தலையணையை எத்தனை நாளுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்... உங்களை அதிரவைக்கும் உண்மைகள் இதோ!

pillows-cleaning-guide
pillows-cleaning-guide
Published on

நாம் தினமும் நிம்மதியாக தூங்க தலையணை மிக மிக அவசியமான ஒரு பொருளாகும். அதன் மேலே இருக்கும் உறையை மட்டும் அழகாக மாற்றிவிட்டு உள்ளே இருக்கும் தலையணையை பல மாதங்களாக நாம் அப்படியே பயன்படுத்தி வருவோம். வெளியே பார்ப்பதற்கு அது சுத்தமாக இருப்பது போல ஒரு மாயையை உருவாக்கும். 

ஆனால் அதற்குள் நமது வியர்வை, இறந்த செல்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத தூசுப் பூச்சிகள் என ஒரு பெரிய குப்பைக் கூடையே ஒளிந்திருக்கும். இப்படிப்பட்ட தலையணைகளை எப்படிச் சரியாகப் பராமரிப்பது மற்றும் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அதனைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சுத்தம் செய்யும் கால இடைவெளி!

தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் துவைத்துவிட வேண்டும். ஆனால் உள்ளே இருக்கும் தலையணையை குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது முழுமையாகச் சுத்தம் செய்வது மிக மிக முக்கியம். 

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் அல்லது தூங்கும்போது அதிகமாக வியர்க்கும் உடல்வாகு கொண்டவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை துவைப்பது ரொம்பவே நல்லது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் ஆஸ்துமா மற்றும் சருமப் பிரச்சனைகள் வருவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்தலாம்.

துவைக்கும் முறைம்!

எல்லா வகையான தலையணைகளையும் ஒரே மாதிரி வாஷிங் மெஷினில் போட்டுத் துவைத்துவிட முடியாது. மைக்ரோஃபைபர் மற்றும் சாதாரண பஞ்சு தலையணைகளை மெஷினில் போட்டு மைல்டான பவுடர் வைத்து சுலபமாகத் துவைக்கலாம். மெஷின் சமநிலையாகச் சுற்ற ஒரே நேரத்தில் இரண்டு தலையணைகளைப் போட்டுத் துவைப்பது ஒரு ஸ்மார்ட்டான வழி. 

ஆனால் மெமரி ஃபோமில் செய்யப்பட்ட தலையணைகளை அப்படித் துவைக்கக் கூடாது. அதில் தண்ணீர் முழுமையாகப் பட்டுவிட்டால் அதன் வடிவமே மாறி வீணாகிவிடும். அதனால் சோப்புத் தண்ணீரில் லேசாகத் துணியை நனைத்து கறைகள் உள்ள இடத்தில் மட்டும் மென்மையாகத் துடைத்து எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் துவைத்த துணிகளை உலர்த்த சில எளிய யோசனைகள்!
pillows-cleaning-guide

துவைத்த தலையணைகளை வெயிலில் நன்றாகக் காயவைக்க வேண்டியது அவசியம். உள்ளே லேசாக ஈரம் இருந்தால் கூட அதில் பூஞ்சை காளான் உருவாகி துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும். எவ்வளவு தான் சுத்தமாகப் பராமரித்தாலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பழைய தலையணையைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய ஒன்றை வாங்குவது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

உங்கள் தலையணையைச் சரிபார்க்க அதை அப்படியே பாதியாக மடித்துப் பாருங்கள். அது மீண்டும் தானாகவே பழைய நிலைக்குத் திரும்பவில்லை என்றால் அந்த தலையணையின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
நிம்மதியான வாழ்வும், நிலையான வெற்றியும் தரும் 3 சூத்திரங்கள்: கருட புராணம் கூறுவது என்ன?
pillows-cleaning-guide

நிம்மதியான தூக்கத்திற்கு ஒரு நல்ல சுத்தமான தலையணை அடிப்படைத் தேவையாகும். மேலே சொன்ன இந்த வழிமுறைகளை உங்களின் அன்றாடப் பழக்கவழக்கங்களில் சாதாரணமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் துவைப்பதும், தேய்ந்துபோன பழையதை மாற்றுவதும் உங்களின் உடல் ஆரோக்கியத்தை பல மடங்கு மேம்படுத்தும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com