குளிர் வாட்டிவதைக்கிறதா? எப்படி சமாளிக்கலாம்?

winter season
winter season
Published on

இந்தியா போன்ற நாடுகளில் நிகழும் பருவநிலை மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களால், சில நேரங்களில் அதீத குளிர் நிறைந்த சூழ்நிலையை நாம் எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக பலருக்கு தேவையற்ற உடல் உபாதைகள் மற்றும் அந்த குளிரை தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்படும் போது இயல்பாக செயல்படாமல் போகலாம். இதை எப்படி சமாளிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.   

எந்தெந்த ஆடைகளை உடுத்தலாம்

முதலாவதாக, சரியான ஆடைகளை அணிவது முக்கியம். வெப்பத்தை பராமரிக்க சில அடுக்குகள் கொண்ட துணிகளை உடுப்பது மிகவும் அவசியம். அதில் உங்கள் உடலிலிருந்து வரும் வியர்வையை போக்க ஈரப்பதத்தை உறிஞ்சும் துணி இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். பின், உடலின் வெப்பத்தை தக்கவைக்க கம்பளி போன்ற துணிகளை தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். இறுதியாக, உங்கள் தோளை வெளிப்புற காற்றில் இருந்து பாதுகாக்க நீர்ப்புகா மற்றும் காற்று புகாத  ஆடைகளை பயன்படுத்துங்கள். தொப்பிகள், கையுறைகள் போன்றவற்றை பயன்படுத்த தவறாதீர்கள். காரணம் காதுகள், உள்ளங்கைகள் தான் விரைவாக வெப்பத்தை இழக்கின்றன.

உடலளவில் எப்படி இருக்க வேண்டும் 

உங்கள் உடல் வெப்பநிலையை பராமரிக்க நீரேற்றமாக இருப்பது முக்கியம். மூலிகை தேநீர் (herbal teas), சூப்கள் அல்லது சூடான நீர் போன்ற சூடான திரவங்களை குடிப்பது உங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்து உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். காஃபின்(caffeine) மற்றும் ஆல்கஹால் பொருட்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நீரிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் இதனால் உங்கள் உடலில் தேவையான வெப்பத்தை தக்க வைப்பது கடினமாகும்.

உடலில் நடுக்கம் உள்ளவர்களுக்கு சில உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது வெப்பத்தை உருவாக்கி ஆற்றல் சுழற்சியை மேம்படுத்தும். இதற்கு நடைப்பயிற்சி, ஜாகிங் அல்லது வீட்டு வேலைகள் போன்ற எளிய பயிற்சிகள் உங்களை உடலை வெப்பமாக வைக்கும். கூடுதலாக, சூடான தண்ணீர் பாட்டில்கள், வெப்பமூட்டும் பட்டைகள் (heating pads) அல்லது மின்சார போர்வைகள் (electric blankets) உங்களுக்கு உடனடி கதகதப்பு தன்மையை வழங்க முடியும்.

குளிர்ந்த காலநிலைக்கு உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு அதிகப்படியான  கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள்(Proteins) மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த ஒரு சீரான உணவை உட்கொள்வது உங்கள் உடல் சூடாக வைத்திருக்க தேவையான ஆற்றலை வழங்குகிறது. முழு தானியங்கள், குறைந்த இறைச்சிகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற உணவுகளும் சிறந்த தேர்வுகளாகும். முடிந்தால் இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு போன்ற சில மசாலாப் பொருட்களையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் அவையும் உங்கள் உடலுக்கு தேவையான சூட்டை தரலாம்.

இதையும் படியுங்கள்:
நீண்ட காலம் வீட்டிலேயே இருக்கும் நபரா நீங்கள்? ஜாக்கிரதை! 
winter season

உங்கள் உட்புறங்களை எப்படி மாற்றலாம் 

உங்கள் உட்புற சூழலை சூடாக வைத்திருப்பதும் அவசியம். குளிர்காற்றை தடுக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சரியாக மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் வீட்டு ஜன்னலை சுற்றி தடிமனான ஸ்கிரீன்ஸ் (Screens) பயன்படுத்தவும். உங்கள் இடத்தின் வெப்பத்தை பராமரிக்க Room heaters இருந்தால் அது கூடுதல் நன்மையை தரலாம். 

இதெல்லாம் போக இயல்பாகவே குளிர்ந்த சூழ்நிலைகளுக்கு உங்கள் உடலைப் பழக்கப்படுத்துவது படிப்படியாக உங்களை குளிர்ந்த வெப்பநிலைக்கு ஏற்றவாறு உங்கள் உடலை இயல்பாக மாற்றிவிடும். அதற்கு வெளியில் உள்ள குளிர்ந்த சூழ்நிலையில் கொஞ்ச நேரத்தை செலவிடுங்கள் தொடக்கத்தில் இது கடினமாக இருந்தாலும், இந்த செயல்முறை உங்கள் உடலின் தெர்மோர்குலேஷன் (thermoregulation) மேம்படுத்த உதவுகிறது. இது தான் உங்கள் உடலை எல்லா பருவ காலங்களிலும் உங்கள் உடலுக்கு தேவையான வெப்பத்தை பராமரிக்கும். 

எனவே, நீரேற்றமாக இருப்பது, காலத்திற்கேற்ற தகுந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆகாரங்களை உட்கொள்வது மற்றும் தகுந்த ஆடைகளை உடுத்துவது போன்றவற்றை கடைபிடிப்பது உங்களை எந்த பருவத்திலும்  உடலை இயல்பாக செயல்படும் படி பார்த்துக் கொள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com