
குளிர்சாதன பெட்டியில் 'பனி' ஏன் சேர்கிறது? உண்மையான காரணம் என்ன? கொஞ்சம் வேலை செய்தால் இந்த பிரச்சனைகள் மறைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நவீன காலத்தில் அனைவரது வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி இருந்து வருகிறது. எந்த பொருட்களும் எளிதில் கெட்டு போகாமல் இருக்க இந்த குளிர்சாதன பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இதை மக்கள், உணவு, காய்கறி, பழங்கள், கூல்ட்ரிங்க்ஸ் என அனைத்தையும் சேகரிக்க பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வேலை பளுவில் அடிக்கடி நம்மால், குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்து கொண்டே இருக்க முடியாது. இப்படி இருக்கையில் பலர் வீடுகளில் உள்ள ஃப்ரிட்ஜ் ப்ரீசரில் ஐஸ்கட்டிகள் அதிகளவு சேர்ந்து எடுக்க முடியாத அளவிற்கு உறைந்து காணப்படும். இது ஏன் ஏற்படுகிறது. இதை தடுக்க என்ன வழி என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
கோடையில் குளிர்சாதன பெட்டியில் பனிக்கட்டி உருவாகும் பிரச்சனை உள்ளது. இது சில குளிர்சாதன பெட்டிகளில் நிரந்தர பிரச்சனையாக இருக்கலாம், குறிப்பாக ஒற்றை கதவு குளிர்சாதன பெட்டிகள் உள்ள வீடுகளில், ஐஸ் கட்டிகளை கைமுறையாக அகற்றும் போது, பனிமலை குளிர்சாதன பெட்டியின் செயல்திறனைக் குறைக்கும், கதவு சரியாக மூடுவதையும் தடுக்கலாம்.
குளிர்சாதன பெட்டி கதவை அடிக்கடி திறக்காதீர்கள்; கதவைத் திரும்பத் திரும்பத் திறப்பது குளிர்சாதன பெட்டிக்குள் சூடான காற்று நுழைய அனுமதிக்கும்.
குளிர்சாதன பெட்டி கதவில் உள்ள கேஸ்கட் (ரப்பர் சீல்) சேதமடைந்திருந்தால், குளிர்ந்த காற்று வெளியேறி ஈரப்பதம் உள்ளே நுழையும். எனவே அவ்வப்போது சுத்தமாக வைத்திருங்கள்.
குளிர்சாதன பெட்டியில் சூடான பொருட்களை வைக்க வேண்டாம்; அதை வெளியே எடுத்து நன்கு குளிர வைத்து, பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.
குளிர்சாதன பெட்டியை ஓவர்லோட் செய்ய வேண்டாம். தேவைக்கு அதிகமாக பொருட்களை வைப்பது காற்று சுழற்சியைத் தடுக்கும்.
(ஐஸ்கட்டி) பனி நீக்கும் முறையைப் பயன்படுத்தி, வாரத்திற்கு ஒரு முறை கைமுறை பனி நீக்கும் செயல்முறையைச் செய்யுங்கள்.
தெர்மோஸ்டாட்டை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை சரியான வெப்பநிலையில் வைத்திருங்கள்.
இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், குளிர்சாதன பெட்டியில் இருந்து பனியை அகற்றி, மின்சார பயன்பாட்டையும் குறைக்கலாம்.
இது குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்யும் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், அதன் ஆயுளையும் நீட்டிக்கும்.