
தனிமை என்பது ஒரு கனமான பாரத்தை போன்றது. அதை சுமக்கவும் முடியாது. இறக்கி வைக்கவும் முடியாது. ஆனால், அதை இறக்கி வைக்கும் சக்தி உங்களிடம் கண்டிப்பாக உள்ளது.
சில சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலைகளின் காரணமாக நாம் தனிமையில் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். குழந்தைகள் வெளிநாட்டிலே வேலை செய்யலாம்; நமக்கு வெளிநாட்டில் ஒத்து போகமால் இருக்கலாம்; கணவனோ அல்லது மனைவியோ இறந்திருக்கலாம். சில பேருக்கு எல்லோரும் பக்கத்தில் இருந்தால் கூட தனிமையாக இருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இந்த தனிமை மிகக் கொடுமையானது. இந்த தனிமையை விரட்டாவிட்டால் பலவிதமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
சரியான பழக்கவழக்கங்களுடன், நீங்கள் தனிமையை தனியாளாக இருந்து மாற்றலாம். தனிமையிலிருந்து விடைபெற்று, தனிமையை ஏற்றுக்கொள்ள உதவும் 7 முக்கியமான பழக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்:
1) சுய அன்பைத் தழுவுங்கள்:
தனிமையை எதிர்த்துப் போராட நீங்கள் வளர்த்துக் கொள்ளக்கூடிய மிக முக்கியமான பழக்கங்களில் ஒன்று இந்த சுய அன்பு. சுய அன்பு என்பது சுயநலமாக இருப்பது பற்றியல்ல. சுய அன்பு என்பது உங்களைப் பற்றி நீங்களே பாராட்ட வேண்டும்; உங்களது மதிப்பை மதிக்க வேண்டும்; மேலும் உங்கள் மீது நீங்களே கருணை காட்ட வேண்டும் என்பதாகும்.
அவ்வாறு, நீங்கள் உங்களை தனக்குத் தானே நேசிக்கும் போதும், பாராட்டும் போதும், அந்த வெற்றிடத்தை நிரப்ப மற்றவர்கள் தேவை இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். மேலும் இது உங்களை திருப்தியாகவும் முழுமையாகவும் உணர வைக்கிறது.
2) அடுத்தவர்களிடம் தொடர்பில் இணையுங்கள்:
தனிமையாக உணரும் சமயத்தில் நீங்கள் தனியாக இல்லை என்பதை அடிக்கடி நினைவில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் தொடர்பு கொண்டால் இணையத் தயாராக இருக்கும் நபர்கள் உங்களைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். தன்னார்வத் தொண்டு செய்யலாம், கிளப்புகள் அல்லது குழுக்களில் சேரலாம் அல்லது அண்டை வீட்டாருடன் பேசிக் கொண்டிருக்கலாம். இவ்வாறு தொடர்பில் இருந்து கொண்டிருந்தால் நம்மால் தனிமையின் உணர்வுகளைப் போக்க முடியும்.
3) செல்லப் பிராணியை வளர்க்கவும்:
செல்லப்பிராணிகள், அது நாயாக இருந்தாலும் சரி, பூனையாக இருந்தாலும் சரி, அல்லது மீனாக இருந்தாலும் சரி, அவற்றால் நமக்கு நம்பமுடியாத அளவிற்கு friendship கிடைக்கும்.
உண்மையில், ஒரு செல்லப்பிராணியை வைத்திருப்பது தனிமை மற்றும் மனச்சோர்வு உணர்வுகளை கணிசமாகக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மற்றொரு உயிரினத்தைப் பராமரிக்கும் செயல், நமக்கு ஒரு நோக்கத்தை அளிக்கிறது. செல்லபிராணிகள் நமக்கு நம்பமுடியாத அளவிற்கு நிறைவைத் தரும்.
