ஒரு வாரம் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் செடிகள் வாடாது... சூப்பரான வைக்கோல் ரகசியம்!

keep-plants-hydrated
keep-plants-hydrated
Published on

குடும்பத்தோடு ஒரு வாரம் ஜாலியாக ஊருக்குப் போகலாம் என நினைக்கும்போது முதலில் நினைவுக்கு வருவது வீட்டில் ஆசையாக வளர்க்கும் செடிகள் தான். நாம் ஊருக்குப் போனால் இதற்கு யார் தண்ணீர் ஊற்றுவார்கள் என்ற கவலை எல்லோருக்குமே கட்டாயம் இருக்கும். இதற்காகப் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கெஞ்சிக்கொண்டு இருக்க வேண்டிய நிலைமை பலருக்கும் வரும். 

ஆனால் இனிமேல் அந்த கவலையே உங்களுக்கு சுத்தமாக வேண்டாம். நீங்கள் வீட்டில் இல்லை என்றாலும் உங்களின் செடிகள் வாடாமல் எப்போதுமே பசுமையாக இருக்க ஒரு சூப்பரான இயற்கை ஐடியா இருக்கிறது. வைக்கோலை வைத்து எப்படி செடிகளைப் பாதுகாப்பது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இது எப்படி வேலை செய்கிறது?

செடிகளின் வேர்ப் பகுதியில் காய்ந்த வைக்கோலை ஒரு போர்வை போல மூடி வைக்கச்  சொல்கிறார்கள் தோட்டக்கலை நிபுணர்கள். இப்படிச் செய்வதால் முக்கியமாக மூன்று பெரிய லாபங்கள் நமக்குக் கிடைக்கிறது. 

  1. இது ஒரு சிறந்த ஸ்பாஞ்ச் போல செயல்பட்டு, தண்ணீரை அப்படியே தன்னுள் உரிஞ்சி ரொம்ப பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும். இதனால் மண்ணில் உள்ள ஈரம் சீக்கிரம் காயாமல் செடிகளுக்குத் தேவையான தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஒரு வாரம் நீங்கள் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் செடி வாடவே வாடாது.

  2. கடுமையான வெயில் காலங்களில் மண்ணின் அதீத சூட்டை ரொம்பவே குறைத்து வேர்களுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். 

  3. செடிகளுக்கு நடுவே தேவையில்லாத களைகள் முளைப்பதைப் பெரிய அளவில் தடுத்து நிறுத்தும். வைக்கோல் சூரிய ஒளியை மண்ணுக்குள் நுழைய விடாமல் தடுப்பதால், தேவையற்ற களைகள் முளைக்க அங்கு வழியே இல்லாமல் போய்விடும்.

இதையும் படியுங்கள்:
ஜோதிர்லிங்க தரிசனம்: பார்லி வைத்தியநாதர் கோயிலுக்கு எப்படிச் செல்வது?
keep-plants-hydrated

எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது?

இந்த வைக்கோல் ஐடியாவைச் சரியாகச் செய்தால் மட்டுமே அதற்கான முழுமையான பலன் உங்களுக்குக் கிடைக்கும். செடிகளைச் சுற்றி சுமார் இரண்டு முதல் மூன்று இன்ச் அளவுக்கு மட்டுமே வைக்கோலைப் பரப்பி வைக்க வேண்டும். தடிமனாகப் போட்டால் உள்ளே காற்று போகாது, மெலிதாகப் போட்டாலும் உங்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது. 

அதேபோல செடியின் தண்டுப் பகுதியில் கட்டாயம் கொஞ்சம் இடைவெளி விட்டுத் தான் வைக்கோலைப் போட வேண்டும், இல்லையென்றால் அதிக ஈரப்பதம் காரணமாகத் தண்டு சீக்கிரமாக அழுகிப் போக வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் மழை அதிகமாகப் பெய்யும் என்றால் மெல்லிய லேயராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவே நல்ல அனல் அடிக்கும் பகுதி என்றால் கொஞ்சம் தடிமனாகப் போட்டுக்கொள்ளலாம். தக்காளி மற்றும் காய்கறி செடிகளுக்கு இது அருமையாக செட் ஆகும். ஆனால் வறட்சியைத் தாங்கி வளரும் செடிகளுக்கு இதை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் செல்வம் சேரனுமா? இந்தச் செடிகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள்!
keep-plants-hydrated

செடிகளை ஆசையாக வளர்த்துவிட்டு ஊருக்குப் போகும்போதெல்லாம் அதைப் பற்றியே நினைத்துக் கவலைப்படுவதைத் தவிர்க்க இது ஒரு சிறந்த வழி. எந்த ஒரு விலை உயர்ந்த வாட்டரிங் செட்டப்பும் இல்லாமல் முற்றிலும் இயற்கையான முறையில் செடிகளை நாமே சுயமாக வளர வைக்க இந்த எளிய வைக்கோல் ஐடியா உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com