வேலைப்பளுவை குறைத்து வாழ்க்கையை ரசிக்க 5 எளிய வழிகள்: நீங்களும் ட்ரை பண்ணுங்க!

work life balance tips
work life balance tips
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வேலை செய்யும் இடத்தை மகிழ்ச்சியாக மாற்ற தெளிவான எல்லைகளை (Work-life balance) வகுத்துக்கொள்வது நல்லது. அலுவலகத்தில் நேர்மறையான உறவுகளை வளர்த்துக்கொண்டு, சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தலாம். தினசரி சிறு இலக்குகளை நிர்ணயித்து,  உழைப்பிற்குரிய பாராட்டுகளை அங்கீகரிக்கவும், கொண்டாடவும் பழகிக்கொள்ளலாம்.

நம்முடைய அன்றாடப் பணிச்சூழலை சுமையின்றி மகிழ்ச்சியாக ஆக்குவதற்கு அலுவலக நேரம் முடிந்ததும் பணி தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் அழைப்புகளைத் தவிர்த்து, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டால் வேலை-வாழ்க்கை இரண்டிலும் சமநிலை ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிப்பது, செய்யும் வேலையை சலிப்பின்றி உற்சாகத்துடன் செய்ய உதவும்.

அதிக வேலைப் பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கு தொடர்ச்சியாக வேலை செய்யாமல் சில நிமிடங்கள் எழுந்து நடந்துவிட்டு, சிறு இடைவேளை எடுத்துக் கொள்வது நம் வேலையை மகிழ்ச்சியாக செய்ய உதவும்.

அதேபோல் சக பணியாளர்களுடன் சுமுகமான நட்புறவை பேணுவதன் மூலம் ஆரோக்கியமான உறவுகள் கை கூடுவதுடன் அலுவலக சூழலையும் இலகுவாக்கும்.

புதிய திறன்களைக் கற்றல் மற்றும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினால் செய்யும் பணியில் சலிப்பு தட்டாமல் உத்வேகத்துடன் வேலை செய்ய முடியும். துறை சார்ந்த புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது நம் மீதான நம்பிக்கையை உயர்த்தும்.

சுய அங்கீகாரம் என்பது வேலையில் ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதற்கு அவசியம். அதற்கு சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட கொண்டாட மறக்க வேண்டாம். வெற்றிகளைக் கொண்டாடுவதுடன் நன்றி உணர்வையும் தாராளமாக வெளிப்படுத்துவதன் மூலம் செய்யும் வேலையில் சலிப்பு தோன்றாது. அதாவது மற்றவர்களின் சிறு உதவிகளுக்கும் நன்றி கூறும் பழக்கம் பணியிடத்தில் பரஸ்பர மரியாதையை உருவாக்கும். 

எதிர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடமிருந்தும், தேவையற்ற வதந்திகளிலிருந்தும் விலகியிருப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

வேலை சார்ந்த மன அழுத்தத்தை நிர்வகிப்பதும், ஆரோக்கியமான பணி கலாச்சாரத்தை உருவாக்குவதும் நம்மை வேலையில் ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வைக்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் இருந்து வேலை செய்பவர்களா நீங்கள்.. இந்த வாஸ்து மாற்றங்களை உடனே செய்யுங்க!
work life balance tips

வேலையில் ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதற்கு நேர மேலாண்மை என்பது மிகவும் அவசியம். அன்றைய தினத்திற்கான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்றினால் பதற்றத்தை தவிர்க்கலாம்.

பணிச்சூழலில் ஏற்படும் திடீர் மாற்றங்களை சவாலாகக் கருதாமல் வளர்ச்சிக்கான வாய்ப்பாக ஏற்றுக்கொள்வது வேலையில் உற்சாகத்துடன் செயல்பட உதவும்.

logo
Kalki Online
kalkionline.com