எவ்வளவு நேரம் படித்தாலும் சிறிது நேரம் கழித்து அந்த குழந்தைகளிடம் கேட்கும்பொழுது, ‘மறந்திருச்சு’ என்ற பதில் அநேகமாக நிறைய குழந்தைகளிடமிருந்து வருகிறது. அந்த வகையில், குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்குமான வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. ஏரோபிக் பயிற்சிகள்: விறுவிறுப்பான நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது போன்ற ஏரோபிக் பயிற்சிகள் செய்வதால் இதயத் துடிப்பு அதிகரித்து மூளைக்கு அதிக ஆக்சிஜன் கிடைப்பதன் காரணமாக குழந்தைகளின் ஞாபக சக்தி மற்றும் அறிவுத்திறன் மேம்படுகிறது என்பதை ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
2. யோகாசனம்: உடல் சார்ந்த தோரணைகள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவற்றை இணைக்கும் யோகாசனம் செய்வதால் மன நலன் அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, மனச் சோர்வை குறைத்து ரிலாக்ஸ் ஆன உணர்வை குழந்தைகளுக்குக் கொடுக்கிறது.
3. வலுப் பயிற்சி: வெயிட் லிஃப்டிங் அல்லது ஸ்குவாட்ஸ் மற்றும் புஷ்-அப் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது குழந்தைகளின் மூளை திறனை அதிகரித்து ஞாபக சக்தியை மேம்படுத்தி அறிவுத்திறன் செயல்பாட்டைக் கூட்டுகிறது.
4. ஆடல்: ஆடல் அதிலும் புதிய நடனங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பொழுது புதிய ஸ்டெப்புகளை ஞாபகம் வைத்துக்கொள்வது சவாலாக அமையும் என்பதால் இது ஞாபக சக்தி மற்றும் ஒருங்கிணைப்புத் திறனை அதிகரித்து கவனிப்புத் திறன் மற்றும் மூளையின் பல்வேறு பகுதிகளை ஆக்டிவேட் செய்கிறது.
5. தாய் சீ (Tai Chi): ஆழமான சுவாசித்தலுடன் கூடிய பொறுமையான பல்வேறு அசைவுகள் கொண்ட ஒரு பயிற்சியான தாய் சீ குழந்தைகளின் கவனிப்புத் திறனை அதிகரித்து ஞாபக சக்தியை மேம்படுத்தி உடல் மற்றும் மனம் சார்ந்த அழுத்தங்களைக் குறைத்து மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
6. புதிர்கள் மற்றும் மூளை விளையாட்டுகள்: உடல் ரீதியாக வொர்க்-அவுட் செய்யாவிட்டாலும் கிராஸ் வேர்ட், சுடோகு போன்ற புதிர்களை தீர்த்து வைப்பது அல்லது மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவதால் ஞாபக சக்தி திறன் அதிகரிப்பதோடு பிரச்னையை தீர்க்கும் திறனும் அதிகரிக்கிறது.
7. நடைப்பயிற்சி: நடைப்பயிற்சியால் சுற்றியுள்ள சூழல் காரணமாக மன அழுத்தம் குறைந்து அறிவுத்திறன் செயல்பாடு அதிகரித்து ஞாபக சக்தி மேம்படுகிறது.
8. நீச்சல்: நீச்சல் அடிக்கும் பொழுது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அதிகரிப்பதன் காரணமாக மூளை செல்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு மேலும் என்டார்பின் ஹார்மோன்கள் வெளியிடப்பட்டு மன அழுத்தம் குறைவதோடு, கவனிப்புத் திறனும் ஞாபக சக்தியும் குழந்தைகளுக்கு அதிகரிக்கிறது.
மேற்கூறிய 8 பயிற்சிகளை குழந்தைகள் தொடர்ந்து செய்து வர அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பதில் சற்றும் ஐயமே இல்லை.