Fried Rice Syndrome யாருக்கெல்லாம் வரும்? அறிகுறிகள் என்னென்ன?

Fried Rice
Fried Rice
Published on

Fried Rice தெரியும், அது என்ன Fried Rice Syndrome என்றுதானே யோசிக்கிறீர்கள்? இது என்ன?, இந்த Syndrome வந்தால் என்னாகும்?, இது வர காரணம் என்ன? என அனைத்தையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

Fried Rice Syndrome என்றால் என்ன?

கடையில் ஃபரைய்ட் ரைஸ் செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? ஏற்கனவே பாதி வேக வைத்த அரிசியுடன் புதிதாக சேர்த்து செய்வார்கள். அதேபோல் வீட்டில் சிலர், மீதமுள்ள அரிசியை இரவு முழுவதும் வைத்துவிட்டு காலையில் சூடு செய்து சாப்பிடுவார்கள்.

இரவு முழுவதும் அறை வெப்பத்தில் அந்த சாதத்தில்  பாக்டீரியாக்கள் வளரத் தொடங்கும். அந்த நிலையை தான் ஃபிரைய்ட் ரைஸ் சிண்ட்ரோம் என்கிறோம். அரிசியில் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியா உள்ளது, இது உணவை மாசுபடுத்தி நம்மை நோய்வாய்ப்படுத்தும். சுருக்கமாக சொல்லப்போனால், பழைய உணவு காரணமாக ஒருவரின் உடல்நிலை மோசமடையும் நிலைதான் Fried Rice Syndrome.

அறிகுறிகள் என்ன?

1.  வயிற்று வலி

2.  வயிற்றுப்போக்கு

3.  வாந்தி மற்றும் குமட்டல்

4.  காய்ச்சல்

5.  கண் வலி

ஃபரைய்ட் ரைஸ் அல்லது பழய சாதம் (தண்ணீரில்லாத) ஆகியவற்றை சாப்பிட்ட பிறகு இந்த அறிகுறிகள் வந்தால், நீங்கள் Fried Rice Syndrome ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

ஆதாரம்:

2008ம் ஆண்டில், 20 வயது இளைஞர் ஒருவர் பாஸ்தா சாப்பிட்டதால் உயிரிழந்ததாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பாஸ்தா சாதாரண வெப்பநிலையில் 5 நாட்களுக்கு அறையில் வைக்கப்பட்டது என்பது பிறகுதான் தெரிந்தது. ஃபிரைய்ட் ரைஸ் சிண்ட்ரோம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இதையும் படியுங்கள்:
மாரடைப்பு: முகத்தில் இந்த அறிகுறிகள் தோன்றினால் ஜாக்கிரதை! 
Fried Rice

மீத முள்ள சாதத்தை என்னத்தான் செய்வது?

 நாம் பொதுவாக பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி சாப்பிடுவோம். வெள்ளை சாதம் என்றால், இரவே தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் சாப்பிடுங்கள்.

அறை வெப்பநிலையில் அந்த சாதத்தை 2 மணி நேரம் வைக்கக்கூடாது.

மூடப்பட்ட பாத்திரத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடுங்கள்.

மீதமுள்ள அரிசியை மீண்டும் சூடாக்க, சிறிது நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும். அரிசியை குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்த உடனேயே அதை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com