

நமது சேமிப்பில் மிகவும் பாதுகாப்பாக இருப்பவை நம் வீடு போன்ற சொத்துப் பத்திரங்கள் மற்றும் வங்கி ஆவணங்களும்தான். சமயங்களில் ஏதேனும் ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் இதுபோன்ற ஆவணங்கள் அல்லது பத்திரங்கள் காணாமல் போய்விடும் வாய்ப்புகள் உண்டு. நாமே அதை ஒரு இடத்தில் ரகசியமாக வைத்துவிட்டு பிறகு அதை மறந்து தேடுவதும் உண்டு. இதுபோல் பத்திரம் தொலைந்து விட்டால் கவலைப்படுவதை விட, அதை மீட்க என்ன செய்யலாம் என்பதற்கான சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
முதலில் பத்திரம் காணவில்லை எனத் தெரிந்தவுடன் பதற்றப்படாமல் தீர ஆராய்ந்து எங்கெல்லாம் வைத்திருப்போம் என உணர்ச்சிவசப்படாமல் தேடிப் பார்க்கவும். மிகவும் முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று பத்திரம் தொலைந்த விஷயத்தை தெளிவாக எழுதி புகார் அளித்து பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் புகார் பெற்றுக் கொண்ட ரசீதை அவசியம் பெற வேண்டும்.
இரண்டு நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை என்றால் காவல் நிலையத்தில் F.I.R. பதிவு செய்வார்கள். பிரபல பத்திரிக்கைகளில் பத்திரம் காணவில்லை என்று விளம்பரம் கொடுப்பது மிகவும் அவசியமாகும். பிறகும் கிடைக்கவில்லை என்றால் பொறுப்பு காவலரை சந்தித்து சொத்து ஆவணத்தின் முக்கியத்துவத்தை சொல்லி சீக்கிரம் NOT TRACEBLE கண்டுபிடிக்கவில்லை என்று சான்று பெறுதல் வேண்டும். பிறகு நோட்டரி வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் பத்திரம் தொலைந்து விட்டது என உறுதி சான்று (AFFIDAVIT) பெறுதல் வேண்டும். பத்திரப் பதிவு அலுவலகத்தில் உங்களுடைய பத்திர நகலை COPY OF DOCUMENT போட்டு நகலைப் பெறுதல் வேண்டும்.
இதெல்லாம் முறையாக செய்ய பணம், உழைப்பு, நேரம் ஆகியவற்றை செலவு செய்தே ஆக வேண்டும். ஏனெனில், இவற்றை செய்தால்தான் பத்திரம் செல்லும். இவ்வளவு டென்ஷன் அனுபவிப்பதைத் தவிர்த்து முக்கியமான பத்திரத்தை எப்படிப் பாதுகாப்பது எப்படி என்பதை இனி பார்ப்போம்.
நாம் வாங்கிய சொத்து பத்திரத்தை பாதுகாப்பான இடத்தில் வைப்போம்., நெருப்பு, எண்ணெய், இங்க், பெயிண்ட் போன்ற பொருட்கள் பத்திரத்தில் படாத இடத்தில் வைக்க வேண்டும். பத்திரம் செய்யும்போதே இரண்டாம் பிரதி (SECOND COPY) என்று குறைவான முத்திரைத்தாளில் பத்திரத்தில் என்னவெல்லாம் எழதியுள்ளதோ அதேபோல் எழுதி பத்திர அலுவகத்தில் அதே எண்ணில் பதிவு செய்யலாம்.
டெக்னாலஜி வசதியில் இப்பொழுது எல்லா பத்திரங்களையும் முறையாகவே SCAN செய்து உங்களில் GOOGLE DRIVEல் SOFT COPY ஆக வைத்து கொள்வது மிகப் பயனுள்ளது. தேவைப்படும்போது SOFT COPYகள் மூலம் நகல் எடுத்துக் கொள்ளலாம். இந்த SECOND COPYயை மின்சாரம் & பட்டா போன்ற பெயர் மாற்றம் மற்றும் கட்டட அனுமதி என அவசியம் தேவைப்படும் இடங்களில் ஒரிஜினலுக்கு பதில் காட்டலாம். இதனால் ஒரிஜினலை வெளியில் எடுத்துச் செல்லும் வாய்ப்பு குறைவாகும்.
பெரும்பாலும் ஒரிஜினல் நகல் எடுக்கும் கடைகளில், நகல் எடுக்கச் செல்லும் போதோதான் அதிகம் தொலைகிறது. அதற்கு முன்பே பத்திரத்தை ஒரு நகல் கலர் Xerox COPY போட்டு அதனை MASTER COPYஆக பயன்படுத்துவதே நல்லது. அதேபோல் பத்திரங்களை பயணங்களில் தொலைப்பவர்களும் உண்டு. பயணத்தின்போது பத்திரத்தை நல்ல பைலில் வைத்து பாதுகாப்பான கைப்பைகளில் கொண்டு செல்வது நல்லது.