மனைவியை மகிழ்விப்பது எப்படி?

Happy wife
Happy wife

இன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பிரச்சனைகள் உருவாகுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. வீட்டிற்கு போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என்று ஆண்கள் கூறுவதை கேட்டிருப்போம். இதற்கு முக்கால்வாசி காரணம் ஆண்கள் நடந்து கொள்ளும் விதம்தான்.

மனைவியை மகிழ்விக்க இந்த 10 ஐடியாக்களை பின்பற்றலாம்...               

1. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது, மனைவியை போனில் அழைத்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை கூறி,  அதை வாங்கி வரவா? என கேட்பது அவர்களை மகிழ்விக்கும்.

2. மனைவியின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை ஞாபகத்தில் வைத்து கொண்டு பரிசுப் பொருள்களை வாங்கி கொடுத்து அசத்துங்கள். இதன் மூலம் உங்கள் மீது மரியாதையும் பாசமும் கூடும்.

3. புதிதாக ஒரு டிரெஸ் மனைவி அணிந்திருந்தால், உடனே பாராட்டு தெரிவியுங்கள். 'இந்த டிரஸ்-ல் நீ ரொம்ப அழகாக இருக்க' என்று சொல்லி பாருங்கள். உங்களுக்கு சிறப்பான கவனிப்பு கிடைக்கும்.

4. எப்பொழுதும் முகத்தை கோபமாக வைத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து வையுங்கள். ( சிரிப்பதற்கென்ன காசா பணமா..)

5. விடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து அசத்துங்கள். (சும்மா ஒரு நாள், சமையல் செய்றேன்னு சொல்லுங்க.. அதுலேயே அவங்க அசந்துடுவாங்க)

6. சமையலறை சாமான்களை கவனித்து தீரும் நிலையில் உள்ள மளிகைப் பொருட்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
விருந்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகள்!
Happy wife

7. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு நாளாவது ஓட்டல், சினிமா, பார்க், பீச் என்று வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள்.

8. எப்பவுமே அம்மாவை தொந்தரவு செய்து வேலைவாங்கும் குழந்தைகளை ஒரு இரண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள்.

9. முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? உனக்கு பிடிச்சிருக்கா? போன்ற கேள்விகளைக் கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.

10. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் பெரிதாக தோன்றாது.

(இதெல்லாம் தெரியாதா என்ன? சும்மா நினைவு படுத்தத்தான் மக்களே!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com