குழாய்களில் படிந்துள்ள உப்பு போன்ற கரை மற்றும் துருக்களை எவ்வாறு தடுக்கலாம்?

Salt shore in pipes
Salt shore in pipes
Published on

நாம் ஒரு புது குழாயை வீட்டில் பொருத்திய பிறகு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நமக்கே ஆச்சரியம் வரும் அளவிற்கு அதன் நிறம் கொடூரமாய் மாறியிருக்கும். ஏன் அப்படி மாறுகிறது? அதை எப்படி தடுக்கலாம்? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

ஸ்டீல் குழாய்கள், அதன் நீடித்த தரத்திற்காக பல வீடுகளில் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது. அவை பளபளப்பாக இருந்தாலும் காலப்போக்கில் கறை மற்றும் அழுக்குகள் அதிகமாக அவற்றில் படிந்துவிடுகின்ற்றன. பெரும்பாலும், ஈரப்பதம், காற்று மற்றும் இரசாயன கலவையின் விளைவுகளும் சில நேரங்களில் துருபிடிப்பதற்கு வழிவகுக்கும். இந்த கறைகளை எவ்வாறு திறம்பட சுத்தம் செய்வது மற்றும் அவை ஏற்படாமல் தடுப்பது என்பதை புரிந்து கொண்டாலே குழாயின் ஆயுளையும் தோற்றத்தையும் நீண்ட நாட்கள் நிலைத்து வைக்க முடியும்.

வீட்டில் உள்ள பொருட்களாலே எவ்வாறு சுத்தம் செய்யலாம்?

ஸ்டீல் குழாய்களில் இருக்கும் கடினமான கறை மற்றும் அழுக்குகளை அகற்ற பல வீட்டு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பேக்கிங் சோடா மற்றும் வெள்ளை வினிகர்(White Vinegar) ஆகியவை சுத்தம் செய்வதற்கான சக்திவாய்ந்த கலவையாகும். இவற்றை ஒன்றாக கலந்து உபயோகிக்கும் போது, துரு மற்றும் அழுக்கை அவை சுலபமாக நீக்குகின்றன. முதலில் இந்த கலவையை கறை படிந்த இடத்தில் தடவி, சுமார் 15-20 நிமிடங்கள் காய விட்டு, பின்னர் ஒரு ப்ருஷை(Brush) பயன்படுத்தித் தேய்த்து கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு மற்றொரு பயனுள்ள பொருட்கள். எலுமிச்சை சாற்றின் அமிலத்தன்மை(Acid) துருவை நீக்க உதவுகிறது, அதே நேரத்தில், உப்பின் சிராய்ப்பு தன்மை கறைகளை துடைக்க உதவுகிறது. இந்த கலவையை கறை படிந்த இடத்தில் தடவி, காட்டன் துணி அல்லது பிரஷ் மூலம் மெதுவாக தேய்த்து விடலாம்.

டிஷ்(Dish) சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரால் ஸ்டீல் குழாய்களை சுத்தம் செய்வதன் மூலம் அதில் அழுக்கு படிவதை தடுக்க முடியும். சில கடினமான கறைகளுக்கு, ஹைட்ரஜன் பெராக்சைடை(hydrogen peroxide) சிறிது பேக்கிங் சோடாவுடன் கலந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கி, அதை கறை படிந்த இடத்தில் தடவி, காய விட்டு, பின்னர் ஸ்க்ரப்(Scurb) செய்து துடைத்து விடலாம்

இது வருவதற்கான காரணங்கள்

ஸ்டீல் குழாய்களில் உள்ள கடினமான கறைகளுக்கு முதன்மையான காரணம் ஆக்சிஜனேற்றம்(Oxidation) ஆகும், இது ஸ்டீல், ஈரப்பதம் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையே இயற்கையாக நடக்கும் ஒரு இரசாயன நடவடிக்கையாகும். இந்த தாக்கம் துரு உருவாவதற்கு வழிவகுக்கிறது. சில நேரங்களில் (சோப்பு அல்லது சில கனிமங்கள்(Minerals) நிறைந்த கடினமான நீர்(Hard Water) போன்றவையும் கறை படிவதற்கு பங்களிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் 8 பயிற்சிகள்!
Salt shore in pipes

தடுப்பு நடவடிக்கைகள்

ஸ்டீல் குழாய்களில் கறை மற்றும் அழுக்கு குவிவதை தடுக்க, குழாய்களை முடிந்தவரை உலர வையுங்கள். காரணம், சுத்தம் செய்த பிறகோ அல்லது நீர் படர்ந்த பிறகோ, துரு உருவாவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க குழாய்களை உலர(Dry) விட வேண்டும்.

பின் வழக்கமான பராமரிப்பு ரொம்பவே முக்கியமானது. அழுக்கு அல்லது துருவின் ஆரம்ப அறிகுறிகளை கண்ட பிறகு, அதை அகற்ற ஈரப்படுத்தப்பட்ட துணியால் குழாய்களை அவ்வப்போது துடைத்து விடுங்கள். ஒரு பாதுகாப்பு படிமம் அல்லது எண்ணெய் போன்ற பொருளை ஸ்டீல் குழாய்களின் மேல் ஒரு மெல்லிய அடுக்கு போல தடவினால், அது அதன் மேல் படும் நீர் துளிகளுக்கு ஒரு தடை போல் இருந்து, ஆக்சிஜனேற்றம்(Oxidation) நடைபெறுவதைத் தடுக்கிறது.

குழாய்கள் அமைந்துள்ள பகுதிகளில் சரியான காற்றோட்டத்தை உறுதி செய்வதன் வழியாக ஈரப்பதத்தின் அளவைக் குறைத்து துரு ஏற்படுவதைத் தடுக்க முடியும். கூடுதலாக, உங்கள் வீடுகளில் கடினமான நீர் இருந்தால் நீர் மென்மையாக்கிகளை(Water Softners) பயன்படுத்தலாம், ஏனெனில் இது கறையை ஏற்படுத்தும் கனிம(Minerals) வைப்புகளை குறைக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com