3-வது முறையும் உங்கள் பெயரில் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதற்கு UIDAI-இன் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆதார் கார்டு அப்டேட் செய்து விட்டீர்களா? புது விதமான ஸ்கேம்!
Aadhaar card

ஆன்லைன் மூலம் மாற்றங்கள் செய்யும் வழிமுறைகள்: 

உங்கள் வீட்டின் முகவரி விவரங்களை UIDAI இணையதளம் மூலமாக எளிய முறையில் திருத்தம் செய்து கொள்ளலாம். உங்கள் வீட்டின் முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு வரம்புகள் கிடையாது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உங்கள் வீட்டை மாற்றும் போது கண்டிப்பாக உங்கள் ஆதார் முகவரியை மாற்ற வேண்டும். ஆனால் பெயர், பிறந்த தேதி, கைரேகைகள், கருவிழி ஸ்கேன், மொபைல் நம்பர் போன்ற விவரங்களை மாற்றுவதற்கு கண்டிப்பாக ஆதார் பதிவு மையத்திற்கு தான் செல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com