அன்று...
Johny, Johny
(Yes, papa)
Eating sugar?
(No, papa)
Telling lies?
(No, papa)
Open your mouth
(Ah, ah, ah)
Johny, Johny
சக்கரை திருடி சாப்பிடும் ஜானி பொய் சொன்னதை வைத்து, போஸ்டர் குழந்தையாக மிகவும் பாப்புலர் ஆகி, அந்தக் காலப் பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஜானி மாதிரி பொய் பேசக்கூடாது என்று சொல்லி வந்தார்கள். HONESTY IS THE BEST POLICY என்றும் சொல்லி வைத்தார்கள்.
இது, இன்றைய காலக்கட்டத்தில் காலத்துக்குத் தகுந்தவாறு மாறிவிட்டது...
Johny Johnny
Yes Pappa
Are you watching videos?
No Pappa
Telling Lies
No Pappa
Give me the Cell Phone
Haa Haa Haa.
இந்திய குடும்பங்களில் பெரியவர்கள் பொய் சொல்லும் குழந்தைகளைப் பார்த்து, "நீ பொய் சொல்லிட்டே.... you are a bad boy or girl" என்று குழந்தை வருத்தப்படும் நிலைக்கு கொண்டு விடுகிறோம்.
இது எந்த நாளும் தீர்வாகாது. இது இன்னும் பொய் சொல்லும் வேகத்தைத் தீ வீரப்படுத்தும் அல்லது ஒன்றை மறக்க இன்னொரு பொய் சொல்ல வைக்கும். இது குழந்தைகள் வளர்ந்த பின்னும் தொடரும்.
பொய் சொன்னதற்காக உங்கள் குழந்தைகளைத் தண்டிக்காதீர்கள். ஆய்வுகள் படி நீங்கள் பொய் சொல்லும் குழந்தையைத் தண்டித்தால் அது மனதுக்குள் சென்று இன்னும் அதிகப் பொய்களைச் சொல்ல வைக்குமாம்.
குழந்தைகளின் பொய்களை கையாள்வது மற்றும் குழந்தைகளுக்கான நேர்மையை உருவாக்க மிகக் கவனமாக உத்திகள் தேவை. இதோ சில குறிப்புகள்:
1. *அமைதியாக இருங்கள்*: குற்றஞ்சாட்டும் தொனி அல்லது தண்டனையைத் தவிர்க்கவும்.
2. *காரணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்*: பொய்யின் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறியவும் (பயம், கவனத்தைத் தேடுதல் அல்லது கற்பனை).
3. *நேர்மையை ஊக்குவித்தல்*: நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உண்மையுள்ள நடத்தையைப் பாராட்டுங்கள்.
4. *தெளிவான எதிர்பார்ப்புகளை அமைக்கவும்*: பொய்யின் விளைவுகள் மற்றும் உண்மையின் நன்மைகளை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.
5. நேர்மை மற்றும் *: உண்மையுள்ள நடத்தையை நீங்களே வெளிப்படுத்துங்கள்.
6. *பிரச்சினையைத் தீர்க்க கற்றுக்கொடுங்கள்*: பொய்களைத் தூண்டும் சூழ்நிலைகளுக்கு மாற்றுத் தீர்வுகளைக் கண்டறிய குழந்தைகளுக்கு உதவுங்கள்.
7. *நேர்மறையான வலுவூட்டல்*: ஸ்டிக்கர்கள், நட்சத்திரங்கள் அல்லது சிறப்புச் சலுகைகள் மூலம் நேர்மைக்குச் சன்மானம் கொடுங்கள் .
8. *திறந்த தொடர்பு*: நம்பிக்கையை வளர்ப்பது, தவறுகளை ஒப்புக்கொள்ளக் குழந்தைகளை ஊக்குவித்தல்
9. பொது இடத்தில் உடனே அடிக்கவோ அல்லது கடுமையான வார்த்தைகள் மூலம் திட்டாதீர்கள். அது எதிர்மறை எண்ணத்தை விளைவிக்கும்.
10.இன்னும் அஞ்சு நிமிடம் கார்ட்டூன் பார்க்கிறேன் என்று சொன்னால் அனுமதித்த பின் அஞ்சு நிமிடம் தான் ஓகேவா என்று சொல்லிப் பாருங்கள். குழந்தை சரி என்று சொல்லும். உடனே அந்தக் குழந்தையின் நேர்மைக்கு ஒரு சன்மானம் கொடுங்கள். அடுத்தத் தடவை அது பொய் சொல்வதை க்குறைக்கும். .
உங்கள் குழந்தை நீங்கள் ஏதோ காரணத்துக்காகப் பொய் பேசும் பொது அது திரும்ப உங்களையே கேள்வி கேட்கும். 'என்னைப் பொய் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு நீ மட்டும் பொய் பேசலாமா?' என்று கேட்கும்.
1. உங்கள் தவறை குழந்தையிடம் ஒப்புக் கொள்ளுங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள் .
2. நீங்கள் ஏன் பொய் சொன்னீர்கள் என்கிற காரணத்தை (தேவைப்பட்டால்) தெளிவுபடுத்தும் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உண்மையின் மதிப்பை வலியுறுத்துங்கள்
3. உறுதிமொழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நம்பிக்கையை மீட்டெடுக்கவும்.
4. பொய்யின் விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும், நேர்மையை வலுப்படுத்தவும்.
5. நம்பிக்கையை மீண்டும் தட்டியெழுப்ப நிலையான உண்மை நடத்தையை வெளிப்படுத்துங்கள்
6. கவலைகள் அல்லது கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளக் குழந்தையை அழைக்கவும்