பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்படி எல்லாம் பேசக்கூடாது தெரியுமா?

Bad Parents
Bad Parents
Published on

குழந்தைகள்தான் நமது நாட்டின் எதிர்காலம். அவர்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்பதும், நல்ல குணங்களை கற்றுத் தருவதும் பெற்றோரின் கையில்தான் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் எப்படி பேசுகிறார்கள் என்பது, அவர்களின் மனவளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தவறான வார்த்தைகள், தவறான தொனியில் பேசுவது, குழந்தைகளின் மனதில் தழும்புகளை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கலாம். இந்தப் பதிவில் குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.  

  • ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். எனவே, ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவது அவர்களின் தன்னம்பிக்கையை குறைத்து பொறாமை, வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளைத் தூண்டும். 

  • குழந்தைகளை அவர்களின் தோற்றம், திறமை அல்லது செயல்களுக்காக அவமானப்படுத்துவது அவர்களின் மனதை பாதித்து தற்கொலை எண்ணங்களைக்கூட தூண்டும் வாய்ப்புள்ளது. 

  • எப்போதும் அவர்களுக்கு கட்டளையிடும் தொனியில் பேசுவது குழந்தைகளை எந்திரமாக மாற்றிவிடும். இது அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கவும், தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளவும் வாய்ப்பளிக்காமல் இருக்கும். 

  • குழந்தைகளின் தோற்றம், பேச்சு, செயல்களை கேலி செய்தல் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, சமூகத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வைக்கும். 

  • சில நேரங்களில் பெற்றோர்கள் கோபத்தில் பேசும்போது அவர்களின் வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். இது குழந்தைகளின் மனதில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். 

  • குழந்தைகளுக்கு பேய்கள், பிசாசுகள் போன்ற கதைகளைக் கூறி பயமுறுத்துவது அவர்களுக்கு இரவில் தூக்கம் இல்லாமல் செய்துவிடும். எனவே, தேவையில்லாமல் அவர்களது மனதில் பயம் உண்டாக்கும் விஷயங்களை பெற்றோர்கள் ஒருபோதும் சொல்லக்கூடாது. 

  • குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி அநாவசியமாக கவலைப்பட்டு அவர்களிடம் புலம்புவது, அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும். குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கிறோம் என்ற பெயரில் தனிமைப்படுத்துவது அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கலாம். 

  • பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, பின் அதை நிறைவேற்றவில்லை என்றால், அவர்களின் நம்பிக்கை பெரிதளவில் குறையும். மேலும், குழந்தைகளின் திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவது அவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த முயற்சிக்காமல் போகச் செய்துவிடும். 

இதையும் படியுங்கள்:
பெற்றோர்கள் குழந்தைகளிடம் பயன்படுத்தக்கூடாத 5 வாக்கியங்கள்… மீறி பயன்படுத்தினால்? 
Bad Parents

பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். நேர்மறையான வார்த்தைகள், பாராட்டுகள், ஊக்கம் அளிக்கும் விஷயங்கள் ஆகியவை குழந்தைகளின் மனநிலையை வளர்த்து, அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளும்போது குடும்பத்தில் நிச்சயம் அமைதி நிலவும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com