இந்த தலைப்பைப் பார்த்ததும் காதலுக்கு கணக்கு வேண்டுமா? என்று கேட்க தோன்றுகிறதா? ஒருவருக்கு எத்தனை முறை வேண்டுமென்றாலும் காதல் வரலாம். ஆனால், முக்கியமான இந்த மூன்று காதலைப் பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்வது அவசியம்.
ஒருமுறைக்கூட காதலை அனுபவிக்காதவர்கள் இவ்வுலகில் யாருமே இல்லை. அழகு, அறிவு, பொருமை, ஞானம் போன்ற அனைத்து உணர்வுகளுக்கும் தொடர்புடையது காதல். அதனை முழுமையாகப் படித்த மேதை இவ்வுலகில் இதுவரை யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை. அவரவர்கள் ஒரு விதத்தில் காதலைப் புரிந்துக்கொண்டு, ஒரு விளக்கம் அளிப்பார்கள்.
ஆனால், அதுதான் சரியான விளக்கமா ? என்று மற்றவர்களிடம் கேட்டால், அது இல்லை. 'இதுதான் காதல்' என்று அவர்கள் ஒன்று சொல்வார்கள்.
அந்தவகையில் முதல் காதல் முதல் மூன்றாம் காதல் வரையில் பார்ப்போம்.
முதல் காதல்:
முதல் காதல் என்பது மிகவும் சிறு வயதில் வருவது. குறிப்பாக பள்ளிப் பருவத்தில் வரும் இந்தக் காதலை Puppy love என்றும் அழைப்பார்கள். இந்த காதலில் இருவரும் ஒன்றாகவே இருப்பீர்கள், இருக்கத் தோன்றும். அவர் மட்டும்தான் நமக்கு என்று தோன்றும். ஆனால், ஒரு சிறு விஷயத்திற்காக இருவரும் பிரிவீர்கள்.
இரண்டாம் காதல்:
இது மிகவும் கடினமான ஒன்று. கல்லூரி பருவத்தில் தோன்றும் ஒரு காதல். இந்தக் காதலில் இருவரும் அதிகமாக காயமடைவீர்கள். அதனால், இருவருமே வலிமையடைவீர்கள். மற்றவர்களைப் பற்றியே எப்போதும் எண்ணும் நீங்கள், இந்த காதலின்போது, உங்களை முதலில் நன்றாக புரிந்துக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். இது உங்களுக்கு வலி, வேதனை, துரோகம், மோசம் என அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வாழ்க்கையை கற்றுத்தந்து உங்களை மேம்படுத்தும்.
மூன்றாவது காதல்:
இது எந்தவித எதிர்பார்ப்பின்றி, திட்டமின்றி தானாகத் தோன்றும் காதல். பழைய காதலிலிருந்து கற்றுக்கொண்டவற்றை இங்கு செயல்படுத்துவீர்கள். உங்களின் முக்கியத்துவத்தையும், அவரின் முக்கியத்துவத்தையும் பிரித்து அறிந்து அந்தக் காதலை முன்னோக்கி கொண்டு போவீர்கள். இந்த காதலே உங்களுக்கு காதலைப் பற்றி கற்றுத்தரும். இந்தக் காதலே காலம் முழுக்க உங்களுக்குத் துணை நிற்கும். இதுவே மூன்றாவது காதல்.
இந்த மூன்று காதலே உங்களுக்கு காதலைப் பற்றிய ஓரளவு புரிதலை ஏற்படுத்தும். ஆனால், சிலரின் வாழ்வில், தேர்ந்தெடுக்கும் மனிதர், சூழ்நிலை ஆகியவை எத்தனை காதல் உங்கள் வாழ்வில் வரும் என்பதை தீர்மானிக்கும்.