2025ம் ஆண்டில் உடல் எடையைக் குறைக்க அதிகம் பேர் கடைப்பிடித்த டயட்டுகள்!

Weight loss diet
woman drinking natural vegetable juice
Published on

ம்மில் பெரும்பாலானவர்கள் உடல் எடையை குறைக்க ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் வாக்குறுதி எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் 2025ம் ஆண்டில் அதிகம் கடைபிடிக்கப்பட்ட டயட்டுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. தாவர அடிப்படையிலான டயட்: 2025ம் ஆண்டில் அதிகம் பேரால் கடைபிடிக்கப்பட்ட டயட்டாக தாவர அடிப்படையிலான டயட் இருக்கிறது. இந்த  டயட்டில் விலங்கு உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட்டு,  பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை அதிகம் உணவில் சேர்க்கப்படுகின்றன. இதனால் தாவர அடிப்படையிலான டயட் இருப்பவர்களுக்கு உடல் எடை விரைவாக குறைவதோடு, செரிமானம் மேம்படுகிறது. மேலும், சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள இந்த டயட் உதவி புரிகிறது.

இதையும் படியுங்கள்:
மளிகைச் செலவு பணத்தை கணிசமாகக் குறைக்க எளிய டிப்ஸ்!
Weight loss diet

2. இடைவிடாத உண்ணாவிரதம் (Intermittent Fasting): இடைவிடாத உண்ணாவிரதத்தின் எளிமை மற்றும் செயல்திறன் காரணமாக (Intermittent Fasting) 2025ம் ஆண்டில் மக்களால் அதிகம் பின்பற்றப்பட்ட மற்றொரு டயட்டாக இது இருக்கிறது. 16 : 8 மற்றும் 14 : 10 போன்ற பிரபலமான முறைகள், அதாவது உணவில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் குறிப்பிட்ட நேர வரம்புகளுக்குள் சத்தான உணவுகளை மட்டும் சாப்பிடுவது. இந்த டயட்டில் சத்தான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதால் உடலின் மெட்டபாலிசம் மேம்பட்டு, உடல் எடையை கட்டுப்படுத்தி, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கச் செய்கிறது.

3. உயர் புரோட்டீன் டயட்: 2025ல் உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக வைத்திருக்க விரும்பியவர்கள் கடைபிடித்த பிரபலமான டயட்டாக இது இருக்கிறது. இந்த டயட்டில் உயர்தரமான புரோட்டீன் நிறைந்த உணவுகளான பருப்பு வகைகள், முட்டை, பால், மீன், டோஃபு மற்றும் தோல் நீக்கிய இறைச்சிகள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து உண்கின்றனர். இதனால் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக எடுக்கப்படுவதால், எடை இழப்பு ஆர்வலர்கள் முதல் ஜிம் குழுக்கள் வரை அனைவரிடமும் உயர் புரோட்டின் டயட் பிரபலமடைந்தது.

இதையும் படியுங்கள்:
ஃபோனில் பேசுவதை விட மெசேஜ் அனுப்பத்தான் இளைய தலைமுறைக்கு அதிகம் பிடிக்கிறது! ஏன் தெரியுமா?
Weight loss diet

4. குடல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட டயட்: செரிமான ஆரோக்கியத்தை முக்கியமாக உணர்ந்தவர்கள் 2025ம் ஆண்டில் குடல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட இந்த டயட்டை மேற்கொண்டனர். புளித்த உணவுகள், நார்ச்சத்துள்ள உணவுகளான பழங்கள், காய்கறிகள், புரோபயோடிக்குகள் மற்றும் ப்ரீபயோடிக்குகள் போன்றவை இந்த வகை டயட்டில் அடங்கும். செரிமான மண்டலத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இந்த டயட்டின் சிறப்பாகும்.

5. மத்திய தரைக்கடல் மற்றும் DASH டயட்டுகள்: பிரபலமான மற்றும் நம்பகமான உணவு முறைகளில் ஒன்றாக 2025ம் ஆண்டில் மத்திய தரைக்கடல் மற்றும் DASH டயட்டுகள் திகழ்கின்றன. முழு உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவதே இந்த இரண்டு டயட்டின் முக்கியத்துவமாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் அதிகப்படியான உப்பை இந்த இரண்டு டயட்டிலுமே கட்டுப்படுத்த வேண்டும்.

வரும் 2026ம் ஆண்டில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் 2025ம் ஆண்டில் பின்பற்றப்பட்ட மேற்கூறிய டயட்டுகளை பின்பற்றி உடல் எடையை குறைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com