வீட்டிலேயே பாட்டில்ல ரோஸ்மேரி வளர்க்கணுமா? இதோ 5 ஈஸி டிப்ஸ்!

Rosemary
Rosemary
Published on

ரோஸ்மேரி செடி ஒரு வாசனையான மூலிகை. சமையலுக்கு, வாசனைக்காகன்னு நிறைய விஷயங்களுக்கு இதை யூஸ் பண்ணுவோம். இத தோட்டத்துலதான் வளர்க்கணும்னு இல்ல, சின்ன இடத்துல இருக்கறவங்க கூட, ஒரு பாட்டில்ல இதை ஈஸியா வளர்க்கலாம். உங்க வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி ரோஸ்மேரி தோட்டம் உருவாக்க ஆசையா இருக்கா? அப்போ, இதோ சில சிம்பிள் டிப்ஸ்.

1. சரியான கட்டிங்கை தேர்வு செய்யுங்க:

ஒரு ஆரோக்கியமான ரோஸ்மேரி செடியில இருந்து ஒரு கட்டிங்கை எடுக்கணும். ஒரு 4-6 இன்ச் நீளமுள்ள, நுனியில் புதுசா வளர்ற பகுதியை பார்த்து கட் பண்ணுங்க. ரொம்ப மரக்கட்டையா இல்லாத, இளம் தண்டை தேர்ந்தெடுக்கறது நல்லது. அப்புறம், கட்டிங்கோட அடியில இருக்கிற இலைகளை ஒரு இன்ச் அளவுக்கு எடுத்துடுங்க. ஏன்னா, தண்ணில இலைகள் பட்டா அழுகிடும்.

2. பாட்டிலும், தண்ணீரும் முக்கியம்:

ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கங்க. பழைய ஜாம் பாட்டில், ஜூஸ் பாட்டில்னு எது வேணாலும் ஓகே. பாட்டில் பெருசா இருக்கணும்னு இல்ல, கட்டிங் நிக்கிற அளவுக்கு இருந்தா போதும். பாட்டில்ல சாதாரண tap water-ஐ ஊத்துங்க. கட்டிங்கோட அடிப்பகுதி, இலைகள் இல்லாத பகுதி, தண்ணிக்குள்ள மூழ்கி இருக்கணும். ரொம்ப ஆழமா மூழ்க விடாதீங்க.

3. சரியான இடத்தைத் தேர்ந்தெடுங்க:

ரோஸ்மேரி செடிக்கு நல்ல சூரிய ஒளி தேவை. அதனால, பாட்டிலை நல்ல வெயில் படுற இடத்துல வைங்க. ஜன்னல் பக்கத்துல, பால்கனிலனு எங்கயாவது வைக்கலாம். ஒரு நாளைக்கு குறைஞ்சது 6-8 மணி நேரம் சூரிய ஒளி கிடைச்சா நல்லது. வெளிச்சம் கம்மியா இருந்தா, செடி சரியா வளராது.

4. தண்ணீரை மாத்த மறக்காதீங்க:

இது ரொம்ப முக்கியமான டிப். தினமும் இல்லனா ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாட்டில்ல இருக்கிற தண்ணியை மாத்தணும். தண்ணி அழுக்கா ஆச்சுன்னா, வேர்கள் அழுகிடும். புது தண்ணி ஊத்துறது மூலமா, வேர்கள் நல்லா வளர தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். ஒரு சில வாரங்கள்ல கட்டிங்ல இருந்து சின்ன சின்ன வேர்கள் வர்றத நீங்க பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
மண் பானை வாங்கப் போறீங்களா? இவையெல்லாம் கவனத்தில் இருக்கட்டும்!
Rosemary

5. மண்ணுக்கு மாத்துங்க:

வேர்கள் ஒரு இன்ச் அளவுக்கு நல்லா வளர்ந்ததும், கட்டிங்கை மண்ணுக்கு மாத்த தயார் ஆகிடுச்சுன்னு அர்த்தம். ஒரு சின்ன தொட்டியில நல்லா வடிகால் வசதியுள்ள மண்ணை எடுத்துக்கங்க. ரோஸ்மேரிக்கு களிமண் விட, லேசான, மணல் கலந்த மண் நல்லது. கட்டிங்கை மெதுவா மண்ணுல நட்டு, சுத்தி இருக்கிற மண்ணை லேசா அழுத்தி விடுங்க. அப்புறம் கொஞ்சம் தண்ணி ஊத்துங்க. மண்ணுக்கு வந்ததும் செடி இன்னும் நல்லா வளர ஆரம்பிக்கும்.

இந்த சிம்பிள் டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணா, உங்க வீட்லயே ஒரு அழகான, வாசனையான ரோஸ்மேரி செடியை பாட்டில்ல வளர்க்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com