நீங்கள் பல் தேய்காமலேயே உங்கள் பல் பளபளப்பாகிவிடும்! எப்படி?

Electric Tooth Brush
Electric Tooth Brush

லெக்ட்ரிக் டூத் பிரஷின் பட்டனை அழுத்தி பற்களின் மீது வைத்தால் தாமாக இயங்கி சுழன்று பற்களை சுலபமாக சுத்தம் செய்து விடும். இந்த பதிவில் எலெக்ட்ரிக் டூத் பிரஷ்களின் சாதக பாதகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பல்மருத்துவத் துறையானது இன்று மிகவும் நவீனமயமாகி விட்டது. தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக பல புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக தற்போது பற்களைச் சுலபமாகவும், சரியாகவும் சிரமமின்றித் துலக்க எலெக்ட்ரிக் டூத் பிரஷ்கள் (Electric Tooth Brush) பயன்பாட்டிற்கு வந்து விட்டன.

ற்களை முறையாக சுத்தம் செய்து அவற்றைப் பாதுகாத்தால் பலவிதமான பிரச்சினைகளைத் தொடக்கத்திலேயே தவிர்த்து விடலாம். உணவுகளை மென்று சாப்பிட்டு முடித்ததும் தண்ணீரைக் கொண்டு நன்றாகக் கொப்பளிப்பது மிகவும் அவசியமான ஒன்று. பற்களின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும் உணவுத் துகள்களே பலவிதமான பல் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக உள்ளன என்றால் அது மிகையில்லை. காலையில் எழுந்ததும் மற்றும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னரும் என தினந்தோறும் இரண்டு முறைகள் பற்களை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

தொடக்கத்தில் ஆலங்குச்சி மற்றும் வேப்பங்குச்சிகளைக் கொண்டு பற்களைத் துலக்கினோம். பின்னர் வலது ஆள்காட்டி விரலால் சாம்பல் மற்றும் பற்பொடிகளைக் (Tooth Powder) கொண்டு பற்களைத் துலக்கினோம். டூத் பிரஷ்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பற்பசைகளைக் (Tooth Paste) கொண்டு பற்களைத் துலக்கத் தொடங்கினோம். இந்த நடைமுறையே இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.

எலெக்ட்ரிக் டூத் பிரஷின் பட்டனை அழுத்தி பற்களின் மீது வைத்தால் தாமாக இயங்கி சுழன்று பற்களை சுலபமாக சுத்தம் செய்து விடும். இந்த பதிவில் எலெக்ட்ரிக் டூத் பிரஷ்களின் சாதக பாதகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பல்மருத்துவத் துறையானது இன்று மிகவும் நவீனமயமாகி விட்டது. தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக பல புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக தற்போது பற்களைச் சுலபமாகவும், சரியாகவும் சிரமமின்றித் துலக்க எலெக்ட்ரிக் டூத் பிரஷ்கள் (Electric Tooth Brush) பயன்பாட்டிற்கு வந்து விட்டன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடியதாக எலெக்ட்ரிக் டூத் பிரஷ்கள் உள்ளன. இது அனைத்து பற்களையும் பல் இடுக்குகளையும் சுத்தம் செய்யக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு முறைப்படிப் பற்களைத் துலக்கினால் பற்கள் நன்றாக சுத்தம் செய்யப்படுகிறது.

லெக்ட்ரிக் டூத் பிரஷ்களில் உள்ள ஒரு சாதகமான விஷயம் அதில் பொருத்தப்பட்டுள்ள டைமர் (Timer) எனும் அமைப்பாகும். நாம் சாதாரண பிரஷ்களைக் கொண்டு பற்களைத் துலக்கும் போது நாம் பற்கள் நன்றாக சுத்தமாக வேண்டும் என்ற எண்ணத்தினால் அதிக நேரம் அழுத்தி பற்களைத் தேய்ப்போம். எலெக்ட்ரிக் டூத் பிரஷ்களில் டைமர் பொருத்தப்பட்டுள்ளததால் தேவையான அளவிற்கு மட்டுமே பற்களைத் தேய்க்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. நாம் எத்தனை நிமிடங்களுக்கு பற்களைத் துலக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அந்த நேரத்தை டைமர் மூலம் செட் செய்து கொண்டு பற்களைத் துலக்க முடியும். மேலும் இது பற்களையும் இடுக்குகளையும் மென்மையாக சுத்தம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.

சாதாரண டூத் பிரஷ்களால் பற்களைத் தேய்க்கும் போது அவை ஈறுகளை சேதப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். எலெக்ட்ரிக் டூத் பிரஷ்கள் மென்மையாக பற்களைத் தேய்ப்பதால் ஈறுகள் பாதிப்படைவது தவிர்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) உத்தரவுகள் 2024 - ஒரு பார்வை!
Electric Tooth Brush

ற்களில் கிளிப் (Dental Braces) அணிந்தவர்களுக்கு எலெக்ட்ரிக் டூத் பிரஷ் பல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் கிளிப் அணிந்துள்ள பகுதியில் இடுக்குகளை சாதாரண டூத் பிரஷ்களால் சரிவர சுத்தம் செய்ய இயலாது. ஆனால் எலெக்ட்ரிக் டூத் பிரஷ்கள் முடிந்த அளவிற்கு கிளிப் அணிந்துள்ள பகுதிகளை நன்றாக சுத்தம் செய்கின்றன. இது எலெக்டரிக் டூத் பிரஷ்களின் தனித்தன்மையாகும்.

வயதானவர்கள், நரம்பியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் டூத் பிரஷ்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். காரணம் இவர்களுக்கு சாதாரண டூத் பிரஷ்களை கையாளுவது சிரமம் என்பதால் பல் மருத்துவர்களால் எலெக்ட்ரிக் டூத் பிரஷ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

சில எலெக்ட்ரிக் டூத் பிரஷ்களில் மோட் (Mode) என்றொரு வசதியும் உள்ளது. உதாரணமாக பல் கூச்சம் உள்ளவர்கள் இதில் உள்ள சென்சிடிவ் மோடைத் (Sensitive Mode) தேர்வு செய்து பயன்படுத்தலாம். ஈறு பிரச்சினை உள்ளவர்கள் கம் கேர் மோடைத் (Gum Care Mode) தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

சாதாரண டூத் பிரஷ்களை விட எலெக்ட்ரிக் டூத் பிரஷ்களின் விலை மிக அதிகமாக உள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் இதைப் பயன்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. மேலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எலெக்ட்ரிக் டூத் பிரஷ்களின் முனையில் உள்ள சுத்தம் செய்யும் கருவியினை (Tooth Brush Head) மாற்றியாக வேண்டும். இதற்கும் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com