ஆன்லைன் பட்டாசு மோசடியில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

online crackers scam
online crackers scam
Published on
Deepavali Strip 2024
Deepavali Strip 2024

மூக ஊடகங்கள் மூலம் விளம்பரங்கள் செய்து மக்களை ஈர்ப்பதன் மூலம் தீபாவளி பட்டாசுகளின் மோசடி அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் குறைந்த விலையில்  பட்டாசுகள் விற்கப்படுவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதை நம்பி பணம் செலுத்தியவர்கள் பட்டாசுகள் வந்து சேராததால் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்து புகார் அளிக்கின்றனர்.

பண்டிகைக் காலங்களில் அந்தந்த காலங்களுக்கு ஏற்ப பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி மோசடிகள் நடக்கின்றன. அதைப் போலவே தீபாவளியை ஒட்டி பட்டாசுகளை குறைந்த விலையில் விற்பதாகக் கூறி ஏமாற்றுப் பேர்வழிகள் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். பணம் கட்டி ஆர்டர் செய்தால் டெலிவரி கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து நம்பி பணம் செலுத்தி, பட்டாசு வராததுடன், நம்முடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, வங்கி விவரங்களை வைத்து வேறு மோசடிகளில் ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஆன்லைனில் பட்டாசுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், நேரடியாகக் கடைகளில் விற்பனை செய்யவும் உரிமங்கள் இருக்கின்றன. ஆன்லைன் விற்பனைக்கு என்று தனியாக எந்த உரிமமும் கிடையாது. இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதும், நிறைய மோசடிகள் நடைபெறுவதும் வழக்கமாக உள்ளது. பணம் கட்டினால் பட்டாசு வராது என்பது ஒருபுறம் இருக்க, அப்படியே சிலர் பட்டாசுகளை அனுப்பினாலும் அவை தரமற்றதாகவும், ஆயிரம் வாலா சரவெடி வாங்கினால் அதில் 100 கூட சரியாக வெடிக்காது. சிலர் இப்படி ஏமாந்தாலும் வெளியில் சொல்வதில்லை.

ஏமாற்றப்படாமல் எச்சரிக்கையாக இருக்க:

பணம் செலுத்துவதற்கு முன்பு ஆன்லைன் விற்பனையாளர்களின் நம்பகத் தன்மையை சரிபார்ப்பது அவசியம். அவர்களிடம் முறையான முகவரிகள் மற்றும் தகவல் தொடர்பு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

நன்கு தெரிந்த பிராண்டுகள், அதிகாரப்பூர்வமான இணைய தளங்களிலிருந்து வாங்குவது நல்லது.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு ஈசியா செய்ய சோளமாவு பிஸ்கட்டும், வரகரிசி தட்டையும்!
online crackers scam

குறைந்த விலை மற்றும் நிறைய சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை பெரும்பாலும் மோசடிகளாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அவர்கள் தரும் தள்ளுபடிகள் உண்மையானவைதானா என்பதை உறுதி செய்ய மற்ற விற்பனையாளர்கள் மற்றும் இணைய தளங்களில் விலைகளை சரி பார்க்கவும்.

பாதுகாப்பற்ற தளங்களிலும், whatsapp வழியாகவும் நம்முடைய தனிப்பட்ட விவரங்களை பகிர்வதைத் தவிர்க்கவும்.

விலை குறைவு என்றால் அங்கு தரமும் குறைவாகத்தான் இருக்கும். எனவே, விலை மலிவான, பாதுகாப்பு குறைவான வெடி மருந்துகளைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, ஆன்லைனில் பட்டாசுகளை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

கடைகளுக்கு நேரில் சென்று தரமான மற்றும் நல்ல பிராண்ட் வெடிகளை வாங்கி வெடித்து பாதுகாப்பாக இந்த தீபாவளியை கொண்டாடுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com