4) இயற்கையை ரசிக்கவும்:
இயற்கையை ரசிப்பதால் நமக்கு சொல்லமுடியாத ஒரு அமைதி கிடைக்கிறது. பறவைகளின் கீச்சிடும் சத்தம், காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பு, சூரியனின் அற்புதமான அஸ்தமனக் காட்சி - இவை அனைத்தும் மிகவும் பார்ப்பதற்கு மிகவும் அருமையானவை.
தனிமையாக உணரும் நேரத்தில், நீங்கள்இயற்கையில் மூழ்கும் போது அது உங்களுக்கு ஆறுதலையும், மன அமைதியையும் தரும்.
பூங்காவிற்கு தினமும் நடந்து செல்லுங்கள், வார இறுதி நாட்களில் ஹைகிங் செல்லுங்கள், அல்லது உங்கள் கொல்லைப்புறத்தில் அமர்ந்து உங்களைச் சுற்றியுள்ள அழகை ரசியுங்கள். இயற்கையோடு நீங்கள் இணையும்போது, தனிமை உணர்வுகள் மறைந்து போவதை நீங்கள் காணலாம்.
5) ஒரு பொழுது போக்கை ஏற்படுத்தி கொள்ளவும்:
உங்களுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கைக் கண்டுபிடிக்கவும். அது கண்டிப்பாக தனிமையின் உணர்வுகளைக் கணிசமாகக் குறைக்கும். ஏதாவது ஒரு பொழுது போக்கை வழக்கமாக்கினால் அது உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கு மகிழ்ச்சியையும் தரும்.
ஆகவே உங்களுக்கான நேரத்தைச் மகிழ்ச்சியோடு செலவிடும் வகையில் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்து வைப்பது மிக அவசியம். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் - ஓவியம் வரைதல், தோட்டக்கலை, இசைக்கருவி வாசித்தல், எழுதுதல் - போன்றவற்றில் உங்களை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த அனுமதிக்கும் ஒன்றைக் கண்டுபிடித்து அதில் கவனத்தை திசை திருப்புங்கள்.
6) வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுதல்:
உடற்பயிற்சி உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் மன நலனுக்கும் நல்லது.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உங்கள் உடல் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. அவை நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஹார்மோன்கள். இந்த ஹார்மோன்கள் உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் தனிமை உணர்வுகளைக் குறைக்கவும் உதவும்.
அது ஒரு சுறுசுறுப்பான நடைப்பயிற்சியாக இருந்தாலும் சரி, யோகா பயிற்சியாக இருந்தாலும் சரி, அல்லது ஜிம்மில் தீவிரமான உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி, உங்களுக்குப் பிடித்தமான ஒரு உடற்பயிற்சி முறையைக் கண்டுபிடித்து அதை உங்கள் வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்குங்கள்.
7) தொழில்முறை ஒன்றை தொடங்குங்கள்:
தனிமையை மிக அதிகமாக உணரத் தொடங்கினால், தொழில்முறை ஒன்றை நாடுவது முக்கியம். உங்கள் உணர்வுகளை வழிநடத்தவும், தனிமையை வெல்ல உத்திகளை உருவாக்கவும், சிறந்த ஆலோசர்களை நாடி உங்களுக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு தொழிலை தொடங்க உதவி கேட்கலாம். அவ்வாறு தொடங்கினால் நம்முடைய முக்கால் வாசி நேரத்தை அதில் செலவழித்து விடலாம் மேலும் நாள் முழுவதும் நம்முடன் யாராவது இருந்து கொண்டே இருப்பார்கள். நம் வசதிக்கேற்ப தொடங்கினால் போதும். பெரிய அளவில் துவங்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சிறிய பெட்டி கடையை கூட திறக்கலாம். ஏதாவது ஒன்றை தொடங்கி நம் கவனத்தை திசை திருப்பலாம்.
ஆகவே, தனிமை உங்களைத் தாக்கும்போது, அதை மாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கவனமுள்ள பயிற்சிகள், இதயப்பூர்வமான தொடர்புகள் மற்றும் சுய அன்பின் ஒரு துளி மூலம், நீங்கள் தனிமையை வெல்லலாம்.